பஹ்ரைன் அதிசயங்கள்

Picture: Middle East Pasupati Seal

 

பஹ்ரைன் நாட்டின் பழங்காலப் பெயர் தில்முன். இதற்கும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் வணிகத் தொடர்புகள் இருந்ததன. சிந்துவெளி முத்திரைகள் பஹ்ரைன் பகுதியிலும் அவர்களுடைய முத்திரைகள் சிந்துவெளியிலும் கிடைத்துள்ளன. இன்று வளை குடா நாடுகளில் நமது இந்திய ஊழியர்கள் அதிகமானோர் வேலை செய்கின்றனர். இந்தத் தொடர்பு 4000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்பதை அறிகையில் வியப்பு மேலிடுகிறது. முற்கால பஹ்ரைன் நாடு பல மர்மங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியது.

 

இந்த தில்முன் நிலப்பரப்பை புனித பூமி என்றும் தூய நிலப் பரப்பு என்றும் பழங்கால நூல்கள் வருணிக்கின்றன. இதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் இங்கு ஏராளமான புதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. உலகின் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இன்றும் ஆர்வத்தோடு மேலும் மேலும் ஆராய்ந்து வருகின்றனர். இது இந்தியாவுக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இதுவரை சிந்துவெளி முத்திரைகளை யாராலும் படிக்கமுடியவில்லை. ஒவ்வொருவரும் அந்த முத்திரைகளுக்கு மனம் போனபோக்கில் வியாக்கியானம் செய்து வருகின்றனர். ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அங்குள்ள படங்களுக்கும் பஹ்ரைன் படங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

 

உலக மஹா இடுகாடு

பஹரைனில் மிகவும் வியப்பான விஷயம் அங்குள்ள கல்லறைகள்தான். சுமார் 350,000 கல்லறைகள் இருகின்றன. உலகில் இவ்வளவு அதிகமான கல்லறைகள் வேறு எங்கும் இல்லை. இதில் பெரும்பாலானவற்றைத் தோண்டி உள்ளேயிருந்த பொருள்களைக் கொள்ளை அடித்துவிட்டனர். இருந்தபோதிலும் இன்னும் பல, யார் கையும் படாமல் இருப்பதால் 5000 ஆண்டுகளுக்கு முன் அங்கே வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை அறிய முடிகிறது

கல்லறைகள் சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. பெரியவை 4×9 மீட்டர் பரப்புடையவை

பார்பர் என்னும் இடத்தில் ஒரு பழைய கோவில் இருக்கிறது. இது சுமேரிய நீர்க் கடவுள் எங்கை (கங்கை) மற்றும் அவருடைய மனைவியுடையது.

 

குழந்தை சமாதிகள்

கல்லறைகளின் எண்ணிக்கையோடு வேறு ஒரு விஷயமும் ஆராய்ச்சியாளரை வியப்புக்கு உள்ளாக்கிவருகிறது. அது குழந்தை சமாதிகளின் எண்ணிக்கை ஆகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும்1.6. குழந்தை என்னும் விகிதத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு குழந்தைகள் இறந்தது எப்படி? என்பதே கேள்வி. மத்தியக் கிழக்கில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததை யூத மத நூல்களும் பைபிளும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பினீசியர்கள் மலிக் என்னும் தெய்வத்துக்கு நரபலி கொடுத்ததும் தெரியும் இந்தக் கல்லறைகள் நரபலியைக் குறிக்கின்றனவா?

Pictures: Bull Men, Monkey Gods, Sri Chakra like flowers?

 

பாம்பு புதையல் கல்லறை

மற்றொரு மர்மம் பாம்புக் கல்லறை ஆகும். பாம்புகளை அழகாகப் பதப் படுத்தி புதைத்துள்ளனர். இது தெய்வப் பாம்பா? எதற்காக இப்படிப் புதைத்தனர் என்பதும் தெரியவில்லை. தேள் பற்றிய விஷயங்களும் மர்மமாக உள்ளது. பல முத்திரைகளில் தேள் காணப் படுகிறது. இதே போல எகிப்திலும் சிந்து வெளியிலும் தேள் முத்திரைகள் கிடைத்தன. தேளுக்கும் பெண் தெய்வத்துக்கும் செக்ஸுக்கும் (பாலியல்) தொடர்பு உண்டு. இதுவும் ஆராய்ச்சியாளரின் கவனத்தை ஈர்த்தது.

குரங்கு மர்மம்

மத்தியக் கிழக்கு முழுதும் வாலுடன் நிமிர்ந்து நிற்கும் ஒரு குரங்கு உருவம் நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும். சில காட்சிகள் ராமயணத்தில் வரும் அனுமன் போல இருக்கிறது. ரிக்வேதத்திலும், மகாபாரதத்திலும் வ்ருஷகபி என்னும் குரங்குத் தெய்வம் வருகிறது. இந்தக் குரங்கு வ்ருஷகபியா? ராமாயண ஹனுமனா? ஆராயப்பட வேண்டிய விஷயம்.

 

வேறு பெயர்கள்

பஹ்ரைன் நாட்டின் வேறு பெயர்கள்: தைலோஸ்=இது கிரேக்கர்கள் சூட்டிய பெயர்;ஆர்ட்வஸ்=மயான பூமி, சாம்பல் பூமி; அவால்/அவல்= மாட்டுத் தலை உடைய ஒரு தெய்வத்தின் பெயர். ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றும் வரை இதுவே பஹ்ரைனின் பெயர்; தற்காலப் பெயர் பஹ்ரைன்=இரு கடல்கள்

எனது கருத்து: தைலம், திலம் என்பதெல்லாம் எள், எண்ணெய் என்பதன் சம்ஸ்கிருதப் பெயர். இறந்தவர்களை எரித்துப் புதைத்து எள்ளும் நீரும் இரைத்த பூமி என்னும் பொருளில் இப்படி தில முனை என்று அழைத்தனரோ?

Picture: Monkey figures, Gods on Vahanas

 

பஹ்ரைன் நாட்டின் மனாமா தேசிய மியூசியத்தில் நிறைய தொல்பொருட் சின்னங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தீவிரவாத முஸ்லீம்கள் இதை எதிர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்லாம் தோன்றுவதற்கு முன் இருந்த கலாசாரத்தைப் பாதுகாத்து வைப்பது பிடிக்காது. ஆப்கானிஸ்தானத்தில் இருந்த உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையை, 2200 ஆண்டு பழமையான சிலைகளை தீவிரவாதிகள் அழித்தது உங்களுக்கு நினைவிருக்கும். நல்ல வேளையாக பஹ்ரைனில் இதுவரை நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது.

தில்முன் (பஹ்ரைன்) பற்றி 4000 ஆண்டுப் பழமையான க்யுனிபார்ம் கல்வெட்டில் அந்த நாட்டின் புகழ் பாடப்பட்டிருக்கிறது: “ இது புண்ய பூமி. இது தூய பூமி. இங்கே அண்டங் காக்கைகள் கத்தாது. சகுனம் காட்டும் பரவைகள் தீய நிமித்தங்களைக் காட்டாது. சிங்கங்கள் கொல்லாது. அண்டங்காக்கைகள் ஆட்டுக் குட்டிகளைக் கொத்திக் கொண்டு போகா. குழந்தைகளைக் கிழித்துப் போடும் காட்டு நாய்களும் இல்லை. புறாக்கள் தலையை மறைக்காது. எனக்கு கண் வலி, தலை வலி என்று யாரும் சொல்லுவதில்லை. நான் ஒரு கிழவன், நான் ஒரு கிழவி என்று யாரும் சொல்லுவதில்லை. கன்னிப் பெண்கள் பாதுகாப்பாக நடந்து போகின்றனர். இறுதிச் சடங்கு செய்யும் புரோகிதர்கள் இல்லை. இந்த்ச் சுவர்கள் அழு குரலைக் கேட்பதில்லை”.

 

ஒரு அதிசயமான ஒற்றுமை என்ன என்றால் பாரத நாட்டைப் பற்றி வடமொழி இலக்கியங்களிலும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் எழுதிய குறிப்புகளிலும் இதே வாசகங்கள் இருக்கின்றன. கம்பன் கூட அயோத்தி நகரையும் கோசல நாட்டையும் இப்படிதான் வருணிக்கின்றான். ஒரு வேளை தில்முன் என்பது இந்தியாதானோ என்று நான் அடிக்கடி சந்தேகப்படுவதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்களோவெனில் தில்முன் என்பது பஹ்ரைன் என்றும், பைலக்கா என்பது குவையத் என்றும் மெலுஹா என்பது சிந்துவெளி என்றும் அடித்துச் சொல்லுகின்றனர்.

Picture: Graves in the desert

 

பஹ்ரைனில் கிடைத்த முத்திரைகளின் பட்டியல்:

தேள்—36, ஆடு—27,குரங்கு—20,மாடு—90,ஆமை—6,மீன்-6,பாம்பு—15,

கால்சுவடு—36,சந்திரப் பிறை—126,சூரியன்+விண்மீன்—42,கடவுள்+கொடிமரம்—22

காளை மனிதன்—8,நண்டு—6, கழுதை—2, மயில்—1,நிலம்—5

ஒட்டகம், குதிரை, புலி, யானை, காண்டாமிருகம் ஆகிய முத்திரைகள் கிடைக்கவில்லை. அடையாளம் காணமுடியாத பறவைகள் முத்திரைகளில் இருக்கின்றன. நின்ற வடிவிலுள்ள குரங்கு, தேள், பாதச் சுவடு ஆகியன புரியாத புதிராக உள்ளன. சிந்து சமவெளி போல ‘செக்ஸ்’ காட்சிகளும் இருக்கின்றன.

சிந்துவெளி போல கடவுளைச் சுற்றி மிருகங்கள் (பசுபதி) இருப்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: