Post No 863 Date: 24 February 2014
இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலிய பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளைத் தொகுத்து மொழிபெயர்த்துத் தருபவர் ச.சுவாமிநாதன்.
பீஹார் மாநிலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. அதை 1193 ஆண்டில் பக்தியார் கில்ஜி என்ற முஸ்லீம் மன்னனின் படைகள் எரித்து அழித்துவிட்டன. அந்தப் பல்கலைக் கழகத்தின் நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து சாம்பல் ஆகியது.. பல்லாயிரக் கணக்கான, புத்தமத, இந்துமத புத்த்கங்கள் அதில் எரிந்து சாம்பல் ஆயின. தற்போது அதற்கு சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் வேறு ஒரு பலகலைக் கழகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தெலாரா என்ற ஊரில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தை சீன யாத்ரீகரான யுவாங் சுவாங் 1300 ஆண்டுகளுக்கு முன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளர். இந்த புதிய இடத்திலும் ஒரு அடிக்கு சாம்பல் இருப்பதால் இதையும் முஸ்லீம் படைகளே கொளுத்தியிருக்க வேண்டும் என்று தொல்பொருட் துறை டைரக்டர் அதுல் குமார் வர்மா கூறினார்.
பீஹாரில் தெலாராவில் 2009 –ல் துவங்கிய அகழ்வாராய்ச்சி இப்போதுதான் ஒரு முழு உருவத்தை நமக்குக் காண்பித்துள்ளது. இதற்கு முன் இங்கு கிடைத்த ஒரு பெரிய புத்தர் சிலை சுவிட்சர்லாந்தில் சூரிச் நகர மியூசியத்தில் உள்ளது. மற்றொரு சிலை கல்கத்தா காட்சியகத்தில் இருக்கிறது.
மணல் மேடாக இந்த இடத்தை ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தவுடன் முறையான அகழ்வாராய்ச்சி நடந்தது.. இதுவரை 1000 அரும்பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர். குப்தர் (கி.பி 330) காலம் துவங்கி பால மன்னர் (1170) காலம் வரை பல சின்னங்கள் கிடைத்தன.
இரண்டரை ஏக்கர் பரப்பளவுக்கு இந்த பல்கலைக்கழகம் பரவி இருந்தது. மூன்று மாடிக் கட்டிடம் சுமார் 1000 புத்த பிட்சுக்கள் படிக்க உதவியது. ஆசிரியர்களுக்கு என தனித் தனி அறைகள் இருந்தன. ஏழு பௌத்த மடாலயங்கள் இங்கே இருந்தன. அவர்கள் மஹாயான புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள்.
மற்ற சுவையான விஷயங்கள்
1.யுவாங் சுவாங் என்ற சீன யாத்ரீகர் இந்த இடத்துக்கு வந்தபோது இது உயிர்த் துடிப்புடன் இளங்கியது. ஒரு பெரிய அவலோகிஸ்வரர் சிலையும் இருந்ததாக எழுதி இருக்கிறார். பெரிய தூண்களுக்கு அடியில் புடைப்புச் சிற்பங்கள் இருந்ததாகவும் அவை தாமிரத் தகட்டால் கவசம் போல அலங்கரிக்கப் பாட்டு இருந்ததாகவும் அவர் எழுதுகிறார்.
2. அவர் இந்த இடத்தை திலஸ் அகியா என்று குறிப்பிடுகிறார். ஒரு மடாலயம் முழுதும் தாமிரத் தகட்டால் போர்த்தப்பட்டிருந்த தையும் அவர் பார்த்திருக்கிறார்.
3. இந்த பலகலைக் கழகம் மகதப் பேரரசின் மன்னன் பிம்பிசாரனின் வழிவந்தவர்களால் நிறுவப்பட்டது.
4.நாளந்தா பலகலைக் கழகம் இருந்த காலத்திலேயே பக்கத்தில் தெலாரா பல்கலை.யும் இருப்பதைப் பார்க்கையில் இது உயர் படிப்புக் கல்விச் சாலை அல்லது, சிறப்புப் படிப்பு கல்விச்சாலையாக இருந்திருக்கலாம் என்றும் வர்மா கருதுகிறார். நாளந்தா பலகலைக் கழகத்தில் படித்தவர்கள் மேற்படிப்புக்கு இங்கு வந்திருபர்.
5.இங்கு முற்காலத்தில் கிடைத்த சிலைகள் கல்கத்தா மியூசியத்திலும் சுவிட்சர்லாந்து சூரிச் மியூசியத்திலும் உள்ளன.
6.சுட்ட மண்ணால் செய்யப்பட்ட 100 முத்திரைச் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. ஒரு சக்கரத்துக்கு இருபுறமும் மான்கள் இருக்கும் முத்திரை, கஜ லெட்சுமி முத்திரை,, பறவைகள் முத்திரை முதலியன இதில் அடக்கம். இது புத்தமத பல்கலைக் கழகம் என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது.
7.மூன்று புத்தமத விஹாரங்களும் நான்கு சதுர அடி பரப்புள்ள 11 ஆசிரியர் அறகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை எல்லாம் சாம்பலுக்கு அடியில் இருந்ததால் பலகலைகழகம் தீக்கிரையாக்கப்பது தெரிகிறது.
8 தாமிர மணிகள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டன. ஆகையால் மணிகளால் அலங்கரிக்கப் பட்டது தெரிகிறது.
9.இந்த பல்கலைக்கழகத்தை அழிப்பவர் ஒரு கழுதை அல்லாது மாடு என்று சம்ஸ்கிருத்தில் எழுதிய கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. படிக்கமுடியாத கல்வெட்டுகள் மைசூருக்கு அனுபபப்பட்டுளன.
10 மௌரியர் கால கலயங்கள், எலும்பாலான ஆயுதங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
11. பதினைந்து புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன..
You must be logged in to post a comment.