ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? – பகுதி 2

owl (1)coin
owl on Greek coin

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1067; தேதி:- மே 27, 2014.
(This article is posted in English as well)

முதல் பகுதியில் சங்க இலக்கியத்தில் ஆந்தை பற்றிய பாடல்களைக் கொடுத்தேன். ஆந்தையை மரணத்துடன் தொடர்பு படுத்துவது, இசையுடன் தொடர்பு படுத்துவது பற்றியும், பல நாட்டுக் கலாசாரங்களில் உள்ள நம்பிக்கைகள் பற்றியும் பார்த்தோம்.

கல்வி நிறுவனங்களில் ஆந்தைச் சின்னம்
மேலை நாடுகளில் ஆந்தையை ஞானத்தின் சின்னமாக, அறிவின் சின்னமாகக் காண்கின்றனர். கிரேக்க நாட்டு சரஸ்வதி அதீனாவின் சின்னம் ஆந்தை. கிரேக்க நாட்டுத் தபால் தலைகளிலும், பழைய நாணயங்களிலும் ஆந்தையைக் காணலாம். லண்டன்,அமெரிக்கா போண்ர இடங்களில் உள்ள க்லவி நிறுவனங்கள் ஆந்தையை தங்கள் சின்னங்களில் பொறித்துள்ளன.

owl tree1

ஆந்தையும் ஜெங்கிஸ்கானும்

மங்கோலிய தார்தார் இனத்தைச் சேர்ந்த ஜெங்கிஸ்கான சூறாவளித் தாக்குதல் நடத்தி உலகின் பலபகுதிகளைப் பிடித்தான். அவனது படையினர் உடைகளில் ஆந்தைச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டனர். இதற்குக் காரணம், அந்த சாம்ராஜ்யத்தை நிறுவிய ஜெங்கிஸ்கானை ஒரு ஆந்தை காப்பாற்றியதாகும். பல போர்களைப் புரிந்து முன்னேறிவந்த ஜெங்கிஸ் கானின் குதிரையை எதிரிகள் தாக்கிக் கொன்றனர். அவன் உயிருக்குத் தப்பி ஓடினான்.. ஒரு பெரிய மரத்துக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். எதிரிகள் துருவித் துருவி தேடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய ஆந்தை அந்த மரத்தின் மேல் உட்கார்ந்தது. ஆந்தை அமைதியாக உட்கார்ந்து இருப்பதால் அந்தப் புதர்ப் பகுதியில் மனித நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை என்று கருதி எதிரிகள் எதிர்த் திசையில் தேடச் சென்றனர்.
இவ்வாறு ஆந்தையே வந்து தன்னைக் காப்பாற்றியதால் அவன் ஆந்தைச் சின்னத்தைத் தன் படைகளில் பொறிக்கச் செய்தான்.

மந்திர தந்திரத்தில் ஆந்தை

தீபாவளிப் பண்டிகை காலத்தில் ஆயிரம் ஆந்தைகள் வரை கொல்லப்படுவதாகப் பத்திரிக்கை செய்திகள் கூறும். ஆந்தைகளைப் பலி கொடுத்தால் செல்வம் கிடைக்கும், அபூர்வ சக்திகள் கிட்டும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். இரவு நேரத்தில் ஓசையின்றி பறப்பதாலும், பாழடைந்த கட்டிடங்களில் பயமின்றி உலவுவதாலும் ஆந்தையை மாய, மந்திரத்தில் தொடர்புடையதாகக் கருதி இருக்கலாம்.
மேலும் ஆந்தை இறைச்சி, குழந்தைகளின் வியாதிகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை காரணமாகவும் ஆந்திகள் கொல்லப்படுகின்றன.

birbeck college,London
London Birkbeck College Emblem with owl.

வேதத்தில் ஆந்தை
உலகின் மிகப் பழமையான மத நூல் ரிக் வேதம். இதிலும் ஆந்தை இடம் பெறுகிறது. உலூக (10-165-4; 7-104-17) என்ற பெயரில் ஆந்தையைக் குறித்தனர். தீய சகுனமாகவே வருணிக்கிறது (அதர்வ வேதம் 6-19-2)வாஜசனேய சம்ஹிதையில், அஸ்வமேத யாகத்தில் அக்னியில் போடப்பட்ட பட்டியலில் ஆந்தையை வனதேவதைகளுக்கு என சொல்லி இருக்கிறது.

பஞ்ச தந்திரக்கதைகளில் ஆந்தை
காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பஞ்ச தந்திரக்கதைகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ‘காகோலூகீயம்’ (காகம்+ உலூகம்) என்ற தத்துவத்தில் எப்படிப் பகைவர்களை அழிப்பது என்பது மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் ஆந்தைகள் வாழும் மரங்களைச் சுற்றி காகங்கள் சுள்ளிகளை வைத்து அவைகளை எரித்டுக் கொன்றதை விஷ்ணுசர்மன் விரிவாக கூறுகிறார். பறவை இயல் நிபுணர் தவே எழுதிய புத்தகத்தில் இப்படி காகங்களை மட்டும் விரும்பிச் சாப்பிடும் ஆந்தை வகை இமயமலையில் இருக்கின்றன என்று புத்தகம் எழுதியுள்ளர். ஆகையால் ஆந்தை—காகம் மோதல் என்பது உண்மையில் நடந்ததே.
வள்ளுவனும் இந்த பஞ்சதந்திரக் கதையை ஒரு குறளில் தருகிறான்:–

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

பொருள்: பகற்பொழுதில் பெரிய கோட்டானை சிறிய காகம்கூட வென்றுவிடும். பகைவர்களை வெல்ல அரசர்களும் இவ்வாறு உரிய காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
rice seal
University Emblem with owl (Bird of Wisdom)

அஸ்வத்தாமன் கொலைகளும் ஆந்தையும்

கௌரவர்கள் அடியோடு அழிந்தவுடன் அன்றிரவில் துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனுக்குக் கொலைவெறி வந்துவிடுகிறது. கிருபர் அவனை எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார். ஆயினும் அவன் பாண்டவர் கூடாரத்துக்குச் சென்று அவர்களுடைய புதல்வர்களை வஞ்சனையாகக் கொன்றுவிடுகிறான். இதற்குக் காரணம் ஆந்தைகல்தான். அவைகள் இரவு நேரத்தில் காகங்களைத் தாக்கிக் கொன்றதைப் பார்த்தவுடன அவனுக்கு கொலைவெறி ‘ஐடியா’ கிடைக்கிறது. இதில் ஆந்தைகளுக்குரிய பங்கு பணியல் மஹாபாரதம் தெளிவாக விளக்கியுள்ளது.

ராமாயணத்தில் ஆந்தை

ராவணனைக் கைவிட்டு ராமபிரான் கட்சியில் சேரவந்த விபீஷணன் பற்றி சுக்ரீவன் எச்சரிக்கையில்இவன் ஆந்தை போல தந்திரம் உடையவ்னாக இருக்கலாம் என்பான்.
ஆந்தை, கூகை, கோட்டான் பற்றிய பழமொழிகள்
ஆந்தை அலறல் கெட்ட சகுனம்
ஆந்தைக் காதலை பொய்க்காது
ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது
ஆந்தை பஞ்சையாய் இருந்தாலும் சகுனத்தில் பஞ்சை இல்லை
ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்
கூகைக்குப் பகலில் கண் தெரியாது
கூகை விழித்தாற் போல விழிக்கிறான்
கோட்டானை மடியிற் கட்டிக் கொண்டதுபோல
owl in tree

பஞ்சாங்கத்தில் ஆந்தை

பஞ்சாங்கத்தில் ஐந்து பறவைகளின் படங்களைப் போட்டு அதற்கான பலன்களை எழுதி இருப்பர். அவைகளில் ஆந்தையும் ஒன்று. இது தவிர அவை பறக்கும் திசை, எழுப்பும் ஒலி, எத்தனை முறை ஒலி எழுப்பின என்பனவற்றின் அடிப்படையிலும் ஆரூடம் கூறுவர். மயில் வல்லூறு, சேவல்,காகம் ஆகிய நான்குடன் ஆந்தையையும் சேர்த்துக்கொண்டது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நேரத்தையும் பறவைகளின் அடிப்படையில் பிரிப்பர்.

முடிவுரை: 1. ஆந்தைக்கும் கெட்ட சகுனங்களுக்கும் (மரணத்துக்கும்) உள்ள தொடர்பு, வேத காலம் முதல் சங்க இலக்கிய காலம் வரை ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆரிய-திராவிட இனவாதம் பேசும் அறிவிலிகளுக்கு இது அடி கொடுக்கிறது. 2,லிங்க புராணமும் சங்க இலக்கியமும் ஆந்தைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டுகின்றன. இது ஆரிய-திராவிடக் கொள்கையினருக்கு அடி கொடுப்பதாக அமைகிறது. 3. பஞ்சதந்திரக் கதையை வள்ளுவனும் குறள் 481ல் தருகிறார். 4.மாயன் முதலிய மத்திய அமெரிக்க நாகரீகங்களில் ஆந்தை பற்றிய இந்து மதக் கருத்துகள் இருப்பது நோக்கற்பாலது. இந்திய நாகர்களே, மாயா நாகரீக அடிகோலிகள் (ஸ்தாபகர்கள்) என்று நான் எழுதிய பல கட்டுரைகளை இது மேலும் உறுதிப் படுத்துகிறது.யூத மதத்தினரும் ஆந்தைகளை மரணத்துடன் தொடர்புபடுத்துவது ஆய்வுக்குரியது 4. காகம் தின்னும் (Dusky Horned Owls) ஆந்தை, நீண்ட காது ( Long eared owl ) ஆந்தை முதலிய பலவகை ஆந்தைகள் பற்றிய தற்கால அறிவு மஹாபாரத (M.Bh.10-1-36), பஞ்சதந்திர, ராமயணக் கதை உவமைகளை உண்மை என்று உறுதிப் படுத்துகிறது. 5. சங்க இலக்கியம், காளிதாசனின் மேகதூதம், ரிக்வேதம் ஆகியவற்றில் புள் நிமித்தமும் ஒரே மாதிரியாக இருப்பதும் ஆரிய திராவிட இன வாதத்தை ஆட்டம் காண வைக்கிறது.6.ஆந்தையின் சம்ஸ்கிருதப் பெயர்களாகிய கௌசிக, உலூக, ரிஷி என்பனவற்றை சங்கப் புலவர்களான பிசிர் ஆந்தையார், ஓதல் ஆந்தையார், கூகைக் கோழியார் ஆகியோர் பயன்படுத்தி இருப்பது வேத காலப் பண்பாடும் தமிழர் பண்பாடும் ஒரே நாணயத்தின் இரண்டு பகுதிகளே என்பதை உறுதிப்படுத்துகிறது.

owl-uluka and Lakshmi

“வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” – பாரதியார்

“தமிழில் பழமறையைப் பாடுவோம்” — பாரதியார்

வாழ்க தமிழ்!! வளர்க வேதம்!!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: