காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

gayatri matha

Written by S Nagarajan
Post No.1157; Dated:- 8h July 2014.

This is the fifth part of S Nagarajan’ article on the Puranas. First four parts were published in the past few days:swami.

தேவி பாகவதம் 12ஆம் ஸ்கந்தத்தில் காயத்திரி ஸ்தோத்ரம் வருகிறது. அதைச் சொல்வதால் ஏற்படும் பயனை நாராயணர் நாரதருக்கு ஸ்தோத்திரத்தின் முடிவில் இப்படிக்
கூறுகிறார்.

“ ஓ, மஹாதேவீ! ஓ ஈஸ்வரியே! ஓ, சந்தி ஸ்வரூபிணீ! உன்னை நமஸ்கரிக்கிறேன்” என்று எவன் சந்தியாகாலத்தில் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்கின்றானோ அவனுக்கு
அளவில்லாத புண்ணியம் கிடைக்கும்.

மஹா பாபத்தைப் போக்கும்.

மஹா சித்தியைக் கொடுக்கும்.

புத்திரன் இல்லாதவனுக்கு புத்திரனையும், செல்வம் இல்லாதவனுக்கு செல்வத்தையும், சகல தீர்த்த ஸ்நான பலத்தையும், தவம், யக்ஞம், யாகம் ஆகியவற்றின் பலனையும் வேண்டியவர்க்கு வேண்டிய பலனையும் கொடுக்கும்.

போக மோக்ஷங்களை வேண்டியவர்க்கு இம்மையில் போகத்தையும், அந்திய காலத்தில் மோக்ஷத்தையும் அடையும்படி செய்யும்.

இத்துதியை எந்தெந்த ஸ்நான காலங்களில் எவன் படித்து எந்த ஜலத்தில் ஸ்நானம் செய்த போதிலும் சந்தியா காலத்தில் ஸ்நானம் செய்த பலனை அடைவான்.

இதில் சந்தேகம் கிடையாது. ஓ! நாரதரே! இது அமிர்த வாக்கியமாகும்.
இது சத்தியம்! சத்தியம்!!

– 12ஆம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்

periyava-rudraksha
Kanchi Shankaracharya with Rudrakshas.

ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

நாயாய் இருந்தாலும் கழுத்தில் ருத்ராக்ஷம் தரிக்கப் பெறுமானால் அதுவும் முக்தி அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறபோது, மானிடனுக்கு என்ன சொல்ல வேண்டும்? ஒருவன் ஜபம் மற்றும் தியானம் இல்லாதவனாய் ருத்ராக்ஷம் மட்டுமே தரிப்பவனாகி இருப்பின் அவன் கூட சர்வ பாவங்களிலிலிருந்தும் விடுபட்டவனாகி மேலான கதியை அடைகிறான். ஆதலால் ஒருவன் முயற்சி மேற்கொண்டு ஒரு ருத்ராக்ஷத்தையாவது தரிக்க வேண்டும். அப்படித் தரிக்கிறவன் 21 தலைமுறைகளை உய்வித்து சிவலோகத்தில் பூஜிக்கப்பட்டவனாக இருப்பான்.

ஈஸ்வரர் ஷண்முகனுக்கு உரைப்பது – தேவி பாகவதம் 11ஆம் ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயம்

goddess-madurai-meenakshi-picture

மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

தன் முகத்தினுடைய சௌந்தர்ய ப்ரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள்

வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாபலோசனா

இப்படி லலிதா சஹஸ்ரநாமத்தில் 18வது நாமத்தில் தேவி வர்ணிக்கப்படுகிறாள்.

மீனானது தன் குஞ்சுகளைப் பால் கொடுத்து வளர்ப்பதில்லை என்றும். அவைகளைத் தன் கண்களால் பார்ப்பதனாலேயே வளர்க்கின்றது என்று சொல்வதுண்டு.அதே போல தேவியானவள் அனைத்து லோகங்களையும் தன் பார்வையினாலேயே ரட்சித்து வருவதால் அவளை மீனாக்ஷி என்று சொல்வது வழக்கம். அதே அர்த்தத்தைத் தரும் மீனாபலோசனா என்ற பெயர் இங்கு குறிப்பிடப்படுகிறது,

ப்ரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் – 18வது நாமம்

To be continued………………………

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: