Written by S Nagarajan
Post No.1150; Dated 5th July 2014.
This is the third part of S Nagarajan’ article on the Puranas. First two parts were published in the past two days.
ரஹஸ்யங்களுக்கெல்லாம் ரஹஸ்யமானதும், லலிதாம்பிகைக்கு ப்ரீதியைக் கொடுப்பதுமான இதற்குச் சமமான ஸ்தோத்திரம் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை.
இந்த ஸ்தோத்திரமானது சகல வியாதிகளையும் தீர்த்து விடும்.. சர்வ ஸம்பத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். சகல விதமான அகால மிருத்யுவையும் அடக்கி விடும். கால கிரமத்தில் ஏற்படக்கூடிய மரணத்தையும் நீக்கி விடும்.
சகல விதமான ஜ்வரங்களால் ஏற்படும் கஷ்டங்களை நீக்கி விடும். தீர்க்கமான ஆயுளைக் கொடுக்கும்.பிள்ளையில்லாத வர்களுக்கு புத்ர ஸம்பத்தைக் கொடுக்கும். புருஷார்த்தத்தையும் கொடுக்கும்.
மேலே கூறிய அர்த்தத்தைத் தரும் மூன்று ஸ்லோகங்கள் வருமாறு:-
ரஹஸ்யானாம் ரஹஸ்யம் ச
ல்லிதாப்ரீதி தாயகம் I
அனேன ஸத்ருஸம் ஸ்தோத்ரம்
ந பூதம் ந பவிஷ்யதி II
ஸர்வரோக ப்ரசமனம்
ஸர்வ ஸம்பத் ப்ரவர்தனம் I
ஸர்வபாப ம்ருத்யுசமனம்
காலம்ருத்யு நிவாரணம் II
ஸர்வ ஜ்வரார்த்திசமனம்
தீர்க்காயுஷ்ய ப்ரதாயகம் I
புத்ரப்ரதம் அபுத்ராணாம்
புருஷார்த்த ப்ரதாயகம் II
த்யானம், ஜபம் முதலான அநேக ரஹஸ்யங்களோடு கூடிய இந்த ஆயிரம் நாமங்கள் லலிதாம்பிகைக்கு ப்ரீதியைக் கொfடுப்பவை. நிகழ்காலம் இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் மிஞ்சிய இதற்கு சமமான ஸ்தோத்ரம் வேறொன்றுமில்லை
அறிய முடியாதென்று கை விடப்பட்ட அஸாத்யம்,அயாப்யம் என்ற பேதங்களை உடைய வியாதிகளையும் கூட இது போக்கடிக்கும். ரோகம் என்பதற்கு நிகரான வறுமையையும் போக்கும். திடீரென ஏற்படும் அபமிருத்யுவை இது விலக்கும். காலத்தினால் ஏற்படும் மரணத்தையும் இது போக்கும்.
ஒரு நாளைய ஜ்வரம் முதல் ஸன்னிபாத ஜ்வரம் வரை அனைத்தும் அகலும். சதாயுஸ் எனப்படும் நூறு வயதை இது அருளும். புத்திர செல்வம் இல்லாதவர்களுக்கு புத்ர செல்வம் தரும். புத்திமான்களால் விரும்பப்படும் முக்தியையும் இது அருளும்.
-ப்ரம்மாண்ட புராணத்தில்
லலிதோபாக்யானத்தில் ஹயக்ரீவர்- அகஸ்த்ய ஸம்வாதத்தில் வரும் ஸ்லோகங்கள்
அர்க்யம் விடுவது எதற்காக?
அர்க்கிய ஜலத்தை எடுத்து ஒருவர் எதற்காக விடுகின்றாரோ அதற்கான காரணமும் சொல்லுகிறேன். கேட்பீராக!
மஹாவீர்ர்களாயும் நன்றி மறந்தவர்களாகவும், பயங்கரர்களாயும் இருக்கின்ற முப்பது கோடி மந்தேஹா என்னும் ராட்ஸசர்கள் சூரியனை விழுங்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் இச்சையைக் கெடுப்பதற்குத் தேவ கூட்டங்களும் ரிஷிகளும் சந்தியை உபாசித்து உதக அஞ்சலியாக அர்க்கியத்தை விடுகிறார்கள். விட்டவுடன் அந்த அர்க்கிய ஜலம் வஜ்ர உருவம் கொண்டு அந்த ராட்ஸசர்களைக் கொளுத்துகின்றது. இது தான் அதற்குக் காரணம்.
-நாரதரிடம் நாராயணர் கூறுவது.
– தேவி பாகவதத்தில் பதினொன்றாம் ஸ்கந்தத்தில் பதினாறாவது அத்தியாயமான சந்தியோபாசனம் என்னும் அத்தியாயத்தில் வருவது
சுபாஸ்ரயம் எது?
சுபாஸ்ரயம் எது? இதற்கான விடையை பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் காணலாம்.
எந்த உருவத்தைச் சிந்திக்கும் போது மனமானது ராகம் முதலிய தோஷங்களால் வரும் கலக்கமின்றித் தெளிவு பெறுமோ, அத்தகையதும் தனக்கு மேற்பட்ட ஒன்று இல்லாததும் ஆகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் உருவமே சுபாஸ்ரயம் எனப்படும்.
To be continued………………
You must be logged in to post a comment.