தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3

 

Picture shows Kannaki’s cooking for Kovalan

தொல்காப்பியத்தின் துவக்க வரியே நெருடலாக இருக்கிறது. “எழுத்தெனப்படுவது” என்று செயப்பாட்டு (வினை) பொருளில் –Pseudo Passive voice–துவக்குகிறார். இதை பொருளதிகாரத்திலும் காண்கிறோம்.உலகத்தில் எந்த நூலும் இப்படி துவங்குவது இல்லை.

சொல்லப்/ பட்டன/ படும்/ பட்ட (3-564-1, 651-1; 3-63-22, 68-8, 253-2,). இது போல மணிமேகலை-24,30. திருக்குறளிலும் ‘கொல்லப்படு’ என்ற சொல் வருகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் காலத்தைக் காட்டுவதோடு மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை என்பதையும் காட்டும். புரிதல், புரிந்தோள் என்பன தொல்காப்பியத்தோடு சிலப்பதிகாரம், மணிமேகலையில் மட்டூமே வரும்.

ஆகும்: இந்தச் சொல் மூன்று அதிக்கரங்களிலும் நிறைய இடங்களில் வரும். மேலும் சம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஆசிரியர் மூன்று அதிகரங்களையும் எழுதாவிடில் இப்படி இருக்கமுடியாது. புறநானூற்றில் மூன்றே இடங்களில் மட்டுமே வருகிறது.

எண்ணுங்காலும்: இது தொல். இல் 2-47-1 ல் உள்ளது. இதைத் தவிர திணைமாலை ஐம்பதில் (150-2) மட்டுமே வருகிறது. இப்படிக் ‘கால்’ விகுதியுடன் வருவது சங்க காலத்தில் மிகமிகக் குறைவு. கலி., குறள் போன்ற நூல்களில்தான் அதிகம்.

எப்பொருள்: இது சொல் அதிகாரத்துக்குப் பின்னர் குறள் முதலான பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளது. மேலும் ‘எப்’ துவக்கத்துடன் சங்க இலக்கியத்தில் சொற்களே இல்லை.

என்ப: தொல்காப்பியருக்கு மிகவும் பிடித்த இச்சொல் மூன்று அதிகாரங்களிலும் பரவலாகக் காணப்படுவதால் ஒரே ஆசிரியர், ஒரே காலத்தில் எழுதியதே என்பதைக் காட்டும்.

என்மனார்: முன்னர் குறிப்பிட்டது போல 60–க்கும் மேலான இடத்தில் வரும் இச்சொல்லும் 3 அதிகாரங்களிலும் காணப்படுகிறது. இது தவிர கலித்தொகை, குறுந்தொகையில் இரண்டே இடங்களில்தான் வருகிறது.

என்றா: இந்தச் சொல்லும் 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை.

ஏனை, ஏனவை: ஏனவை என்ற சொல்லை 1, 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. ஏனை, என்ற சொல் குறிஞ்சிப்பாட்டில் ஒரு இடத்தில் மட்டுமே வரும். தொல். இல் எல்லா அதிகாரங்களிலும் காணப்படுகிறது.

எண்கள்: ஐந்து, எட்டு, ஐம்பது, ஐயீர் ஆயிரம் போன்ற எண்களை 3 அதிகாரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார். உயிர் எழுத்துக்களில் துவங்கும் சொற்களில் இருந்து மட்டுமே எடுத்துகாட்டுகளைக் கொடுத்தேன். ஏணையவற்றைக் கொடுத்தால் கட்டுரை நீளும்.

எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

எள் என்ற வித்தைக் கொண்டு பல வினைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவை புற நானூற்றில் குறைவாகவும், பிற்காலத்தில் அதிகமாகவும் புழக்கத்தில் உள்ளன.எள்ளின், எள்ளாமை, எள்ளாது— குறள் முதலிய நூல்களில் மட்டுமே வரும். எள்ளின் என்ற சொல் தொல். 3-109-7 தவிர குறள், கலி. மணி.யில் மட்டுமே வருகிறது.

‘இன்’– னில் முடியும் சொற்கள் ஒன்றின், நுவலின், நீங்கின், மறுப்பின், மறைப்பின் முதலியன தொல். தவிர குறள், சிலம்பு முதலிய சங்கம் மருவிய கால நூல்களிலேயே காணலாம்.

Continued in Part 4; contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: