Written by S Nagarajan
Post No.1160 ; Dated:- 9th July 2014.
This is the sixth part of S Nagarajan’ article on the Puranas. First five parts were published in the past few days.
சரஸ்வதியைத் துதிக்கும் ஸ்தோத்ரங்கள் / ஸ்துதிகள் ஏராளமாகப் புராணங்களிலும் இதர நூல்களிலும் உள்ளன. அவை எங்கே உள்ளன என்பதைக் கீழே காணலாம்
அஷ்வதரக்ருத ஸ்துதி – மார்கண்டேய புராணம் (க்ருத என்றால் இயற்றிய என்று பொருள்)
மார்கண்டேயக்ருத ஸ்துதி – வாமன புராணம் (மார்கண்டேய க்ருத என்றால் மார்கண்டேயரால் இயற்றப்பட்ட- அல்லது துதிக்கப்பட்ட -ஸ்துதி என்று பொருள்)
நவரதக்ருத ஸ்துதி – கூர்ம புராணம்
வசிஷ்டக்ருத ஸ்துதி – வாமன புராணம்
யாக்ஞவல்க்யக்ருத ஸ்துதி – ப்ரம்ம வைவர்த புராணம்
விஷ்வவிஜய கவசம் – ப்ரம்ம வைவர்த புராணம்
சரஸ்வதி அஷ்டகம் – பத்ம புராணம்
இது தவிர கீழே தரப்பட்டுள்ளவையும் சரஸ்வதி ஸ்துதிகளாக அமைந்துள்ளன.
ப்ருஹஸ்பதிக்ருத சரஸ்வதி ஸ்தோத்ரம்
சரஸ்வதி ரஹஸ்யோபனிஷத்
சரஸ்வதி ஸ்தோத்ரம் – சாரதா திலகம்
வாகாம்ருணீ சூக்தம் – ரிக் வேதம்
மங்கணத்ரருஷிக்ருத ஸ்துதி – மஹாபாரதம்
வசிஷ்டக்ருத ஸ்துதி – மஹாபாரதம்
வாஹனம்!
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாஹனம் உண்டு.யார் யாருக்கு எது வாஹனம் என்பதைப் பல புராணங்கள் தெரிவிக்கின்றன,
விஷ்ணு பகவானின் வாஹனம் கருடன் – மத்ஸ்ய புராணம்
சிவனின் வாஹனம் நந்தி – சிவ புராணம்
இந்திரனின் வாஹனம் ஐராவதம் யானை – நாரதீய புராணம், வாயு
புராணம்
சூரியனின் வாஹனம் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் – மத்ஸ்ய புராணம்
துர்க்கையின் வாஹனம் சிம்மம் – சிவ புராணம் யமராஜனின் வாஹனம் எருமை – நாரதீய புராணம், பால ராமாயணம்
சரஸ்வதியின் வாஹனம் ஹம்ஸம் – மார்க்கண்டேய புராணம்
லக்ஷ்மியின் வாஹனம் அன்ன பட்சி – உலூக தந்த்ரம்
முருகனின் வாஹனம் மயில்
கணேசனின் வாஹனம் மூஞ்சூரு
கங்கையின் வாஹனம் மகரமீன்
தேவியின் கண்கள்
தராந்தோளித தீர்காக்ஷீ
லலிதா சஹஸ்ரநாமத்தில் 601வது நாமமாக வருவது இது.
இதன் பொருள் : கொஞ்சம் சஞ்சலமானதும் (காது வரையில்) நீண்டதுமான கண்களை உடையவள்
ப்ரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் –
601வது நாமம்
இதன் பொருளை விவரிக்கையில் விரிவுரை கூறுவது:
தரமென்றால் பயம் என்று பொருள். பயத்தைச் சஞ்சலம் அடையச் செய்யும் அதாவது பயத்தைப் போக்கும் நீண்ட கண்கள் என்று இதற்கு அர்த்தம் சொல்லலாம். அதாவது தேவியின் திரு கடாட்சம் பட்டாலேயே போதும் பயமானது நாசமடையும் என்பது தாத்பரியம்.
அம்பாளுடைய நேத்ரங்களின் அழகைப் பற்றி ’சௌந்தர்ய லஹரி’யில் பதினோரு ஸ்லோகங்களில் ஆதி சங்கரர், அழகாக வர்ணித்திருக்கிறார்.
பாரத தேசத்தின் பெருமை
பாரத தேசத்தின் பெருமையை நாராயணர் கூறுவதாக தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் 11வது அத்தியாயத்தில் வருவது இப்பகுதி.
“இந்த பாரதவர்ஷத்திலிருக்கும் மனிதர்கள் என்ன புண்ணியம் செய்ததனாலோ விஷ்ணு பகவான் தானே அவர்களுக்குப் பிரசன்னராய் தரிசனம் கொடுக்கின்றார். இப்புண்ணிய சீலர்களைப் போல் விஷ்ணு பகவானுடைய சேவைக்கு உபயோகமான மானிட சரீரத்தையாவது அந்த பாரத வர்ஷத்தில் எடுப்பதற்கு ஆசைப்படுகிறேன். எது யாகம் முதலியவற்றால் சாதிப்பதற்கு அருமையாக இருக்கின்றதோ அது அந்த பகவானை உச்சரிப்பதனாலேயே உண்டாகின்றது. அவரது பாதங்களை உச்சரித்தால் யாருக்குத் தான் பாவ நாசம் உண்டாவதில்லை!
ஏனைய தேசங்களில் கற்பகால பரியந்தம் ஆயுள் அடைந்திருப்பதைக் காட்டிலும் இந்த பாரத வருஷத்தில் க்ஷண காலம் ஜீவதசையோடு இருப்பது மிக உயர்ந்தது.”
– நாராயணர் நாரத முனிவருக்கு உரைத்தது – தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் 11வது அத்தியாயம்.
To be continued
Swami_48@yahoo.com
Picture are taken from face book;thanks.
You must be logged in to post a comment.