உஷார்! கடவுள் கையில் நோட்டுப் புத்தகம்: 3 பேர் பார்த்துவிட்டனர்!

angel

By London Swaminathan
Post No. 912 Dated 17th March 2014

சிறுவயதில் ஏதேனும் தப்புத் தண்டா செய்தால் அப்பா, அம்மா எச்சரிப்பார்கள்: “எனக்குத் தெரியாமல் எல்லாம் செய்துவிடலாம், ஆனால் யம தர்மனின் கணக்குப் பிள்ளை சித்திர குப்தன் ,எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கிறான். அவன் நோட்டுப் புத்தகத்தில் எழுதிவிடுவான். நாம் இறந்த பின் புண்ணிய ,பாவம் ‘அக்கவுண்ட்’களைப் பார்த்து அதற்குத் தக, நம்மை நரகத்துக்கோ, சொர்க்கத்துக்கோ அழைத்துச் செல்வான் என்று. அப்போதெல்லாம் மனதுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்போம். சும்மா, நம்மை பயமுறுத்த இப்படிச் சொல்லுகிறார்கள் என்று.

இப்போது மூன்று புலவர்கள் நோட்டுப் புத்தகம் வைத்திருக்கும் கடவுளைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். அதிலும் ஒருவர் கிறிஸ்தவர்!. இப்படி மூவர் சொல்லும் போது அதை உதாசசீனப்படுத்தலாமா? உங்கள் காதிலும் இந்தச் செய்தியைப் போடுவது என் கடமை.

அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், பழைய தமிழ் நாட்டின் ‘பில் கேட்ஸ்’ பட்டினத்தாரரும் லண்டன் சவுத்கேட்டில் வாழ்ந்த ஆங்கிலப் புலவன் ஜேம்ஸ் ஹென்றி லெய் ஹண்ட்டும் James Henry Leigh Hunt (1784- 1859) என்ன பாடினார்கள்?

இதோ லெய் ஹண்ட் கவிதை:–
Abou Ben Adhem (May his tribe increase!)
“Awoke one night from a deep dream of peace,
And saw, within the moonlight in his room,
Making it rich, and like a lily in bloom,
An Angel writing in a book of gold:—
Exceeding peace had made Ben Adhem bold,
And to the Presence in the room he said
“What writest thou?”—The vision raised its head,
And with a look made of all sweet accord,
Answered “The names of those who love the Lord.”
“And is mine one?” said Abou. “Nay, not so,”
Replied the Angel. Abou spoke more low,
But clearly still, and said “I pray thee, then,
Write me as one that loves his fellow men.”

The Angel wrote, and vanished. The next night
It came again with a great wakening light,
And showed the names whom love of God had blessed,
And lo! Ben Adhem’s name led all the rest”.

angel2

இதன் பொருள் என்ன?

அபூ பென் ஆடம் ஒரு நாள் சுகமாகத் தூங்கினார். நல்ல கனவு கண்டார். பின்னர் எழுந்தார்.அழகான நிலவொளியில் ஒரு தேவதை ஒரு புத்தகத்தில் தங்க நிற மையில் ஏதோ எழுதுவதைக் கண்டார். அம்மையே! என்ன எழுதுகிறீர்கள்? என்று துணிச்சலுடன் கேட்டார். அங்கிருந்த அற்புதமான ஒரு அமைதி, அவருக்கு அவ்வளவு தைரியத்தைத் தந்தது. அந்த தேவதை சொன்னாள்’” கடவுளிடம் அன்பு (பக்தி) செலுத்துவோரின் பெயர்களை எல்லாம் எழுதுகிறேன்”. “அப்பொழுது என் பெயர் இருக்கிறதா? என்றார். தேவதையோ, ‘இல்லை, இல்லவே இல்லை’ என்று சொல்லிவிட்டது. “சரி, அது போகட்டும், என்னுடன் வாழும் மக்கள் மீது அன்பு செலுத்துபவன் என்றாவது எழுதிக்கொள்ளேன்” என்று கெஞ்சலாகக் கேட்டார். தேவதையோ ஏதோ எழுதிக்கொண்டு பறந்தோடிப் போய்விட்டாள். மறுநாள் முன்னைவிடப் பிரகாசமான ஒளியில் தேவதையைக் கண்டார். அந்த தேவதை பழைய நோட்டுப் புத்தகத்தைக் காட்டினாள். இது அன்பே உருவமான இறைவனின் ஆசி பெற்றோர் பட்டியல் என்று சொன்னாள். என்ன ஆச்சர்யம்!! பென் ஆடத்தின் பெயர் முதல் பெயராக ஜொலித்தது!!!
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!

பட்டினத்தார்
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் பெரியார் பட்டினத்தார். பணம், காசை எல்லாம் துறந்துவிட்டு கருணாநிதியை, தயாநிதியைத் கலாநிதியைத் (கருணையும் தயையும் உடைய, கலைகளுக்கெல்லாம் உறைவிடமான ஆண்டவன்) தேடிச் சென்றார். அவர் பாடிய பல பாடல்களில் ஒன்று கோயில் நான்மணி மாலை. அதில்:–

“தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்
ஆடும் அம்பல வாண!——————–
நிந்தமர் பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள்
ஆனை வைப்பில், காணொனா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்.”

——-பட்டினத்தாரின் கோயில் நான்மணி மாலை

என்று பாடினார்.” இறைவா, நீ வைத்திருக்கும் கோடு போட்ட நோட்டுப் புத்தகம் இருக்கிறதே, என் பெயரையும் எழுதிக்கொள் என்கிறார். அதாவது உன் அருள் எனக்கும் கிடைக்கட்டும் என்பது அவர்தம் விண்ணப்பம். மிக ஆச்சர்யமான ஒற்றுமை. இதைப் பார்த்துதான் அபூ பென் ஆடம் கவிதையை ஆங்கிலக் கவிஞன் லெய் ஹண்ட் எழுதினானோ என்று எண்ணத் தோன்றுகிறது!!

இவருக்கு 300 வருஷத்துகு முன்னால் வாழ்ந்த அப்பர் பெருமான் ஒரு நோட்டுப் புத்தகம் பற்றிப் பாடினார். அது கொஞ்சம் வித்தியாசமானது. அதில் நல்லவர் கெட்டவர் பெயர் எல்லாம் இருக்குமாம். எதற்காக? கெட்டவர் என்றால் எமனிடம் அனுப்பி, “ஏய், இது உன் வட்டாரம், நன்றாகக் கவனித்துக் கொள்”—என்று விட்டுவிடத் தான்!

442px-Hindu_hell

(இந்தப் படம் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது. நரகத்தின் தோற்றம்)

அப்பர் தேவாரம்

“தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” (அப்பர், 5ஆம் திருமுறை)

சிவ பெருமானே! உன் மீது எல்லையிலா அனபு கொண்டு அழுது, தொழுது, பாடிப் பரவுகின்றவர்களையும், பொழுதை எல்லாம் வீண் அடிக்கும், உன்னைக் கண்டு கொள்ளாத சோம்பேறிகளையும் எழுதி கணக்கு வைத்துக் கொள்பவன் நீ! என்று பாடுகிறார். இந்த ஊரின் பெயர் திருஇன்னம்பர். அங்குள்ள இறைவனின் பெயர் எழுத்தறி நாதர்!!
காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்று.

ஆக, இவர்கள் எல்லாம் சொல்ல வந்தது என்ன? நாம்முடைய ஒவ்வொரு செயலையும் ஆண்டவன் கண்காணிப்பதோடு அதைக் கணக்கும் வைத்து பலாபலன்களைத் தருவான் என்பதுதான்.

angel4

சித்திரகுப்தன் பற்றிய புராணச் செய்தியும் உண்மையே! சித்திரம்= படம், குப்த = ரகசியம். அதாவது ரகசியப் படம். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் அலைகளாக மிதக்கும். தற்காலத்திய சூப்பர் கம்யூட்டர்கள் ஒரே நொடியில் கோடிக்கணக்கான கணக்குகளைப் போடுவது போல, சித்திரகுப்தனும் (அதாவது நாம் உருவாக்கிய எண்ண பிம்பங்கள்) நம் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு நமக்குச் சொர்க்கமா நரகமா என்பதைத் தீர்மானிக்கின்றன. இது சித்திர குப்தன் (ரகசியப் படம்) என்பதற்கு ஒரு அறிஞர் கொடுத்த விளக்கம்.

You are What You Think யூ ஆர் வாட் யூ திங்க்= மனம் போல மாங்கல்யம்= நீ என்ன நினைக்கிறாயோ அதுதான் உன்னை ஆக்குவதும் அழிப்பதும்—என்பது ஆன்றோர் வாக்கு.
angel3

Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: