நாக ராணி: சிந்துவெளி முதல் சபரிமலை வரை


Minoan Snake Goddess 1600 BC

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாக ராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் தெரிவிக்கின்றன.
உலகத்தில் பாம்புகளைப் போற்றாத பழைய நாகரீகங்களே இல்லை. வேத காலம், சிந்து சமவெளி, கிரேக்க, எகிப்திய, சுமேரிய ,பாபிலோனிய, மாயா பண்பாடுகள் அனைத்திலும் நாக உருவில் தெய்வங்கள் உண்டு. ஆயினும் இந்துக்களுக்கு இதில் மிகவும் சிறப்பான இடம் இருக்கிறது. வேத காலத்தில் போற்றப்பட்ட நாகங்களுக்கு இன்றுவரை கோவில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். உலகில் வேறு எங்கும் காணாத புதுமை என்னவென்றால் உயிருள்ள பாம்புகளுக்கே நாக பஞ்சமி அன்று பூஜையும் செய்கிறோம். எல்லா இந்து தெய்வங்களும் பாம்புடன் சம்பந்தப்பட்டவை.

Indus Valley Snake God

ஆர்தர் ஈவான்ஸ் என்ற தொல்பொருள் துறை நிபுணர் கிரீட் தீவில் நாசோஸ் என்னும் நகரில் பெரிய மினோவன் நாகரீக அரண்மனையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்தார். அதில் ஒரு பெண் இரு கைகளிலும் பாம்புடன் நிற்கிறார். அவர் தெய்வமா பூசாரினியா என்று தெரியவில்லை. அந்தச் சிலை மேலை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது.

மானசா தேவி, நாகராஜன், நாக யக்ஷி முதலிய பல வடிவங்களில் சபரிமலை முதல் சிந்து சமவெளி வரை கோவில்கள் அல்லது பாம்பு ராணி சிலைகள் இருக்கின்றன. அன்று போல் இன்றும் நாகங்களைத் தெய்வமாக வழிபடும் தொடர்ச்சியையும் காண்கிறோம்.

Naga Yakshi

அயர்லாந்தில் ஹெகடெ (சக்தி என்ற சொல்லின் மருவு) என்ற நாகராணியை வணங்கினர். சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன் கபஜா என்னும் இடத்தில் இரண்டு கைகளில் இரண்டு பாம்புகள் உடைய தெய்வத்தைக் காணலாம். இதே தெய்வம் நாக யட்சி என்ற பெயரில் கர்நாடகம் கேரளம் முழுதும் உள்ளன. ஒரிசா, வங்காளம் ஆகியவற்றில் மானசா தேவி இதே உருவத்தில் வழிபடப்படுகிறாள்.

அதிசயச் செய்தி: சுமேரியாவில் தமிழ்?

ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும் பலவித தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.

அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.

வேதத்தில் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதி மறைந்து 5000 ஆண்டுகள் ஆகியதை பாபா அணுசக்தி ஆய்வு மையமும் அமெரிக்க விண்வெளி நாஸா- வும் உறுதி செய்ததாலும் வேத காலத்தின் பழமை உறுதியாகிறது.

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் Serpent Queen: Indus Valley to Sabarimalai எழுதியுள்ளேன், பெயர்களின் சரியான ஸ்பெல்லிங் முதலியன தேவைப்பட்டால் ஆங்கிலக் கட்டுரையை வாசித்து கூகிள் செய்தால் மேலும் ஆழமான தகல்களைப் பெறலாம்)

சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.

இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்.

5000 ஆண்டுகளுக்கு முன் இப்படி சுமேரியாவில் தமிழும் சம்ஸ்கிருதமும் இருப்பதை நோக்கும் போது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்ற பழைய கோட்பாடும் உயிர் பெறுகிறது. இத்துடன் இணைத்திருக்கும் படங்களைக் காண்போருக்கு, உண்மைகள் சொல்லாமலே விளங்கும்.

கீழ்கண்ட எனது கட்டுரைகளையும் படித்தால் முழு சித்திரம் கிடைக்கும்:

1. Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu
2. The Sugarcane Mystery: Ikshwaku Dynasty and Indus Valley
3. Mysterious link between Karnataka and Indus Valley
4. Vishnu in Indus valley seal
5. Indra on Airavata in Indus valley)
*******************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: