விஷம் எத்தனை வகை? எது விஷம்?

poison

Research Article written by london swaminathan

 

Date: 26 May 2016

 

Post No. 2842

 

Time uploaded in London :– 18-34

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Potassium-cyanide-phase-I-unit-cell-3D-SF

சம்ஸ்கிருத மொழியில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை என்பது சம்ஸ்கிருதம் கற்றோருக்குத் தெரியும். விஷத்தில் ஐந்து வகை, உபவிஷத்தில் ஐந்து வகை என்று பிரித்து வைத்திருக்கின்றனர்! காலப்போக்கில் அதன் தன்மை என்ன? ஏன் இத்தனை வகை என்பதைக் கேட்டால்கூட யாருக்கும் தெரியாது. அவ்வப்போது புராணக்கதைகளில் ஆலகால விஷம், காலகூட விஷம் என்று படிக்கிறோம், தேவர்களும், அசுரர்களும், அமிர்தம் எடுப்பதற்காக, கடலைக் கடைந்த போது எழுந்த விஷம் இது என்றும், அதை, சிவன் விழுங்கும்போது, பார்வதி கழுத்தைப் பிடித்து தடுக்கவே அவருக்கு திரு நீல கண்டன் என்ற பெயர் வந்ததாகவும் மட்டும் அறிவோம்.அவ்வளவுதான்.

 

விஷத்தை வைத்து பல பொன்மொழிகளும் உண்டு.

முதலில் விஷத்தின் வகைகளைக் காண்போம்:–

ஸ்ருங்கி ச காலகூடஸ்ச முஸ்தகோவத்சநாபக:

சங்ககர்ணாதி யோகோயம் மஹாபஞ்ச விஷாமித:

பொருள்:ஸ்ருங்கி, காலகூடம், முஸ்தக:, வத்சநாபக:, சங்ககர்ணி என்ற ஐந்தும் பெரிய விஷங்களாகும்.

அர்கக்ஷீரம் ஸ்னுஹிக்ஷீரம் ததைவ கலிஹாரிகா

தத்தூர: கரவீரஸ்ச பஞ்சசோபவிஷா: ஸ்ம்ருதா:

பொருள்:-

துணை விஷங்கள் ஐந்து:- அர்கக்ஷீரம், ஸ்னுஹிக்ஷீரம், கலிஹாரிகா, தத்தூர:, கரவீர:

விஷம் பற்றிய பொன்மொழிகள்:–

அதிபயங்கர விஷம்

ந விஷம் விஷமித்யாஹு ப்ரம்மஸ்வம் விஷமுச்யதே

விஷமேகாகினம் ஹந்தி ப்ரம்மஸ்வம் புத்ர பௌத்ரகம்

பொருள்:–

விஷம் என்று சொல்லப்படுபவை எல்லாம் விஷமல்ல; பிராமணனுடைய சொத்துதான் பிறருக்கு விஷம்; ஏனெனில் விஷம் ஒருவரைத்தான் கொல்லும்; பிராமணன் சொத்தை அபகரிப்பவன் அடியோடு அழிவான். புத்ரன், பௌத்ரன் அதாவது மகன், பேரன் எல்லோரையும் அந்த விஷம் அழித்துவிடும்.

சிவன் சொத்து குல நாசம் – என்ற பழமொழியும் ஒப்பிடற்பாலது.

தமிழில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. அவைகளில் பெரும்பாலும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலதானம்) அல்லது தேவதானம் (கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலதானம் பற்றியவையே). அவற்றின் இறுதியிலும் அந்த சொத்துக்களை அபகரித்தால் என்ன நேரிடும் என்ற எச்சரிக்கைகள் உள்ளன.

கிழவனுக்கு இளம் மனைவி விஷம்

அனப்யாசேன விஷம் சாஸ்த்ரம்

அஜீர்ணே போஜனம் விஷம்

தரித்ரஸ்ய விஷம் கோஷ்டி

வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

படிக்காதவனுக்கு சாஸ்த்ரம் (நூல்கள்) விஷம்; அஜீர்ணக் கோளாறு உடையவனுக்கு சாப்பாடு விஷம்; ஏழைக்கு பசு தானம் விஷம்; கிழவனுக்கு இளம் மனைவி விஷம்.

Poison-Center-Mr-Yuck

சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணியில், விஷ புஷ்பங்கள், விஷக் கிழங்குகள், விஷக் கனிகள், விஷப் பால்கள், விஷப் பிசின்கள், விஷ அன்னத்தின் (உணவு) லட்சணம், விஷ அன்னத்தைப் (உணவு) சோதிக்கும் முறை ஆகியன பற்றிய விவரங்கள் உள.

காகத்துக்கு சோறு போடுவது ஏன்?

இந்துக்கள், காகம், நாய் முதலியவற்றுக்கு சோறிட்டு உண்டதால், உணவில் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ விஷம் கலக்கப் பட்டாலும், அந்த மிருகங்கள், பறவைகளின் உடல்நிலையை வைத்துக் கண்டுபிடித்து வந்தனர்.

சம்ஸ்கிருத்தில் விஷம் பற்றிப் பல பழமொழிகள் உண்டு:–

விஷத்தை மருந்து ஆக்குவது கடினம் (துஷ்கரம் விஷம் ஔஷதீ கர்தும் – சூத்ரகனின் மிருச்ச கடிக நாடகம்

கிசுகிசுப்பேச்சு விஷம் ஆகும் (த்வேஷாக்யானம் விஷம் பவேத் – பிருஹத் கதா கோச)

தங்கக் கோப்பையில் கொண்டுவதாலும் விஷம், விஷம்தான்; அமிர்தமாக மாறிவிடாது (ந ஹேமகும்பே  விஷம் அம்ருதம் பவேத்)

விஷத்துக்கு விஷமே முறிவு (விஷஸ்ய விஷம் ஔஷதம்) – கஹாவத்ரத்னாகர்

விஷம் வைத்த கை உன் கையே ஆனாலும் வெட்டப் படவேண்டியதே (ஸ்வஹஸ்தோபி விஷதிக்த:சேத்ய:)- சாணக்கிய நீதி சாஸ்த்ரம்

 

–சுபம்–

Leave a comment

1 Comment

  1. Reblogged this on Gr8fullsoul.

Leave a comment