Written by S Nagarajan
Post No.1154; Dated:- 7th July 2014.
This is the fourth part of S Nagarajan’ article on the Puranas. First three parts were published in the past few days.
எவன் ஒருவன் இந்த ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை. இதில் பாதி ஸ்லோகத்தையாவது அல்லது கால் ஸ்லோகத்தையாவது வாசிப்பானாயின், ராஜசூய, அஸ்வமேத யாகங்களின் பலனைப் பெறுவான். சரீரத்தை விடும் காலத்தில் இந்தக் கதையைக் கேட்பானாயின், அவனுக்கு ஸ்ரீமன் நாராயணன் தனது வைகுண்ட லோகத்தைக் கொடுப்பான். இந்தக் கதையை ஒரு தடவையாவது கேளாதவனுடைய ஜன்மம் பயனற்றதே. இந்தக் கதையைக் கேட்கும்படியான பாக்கியம் கோடி ஜன்மங்களில் செய்த புண்ணியங்களினால் தான் கிடைக்கும்.
நாரத முனிவரிடம் ஸனகாதிகள் கூறும் இந்தப் பகுதி பத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் பாகவத மாஹாத்மியத்தில் இடம் பெறுகிறது..
அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?
“அனந்த த்ரிதியை விரதம், ரசகல்யாணி விரதம், ஆனந்தத்தை விளைவிக்கின்ற ஆருத்ரா விரதம், மங்கள வார விரதம், சுக்கிர வார விரதம், கிருஷ்ண பக்ஷ சதுர்தசி விரதம்,பிரதோஷ விரதம், புரட்டாசி மாதத்திலும் சித்திரை மாதத்திலும் வருகிற நவராத்ரி விரதம் ஆகியவற்றைப் புருஷர்களும் ஸ்தீரிகளும் பிரயத்தனத்தோடு அனுஷ்டிக்க வேண்டும். இவை போலவே சோமவார விரதமும் எனக்குப் ப்ரீதியானது.”
இனி ரசகல்யாணி விரதமானது அந்தந்த திரிதியையோடு கூடிய தினம்.
ஆருத்ரா விரதமாவது ஆருத்ரா நக்ஷத்திரத்தில் திரிதியையோடு கூடிய தினம். பிரதோஷ விரதமாவது – மஹாதேவன் தேவியை அந்திப் பொழுதில் உன்னதமான ஆசனத்தில் வீற்றிருக்கச் செய்து சகல தேவர்களும் தன்னைச் சூழ்ந்திருக்க அந்த அம்பிகை எதிரில் நடம் புரிவன். அந்த அந்திப் பொழுதே பிரதோஷ காலம் எனப்படும். அக்காலத்தில் ஆகாராதிகளை விட்டு மஹாதேவியைப் பூஜிக்க வேண்டும்..
பர்வத ராஜனிடம் தேவி கூறியது.
– தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 39ஆம் அத்தியாயமான தேவீ பூஜா விதி என்னும் அத்தியாயத்தில் வருவது
மூன்று ஈஷணைகள்!
ஈஷணைகள் மூன்று.
1) தாரேஷணை
2) தனேஷணை
3) புத்ரேஷணை
(தாரேஷணை என்றால் மனைவியின் மீது ஆசை. தனேஷணை என்றால் பணத்தின் மீது ஆசை. புத்ரேஷணை என்றால் மகன் மீது ஆசை)
இந்த மூன்று ஆசைகளையும் திருதராஷ்டிரன் விட்டு விடுவான் என்று அவன் முடிவு பற்றி நாரதர் தர்மபுத்திரருக்கு உரைத்தது.
(ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயம்)
கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!
ராமர் வில்லை முறித்த சம்பவம் பிரசித்தமானது. கிருஷ்ணரும் வில்லை முறித்திருக்கிறார். அதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுவது இது:-
அச்சுதன் வில் வைத்திருக்கும் இடம் எது என்று பட்டணத்து ஜனங்களை வினவிக் கொண்டு வில் வைத்திருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு இந்திர தனுசு போல அற்புதமாக இருக்கின்ற வில்லைக் கண்டான். அதைப் பல மனிதர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். மற்றும் அது பூஜிக்கப்பட்டு ஸ்வர்ணா லங்காரத்துடன் பல மேன்மைகள் அமைந்ததாய் இருந்தது. அப்போது அதைப் பாதுகாப்போர் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று தடுத்த போதும் ஸ்ரீ கிருஷ்ணன் அதைப் பொருட்படுத்தாமல் பலாத்காரமாக அந்த வில்லை எடுத்துக் கொண்டான். திரிவிக்கிரமாவதாரம் செய்த மஹாபுருஷனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் அந்த வில்லை ஒரு நிமிடத்தில் இடக்கையால் அவலீலையாக எடுத்து நாணேற்றி ஜனங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் யானை கரும்புத்தடியை முறிப்பது போல இழுத்து இடையில் முறித்தான். அப்போது முறிகின்ற அந்த தனுஸின் ஒலி அந்தரிக்ஷ லோகத்தையும் பூமி ஆகியவைகளையும் நிறைத்து விட்டது. கம்ஸன் பயம் அடைந்தான்.
ஸ்ரீமத் பாகவதம் தசம ஸ்கந்தம் – பூர்வ பாகம் – 42ஆம் அத்தியாயம்
To be continued…………
You must be logged in to post a comment.