உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?

valluva nayanar

தமிழ் வினா – விடை (க்விஸ்)
உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?

திருவள்ளுவரை தினமும் புகழ்கிறோம். திருக்குறளை தமிழ் வேதம் என்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தொகுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 937 தேதி 27 மார்ச் 2014

இது நான் வெளியிடும் 27ஆவது க்விஸ். ஏனையவற்றையும் படித்து மகிழ்க. முந்தைய 26 தலைப்புகளைக் கடைசியில் கொடுத்துள்ளேன்.

1.திருக்குறளில் பல சம்ஸ்கிருத சொற்கள் உள்ளன. முதல் குறளிலும் முடிவுக் குறளிலும் உள்ள ஒரு சம்ஸ்கிருத சொல்லையாவது சொல்லுங்கள். (மதிப்பெண் 1)

2. வான் சிறப்பு அதிகாரத்தில் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” (குறள் 12) என்கிறார். துப்பு என்றால் என்ன? (மதிப்பெண் 1)

3. “அச்சமே கீழ்களது ……………..” என்ன சொன்னார் (குறள் 1075) என்று ஒரு சொல்லை மட்டும் நிரப்புங்கள். (மதிப்பெண் 1)

4.வெஃகாமை, வெருவந்த செய்யாமை, மடி இன்மை, இரவு, நல்குரவு என்ற ஐந்து அதிகாரத் தலைப்புகளின் பொருள் என்ன? ( 5 மதிப்பெண்கள் )

5.திருக்குறளின் மூன்று பால்களும் (அறம், பொருள், இன்பம்) இந்துமத புராண இதிஹாசங்களில் புழங்கும் மூன்று சம்ஸ்கிருதச் சொற்களின் மொழிபெயர்ப்பு. அவை என்ன? (மதிப்பெண் 1)

bharathy

தமிழா, தமிழா!! உனக்கு பாரதியாரைத் தெரியுமா?

பாரதியின் பெயரை அறியாத தமிழன் இல்லை. பாரதியின் பெயரை அறியாதவன் தமிழனே இல்லை! பாரதி பாடலைப் படியாதவன், படியாதவனே. உங்களைச் சோதிக்க இதோ சில கேள்விகள்.

6.யாமறிந்த புலவரிலே …….. போல், ………..போல், ……….. போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை – என்று தமிழின் பெருமையை முரசு கொட்டுகிறார். யார் இந்த மூன்று புலவர்கள்? (மதிப்பெண் 1)

7. வாழ்க ——— நாமம் வாழ்கவே! நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே ! நரகமொத்த அடிமை வாழ்வி நைந்து கழிகவே என்ற பாட்டில் யாருடைய நாமம் வாழ்கவே என்று வாழ்த்துகிறார். (மதிப்பெண் 1)

8.ஒரு ராஜாவுக்கு பாரதி இப்படி கடிதம் எழுதினார். யார் அந்த ராஜா?
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன் தேசமெல்லாம் புகழ் விளங்கும் இளசை ————–(மதிப்பெண் 1)

9. என்றும் இருக்க உளங் கொண்டாய் —- என்று துவங்கும் பாட்டில் ஒரு தமிழ்ப் பெரியாரை “இறவாய் தமிழோடு இருப்பாய் நீ? என்று வாழ்த்துகிறார். யார் அந்த புகழுக்குரியவர்? (மதிப்பெண் 1)

10. பொதிய மலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே என்று பாரதியார் போற்றும் தமிழர் யார்? (மதிப்பெண் 1)

11. வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் என்று பாடத் துவங்கிய பாரதி, பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த —– ——– நீ வாழ்க! வாழ்க! என்கிறார். யாரை இப்படிப் புகழ்கிறார்?

12. தமிழ்த் தாய் என்ற பாடலில் “ ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை ஆரிய மைந்தன் ———– என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே — நிறை மேவும் இலகணஞ் செய்து கொடுத்தான். யார் அந்த ஆரிய மைந்தன்?

13. வந்தே மாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் – முடி – தாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ? — அவ — மானமோ? என்று விஞ்ச் துரைக்கு பதில் கூறும் தேசபக்தர் யார்?
(11, 12, 13 கேள்விகளுக்கும் தலா மதிப்பெண் 1.)

14.ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் வீரர் நாயகன், மேதினி காத்த ———— இப்படி பாரதி போற்றும் பாஞ்சாலத்துச் சிங்கம் யார்? (மதிப்பெண் 1)

15.ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்! ஜய ஜய மாதா! ஜய ஜய துர்க்கா என்று யார் பாடுவதாக பாரதியார் எழுதியுள்ளார்? (மதிப்பெண் 1)

விடைகள்:– 1) உலகு, ஆதி பகவன், அகரம் (முதல் குறள்) காமம் (1330 கடைசி குறாள்) 2) துப்பு=உணவு, உண் 3) ஆசாரம் 4) வெஃகாமை= பிறர் பொருள் கவராது இருத்தல், வெருவந்த செய்யாமை= குடிமக்களை வருத்தாமல் இருத்தல், மடி இன்மை= சோம்பல் இல்லாமை, இரவு=பிச்சை எடுத்தல், நல்குரவு=வறுமை 5) அறம்=தர்ம, பொருள் = அர்த்த, இன்பம் =காம 6) கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் 7) திலகன், சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றவர். 8) ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அல்லது ரெட்டசிங்கன் 9) தாயுமானவர் மீது பாரதி பாடிய பாடல் 10) மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் 11) வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க! வாழ்க! 12) அகத்தியன் 13) தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை 14) குருகோவிந்தசிம்மன் 15)சத்ரபதி சிவாஜி

Earlier Quiz posted by me:
(1&2)27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?
Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: