தேள்— ஒரு மர்ம தெய்வம்!

 

படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்

(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)

உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.

 

அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர்.  சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.

 

தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.

கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.

மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.

 

படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி

27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.

தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)

எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் தேள் வீரன்

 

படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை

எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.

இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.

சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.

பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.

 

பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.

For more details, see my English post: The Great Scorpion Mystery in History.

Other articles on Snake, Indus Valley etc:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of  Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God  around  the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: