மே-சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்

alwars (1)

(மே 2014 – ஜய வருஷம்)
Post No.1011; Date:30 ஏப்ரல் 2014

இந்த மாதப் பொன் மொழிகள், திவ்வியப் பிரபந்த/ஆழ்வார் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 31 முக்கியப் பாடல்களைக் கொண்டது.
தயாரித்தவர்: லண்டன் சுவாமிநாதன் (C)

மே மாத முக்கிய நாட்கள்: தேதி 2 வெள்ளி- அக்ஷய திரிதியை; 4-ஞாயிறு-சங்கர ஜெயந்தி; 14- புதன் புத்த பூர்ணிமா; 10 முதல் 14 வரை மதுரை சித்திரைத் திருவிழா; சுப முகூர்த்த நாட்கள்:-5, 11, 25; ஏகாதசி:-10, 24; அமாவாசை-28; பௌர்ணமி-14

Contact swami_48@yahoo.com S Swaminathan ©

மே 1 வியாழக் கிழமை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போயபிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 5)

மே 2 வெள்ளிக் கிழமை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
…………. வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 3)

மே 3 சனிக் கிழமை
புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்! பூணிமேய்கும் இளங்கோவலர் கூட்டத்து அவையுள் நாகத்து அணையான் குழல் ஊத
அமரலோகத்தளவும் சென்றிசைப்ப, அவியுணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி, செவியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. –பெரியாழ்வார்

மே 4 ஞாயிற்றுக் கிழமை
வெற்பு எடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்புகட்டி வேலைசூழ்
வெற்பு எடுத்த இஞ்சிசூழ் இலங்கை கட்டழித்த நீ!
வெற்பு எடுத்து மாரிகாத்த மேகவண்ணன் அல்லையோ!— திருமழிசைப் பிரான்

மே 5 திங்கட் கிழமை
விண்கடந்த சோதியாய்! விளங்கு ஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே!
எண்கடந்த யோகினோடு இரந்துசென்று மாணியாய்
மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்கவல்லரே! — திருமழிசைப் பிரான்

மே 6 செவ்வாய்க் கிழமை
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்

மே 7 புதன் கிழமை
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்

மே 8 வியாழக் கிழமை
பொன் திகழும் மேனிப் புரிசடைப் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் – என்றும்
இருவர் அங்கத்தால் திரிவாரெனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன் – பொய்கையாழ்வார்

மே 9 வெள்ளிக் கிழமை
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளறும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று. – பேயாழ்வார்
alwars_stickers

மே 10 சனிக் கிழமை
தாழ் சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து. — பேயாழ்வார்

மே 11 ஞாயிற்றுக் கிழமை
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே! — நம்மாழ்வார்

மே 12 திங்கட் கிழமை
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல், மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம், அடியார் எம் அடிகளே. — நம்மாழ்வார்

மே 13 செவ்வாய்க் கிழமை
வைகுந்தா மணிவண்ணனே! என்பொல்லாத் திருக்குறளா !
வைகும் வைகல் தோறும் அமுதுஆய வேனேறே!
செய்குந்தா அரும்தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா ! உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. – நம்மாழ்வார்

மே 14 புதன் கிழமை
புன்புல வை அடைத்து அரக்கு இலச்சினை செய்து,
நன்புல வழி திறந்து, ஞான நற்சுடர் கொளீ இ,
என்பில் எள்கி நெஞ்சு உருகி, உள் கனிந்து எழுந்ததோர்
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே? — திருமழிசை ஆழ்வார்

மே 15 வியாழக் கிழமை
உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து — உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர். — பொய்கை ஆழ்வார்

மே 16 வெள்ளிக் கிழமை
நாடிலும் நின்னடியே நாடுவேன் நாள்தோறும்
பாடிலும் நின்புகழே பாடுவேன் – சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு? —பொய்கை ஆழ்வார்

மே 17 சனிக் கிழமை
ஓடுவார், விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார், நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. — பெரியாழ்வார்

மே 18 ஞாயிற்றுக் கிழமை
கிடக்கில், தொட்டில் கிழிய உதைத்திடும்;
எடுத்துக் கொள்ளில், மருங்கை இறுத்திடும்;
ஒடுக்கிப் புல்கில், உதரத்தே பாய்ந்திடும்;
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன், நங்காய்! — பெரியாழ்வார்

மே 19 திங்கட் கிழமை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணி வண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு
பெரியாழ்வார்

alvar1

மே 20 செவ்வாய்க் கிழமை
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே — குலசேகர ஆழ்வார்

மே 21 புதன் கிழமை
பச்சைமா மலை போல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச் சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும்
அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!- தொண்டரடிப்பொடி ஆழ்வார்

மே 22 வியாழக் கிழமை
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தெந்திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக்கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே – தொண்டரடிப்பொடி ஆழ்வார்

மே 23 வெள்ளிக் கிழமை
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவரில்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே! ஓ கண்ணனே! கதறுகின்றேன்
ஆருளர் களை கண் அம்மா அரங்கமா நகருளானே! — தொண்டரடிப்பொடி ஆழ்வார்

மே 24 சனிக் கிழமை
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின எல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – திருமங்கை ஆழ்வார்

மே 25 ஞாயிற்றுக் கிழமை
ஒன்றுண்டு செங்கள் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ – நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்? – நம்மாழ்வார்

மே 26 திங்கட் கிழமை
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே! – நம்மாழ்வார்

alwars

மே 27 செவ்வாய்க் கிழமை
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டே, தோழீ! நான். –ஆண்டாள் நாச்சியார் திருமொழி

மே 28 புதன் கிழமை
கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
திருப் பவளச் செவ்வாய்தான் தித்திதிருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்ருக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே! – நாச்சியார் திருமொழி

மே 29 வியாழக் கிழமை
பொலிக; பொலிக; பொலிக ! போயிற்று வல்லுயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த; நமனுக்கு இங்கு யாதும் ஒன்றும் இல்லை;
கலியும் கெடும்; கண்டு கொண்மின்; கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து, இசைபாடி, ஆடி, உழிதரக் கண்டோம்.

மே 30 வெள்ளிக் கிழமை
கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே. — நம்மாழ்வார்

மே 31 சனிக் கிழமை
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃதுண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்றும் எல்லாமும் அறிந்தனமே. – நம்மாழ்வார்

ALWAR-STATUES-baba

ஜனவரியில் வள்ளுவர் திருக்குறள், பிப்ரவரியில் திருவாசகம், மார்ச்சில் திருமந்திரம், ஏப்ரலில் அப்பர் தேவாரம் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட முக்கியப் பாடலகள் இடம்பெற்றுள்ளன. படித்துப் பயன் பெறுக!

contact swami_48@yahoo.co

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: