தமிழ் முனிவர் அகஸ்தியர்

Agastya Rishi Statue from Indonesia;location-London V&A Museum.

 

By ச.நாகராஜன்

தமிழ் இலக்கணம் வகுத்த மஹரிஷி

தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம்.

ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை  உபதேசித்தவர்.ஹயக்ரீவரிடமிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தைப் பெற்றவர். சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர். இவரது மனைவி லோபாமுத்ரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை.

 

அகத்தியரின் நாடி ஜோதிடம்

தமிழ் சித்தர்களில் மிகப் பெரும் சித்தர் அகத்தியர். அகத்தியர் பெயரால் உலவி வரும் ஏராளமான சித்த மருத்துவ நூல்கள் அவரது வைத்திய புலமையைப் பறை சாற்றும். அகத்தியர் சிறந்த ஜோதிட மஹரிஷியும் கூட. குறிப்பாக நாடி ஜோதிடத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது.

 

பனை ஓலைச் சுவடிகளில் உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகங்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பலன்களை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை சொல்வதோடு அவர்களின் முன் ஜென்ம வரலாறும் சுருக்கமாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது.

 

நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பெருவிரலும் பெண் என்றால் இடது கைப் பெருவிரலும் காட்டப்படவேண்டும். அகத்தியரின் நாடி ஜோதிட சுவடிகளில் தம்மிடம் உள்ள சுவடிகளில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதக பலன் இருக்கிறதா என்று ஜோதிடர் கண்டு பிடிப்பார். ரேகைக்கு விதவிதமான நல்ல பெயர்களும் உண்டு (முக்கமல சங்கு ரேகை என்பது போல!)முன் ஜென்மத்தில் செய்த தர்மம் (நல்ல காரியம்) எவ்வளவு, கர்மம் (தீய காரியம்) எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும் (தர்மம் 9 கர்மம் 1- நல்ல ஜாதகர்) இதைத் தொடர்ந்து ஜாதகரின் முன் ஜென்மமும் விளக்கப்படும். பின்னர் ஜாதகர் பிறந்த வருடம், ஜாதகம் தெளிவாகச் சொல்லப்படும். பின்னர் பலன்களும் ஆயுள் குறித்த விவரங்களும் வரும். பரிகாரம் தேவையெனில் அவையும் கூட விளக்கப்படும்.

ஆங்கிலேயர் ஒருவரின் பெயரைப் பற்றிச் சுவடி குறிப்பிடும் போது முழத்தில் பாதி இவர் பெயர் என வர அவர் ஜான் (முழத்தில் பாதி சாண்) என்று சொல்லப்பட்ட நேர்த்தியும் நாடி ஜோதிடத்தில் தான் உண்டு!

இப்படிப்பட்ட அகத்தியரின் நாடி ஜோதிடம் உள்ளிட்டவற்றை ரஷ்யர்கள் மொழிபெயர்த்து ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு ஜாதகரின் குண நலன்கள், அவரது வெற்றிகள், தோல்விகள், மனைவி மக்கள், பதவி, நோய்கள் என அனைத்தையும் அகத்தியரின் சுவடிகள் தெரிவிக்கும் போது பிரமிப்பின் உச்சியைத் தான் எட்ட வேண்டியிருக்கும்!

 

அகத்தியரின் பிறப்பு

அகத்தியரைப் பற்றிய பிறப்பு பற்றி மஹாபாரதம் ஆதி பர்வம் கூறுவதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

பிரம்மாவினுடைய புத்திரர் மரீசி. மரீசியினுடைய புத்திரர் காஸ்யபர். காஸ்யபருக்கு தக்ஷப்ராஜாபதியின் புத்திரியாகிய அதிதி என்பவளிடத்தில் பன்னிரெண்டு புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்களுக்கு பன்னிரெண்டு ஆதித்தியர்கள் என்று பெயர். அப்பன்னிருவரில் மித்திரர் என்பவர் ஒருவர். அந்த மஹாத்மாவுக்கு ஊர்வசியின் காரணமாக விந்து வெளியேற அதைக் கும்பத்தில் ஏந்தினார்.அதிலிருந்து அகஸ்தியர் உண்டானார். இந்தக் காரணத்தினால் அவருக்கு கும்ப சம்பவர் என்றும் பெயருண்டு.

Statue of Agastya from Prambanan, Indonesia (Wikipedia picture)

 

அகத்தியரின் மனைவி

அவரது மனைவி லோபாமுத்ரை பற்றிய கதையும் ஒன்று உண்டு. ஒரு சமயம் இவரது முன்னோர்கள் குழியில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் காரணத்தை அகஸ்தியர் வினவ அவர்கள்,”உனக்குக் குழந்தைகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்” என்று பதில் தந்தனர். இதனால் நல்ல மனைவியைத் தேடி அலைந்த அகஸ்தியர் யாரும் அகப்படாததால் ஜீவராசிகளின் சகல நல்ல அம்சங்களையும் ஒருங்கு திரட்டி ஒரு அழகான பெண்ணை சிருஷ்டித்தார். அந்தச் சமயம் விதர்ப்ப தேசத்து அரசன் குழந்தை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அந்த சிசுவை மகளாகும் படி அகஸ்தியர் அனுக்ரஹித்தார். நாளுக்கு நாள் அந்தக் குழந்தை அழகுடன் மிளிர்ந்து வளர்ந்தது. அவளுக்கு அந்தணர்கள் லோபாமுத்திரை என்று பெயரிட்டனர். அவளையே தனக்கு கன்னிகாதானம் செய்விக்கும்படி விதர்ப்ப ராஜனைக் கேட்க அவனும் சம்மதித்தான்.அகஸ்தியருக்கும் லோபாமுத்ரைக்கும் திருதா

ஸ்யூ என்ற புத்திரர் ஜெனித்தார்.இப்படி ஒரு சத்புத்திரன் பிறந்ததால் அகஸ்தியரின் முன்னோர்கள் தாம் விரும்பிய நற்கதியை அடைந்தனர்.

பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் நடந்த விவாஹத்தின் போது தேவர்கள் அனைவரும் ஹிமகிரியில் கூட வடகோடி உயர்ந்து தென்கோடி தாழ்ந்தது. அதை சரிப்படுத்த ஈஸ்வரன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப அன்றிலிருந்து அகஸ்தியர் பொதியமலை வாசியானார். இந்த விருத்தாந்தத்தை ஸ்கந்த புராணம் விரிவாகக் கூறுகிறது.

ஆக இப்படி அகஸ்தியரைப் பற்றிய ஏராளமான தகவல்களை நமது புராணங்களிலும் ஜோதிட நூல்களிலும் சித்த மருத்துவ நூல்களிலும் நாம் படித்து அகத்தியரின் பெருமையை உணரலாம்.

************

My brother S NAGARAJAN is writing a series about all the Great Seers (Rishis) of India. He has already written about the 27 stars and other topics in Astrology. It is all based on science or Hindu scriptures.Next article is about Varahamihira in two parts. All his articles are in Tamil. If you need English translation, please let us know.

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: