வள்ளுவன் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள்

vivekananda rock and valluvar

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

இதைப் படிப்பதற்கு முன் எனது முந்தைய கட்டுரைகளைப் படிக்கும்படி வேண்டுகிறேன்: 1. வள்ளுவர் சொன்ன சுவையான கதைகள் 2.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 3. வள்ளுவனும் வன்முறையும் 4.Who was Tiruvalluvar?

 

புராண, இதிஹாசக் கதைகள்

 

குறள் 495-ல் மறைமுகமாக கஜேந்திர மோட்சக் கதையைச் சொல்கிறார்:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

 

பொருள்:ஆழமான நீர் நிலையில் இருந்தால் முதலை வெற்றிபெறும். அதே முதலை வெளியே வந்தாலோ மற்ற உயிரினங்கள், அதை எளிதில் வென்றுவிடும்.

 

முதலை வாயில் சிக்கிய கஜேந்திரனை காப்பாற்ற விஷ்ணுவே வரவேண்டி இருந்தது.

 

கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் முழுதும் –271 முதல் 280 வரை– ஒவ்வொரு குறளும் ஒரு புராண, இதிஹாசக் கதையை மனதில் வைத்தே எழுதியது போல இருக்கிறது.

 

புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்த பசுவின் கதை ((273), மகாபலிபுரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ருத்திராட்சப் பூனை கதை (please read my earlier post THE STORY OF HYPOCRITICAL CAT) ஆகியனவற்றுக்குப் பொருத்தமான குறள்கள் இவை.

 

 

பசு-புலித்தோல் கதை ஈசாப் முதல் பல நாட்டுக் கதைகளில் வருகின்றன. ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்றும், சிங்கத் தோல் போர்த்திய கழுதை என்றும் பல கதைகள் உண்டு.

குறள் 269—ல் மார்கண்டேயர், சத்தியவான் சாவித்திரி கதையைக் கூறுகிறார்:

 

’கூற்றம் குதித்தலும் கைகூடும்’’ (எமனையும் வெல்ல முடியும்) என்பார் வள்ளுவர்

பிறனில்விழையாமை என்னும் அதிகாரத்தில் (141—150), ராவணன், இந்திரன் கதைளைச் சொல்கிறார்.

 

ததீசி முனிவரின் தியாகம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

 

பொருள்: அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை ஆக்கிக் கொள்வர். ஆனால் அன்புடையாரோ, தனது எலும்பையும் கூடப் பிறர்க்கு அளிப்பர் (72).

 

ததீசி என்னும் முனிவர் தனது முதுகு எலும்பையே இந்திரனுக்குக் கொடுத்தார். அசுரர்களைக் கொல்வதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. அப்போது எலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதமே அசுரர்களைக் கொல்ல வல்லது என்று அறிந்தான். உடனே ததீசி முனிவரை அணுகினான். மனித குலத்தைக் காக்க தனது முதுகு எலும்பையே கொடுத்தார் ததீசி. அதையே வள்ளுவன் ‘’என்பும் உரியர் பிறர்க்கு’’ என்பான்.

 

‘’அடி அளந்தான்’’ என்ற சொற்றொடர் மூலம் (610) வாமனாவதாரக் கதையையும், ‘’இந்திரனே சாலுங்கரி’’ என்ற சொற்றொடர் மூலம் இந்திரன்—அகல்யா, இந்திரன்-நகுஷன் போன்ற கதைகளையும் படிக்கலாம்.

 

குறள் 801ல் கண்ணப்ப நாயனார் கதை, சபரி-ராமன் கதை, சாக்ரடீஸ்-சிவபெருமான் விஷம் அருந்திய கதை ஆகியவற்றைக் காணலாம்.

பழமை எனப்படுவது யாதெனின் யாதும்

 

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801)

பொருள்: பழகிய நண்பர் உரிமையால் செய்யும் எதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

 Sunrise in Kanyakumari (Thiruvallur statue and Vivekananda rock)

கபில முனிவரின் கோபம்

‘’குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது’’ (குறள் 29)

 

நல்ல குணவான்கள் சிறு பிழைகளையும் பொறுக்கமாட்டார்கள். இதற்கு முனிவர்களின் கோபம் பற்றிய கதைகள் புராணத்தில் நிறைய இருக்கின்றன. அவைகளில் மிகவும் முக்கியமானது சகரர்கள்—கபில முனிவர் கதையாகும். சகர மன்னன் அஸ்வமேத யாகம் செய்த போது அவனுடைய குதிரை சென்ற இடமெல்லாம் அவனது புதல்வர்கள் 60,000 பேரும் அதைத் தொடர்ந்து சென்றனர். கபிலனின் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், அவருக்குக் கெட்ட பெயர் உண்டாக்குவதற்காக சகரனின் குதிரையைத் திருடி கபில முனிவருக்குப் பின்னால் கட்டிவிட்டனன். சகரனின் பிள்ளைகள் கபிலரைத் திருடன் என்று எண்ணி துன்புறுத்தவே அவர் தனது கோபக் கனலால் அந்தப் பிள்ளைகளை எரித்து விடுகிறார். பின்னர் பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொணர்கிறார். குணம் என்னும் குன்று ஏறி நின்றாரைப் பகைக்கக் கூடாது.

bangalore valluvar

தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

கணவனையே கண்கண்ட தெய்வமாகப் போற்றிய வள்ளுவனின் மனைவி வாசுகி செய்த அற்புதங்கள், கற்புக்கரசிகளின் மாண்பைக் காட்டும். அரைக் கிணற்றில் தண்ணீர் வாளி நின்றதும், ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’ என்று முனிவரையே சாடியதும், சாவித்திரி எமனுடன் போராடி கணவன் உயிரை மீட்டதும், கண்ணகி மதுரை மாநகரையே எரித்ததும் இதற்குச் சில உதாரணங்கள்.

வேனன், நகுஷன் போன்ற கொடுங்கோலர் அழிந்த கதையை ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் காணலாம்

 

சந்யாசிகள் நினைத்தால் ஒரு பேரரசையே உருவாக்கலாம், அழிக்கலாம் என்பதை தவம் என்ற அதிகாரத்தில் கூறுகிறார்:

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும் (264)

 

மொகலாயர்களின் கொடுங்கோலாட்சியை வீழ்த்த சிவாஜிக்கு அருள்புரிந்த சமர்த்த ராமதாசரும், அதற்கு முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை அமைக்க ஹரிஹரன், புக்கன் என்ற ஆட்டிடையர்களுக்கு அருள்புரிந்த வித்யாரண்யரும், ராமராஜ்யம் நிறுவ சபதம் பூண்ட மஹாத்மா காந்திக்கு உதவிய புராணக் கதைகளும் இதற்கு உதாரணங்கள்.

ஒவ்வொரு குறளுக்கும் உதாரணமான கதை நமது தமிழ்மொழி, வட மொழி நூல்களில் உள்ளன. விரிவஞ்சி இத்தோடு நிறுத்துகிறேன்.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

கீழ்கண்ட எனது கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:

‘’Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar’’– posted in this blog September 18, 2011.

 valluvar_statue_kanyakumari

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: