ரிக் வேதத்தில் ஒரு புதிர்!

vedas-by-the-great-priests-

Research Paper written by London Swaminathan
Post No. 1331; Dated 6 October 2014.

உலகிலேயே மிகப் பழைய நூல் ருக் வேதம். இந்த இருக்கு வேதத்துக்கு கி.மு.1200 என்று மாக்ஸ் முல்லர் தேதி நிர்ணயித்தார். அதாவது 1200-க்கு முன்னால் இது இருக்க முடியும் ஆனால் 1200-க்குப் பின் இது இருக்கவே முடியாது என்றார். மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே ஆராய்ந்து கி.மு 6000 என்று முடிவுக்கு வந்தனர்.

துருக்கியில் பொகஸ்கோய் என்னும் இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த களிமண் பலகைக் கல்வெட்டில் ரிக் வேத கால தெய்வங்கள் வேதப் பாடலில் என்ன வரிசையில் சொல்லப்பட்டதோ அதே வரிசையில் காணக் கிடக்கின்றனர். இந்தத் தொல் பொருட்துறைத் தடயம் கி.மு. 1380 ஆம் ஆண்டுக்குரியது. ஆக வேதத்தை யாரும் இதற்குக் கீழே இழுக்க முடியாது. இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்தது என்பதே உண்மை.

வேதம் என்பது மிகப்பல ரகசியங்கள் நிறைந்தது. இதை நன்கு உணர்ந்த சங்க காலத் தமிழர்கள் இதற்கு பரம ரகசியம் “மறை’ என்று பெயர் சூட்டினர். இதை எழுதக்கூடாது என்பதால் சங்க காலத் தமிழர் இதற்கு எழுதாக் கற்பு என்றும் அழகான பெயரைச் சூட்டினர்.

வெள்ளைகாரர்கள் ஆராய்ச்சி செய்யும்வரை இதற்கு பெரிய மதிப்பு இருந்தது. அவர்கள் ஆராய்ச்சி செய்தவுடன் பல பொய்யுரைகளைப் பரப்பினர். மற்ற மதத்தினருக்கு எல்லாம் ஒரே ஒரு நூல்தான். அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க ஒரு சில மணி நேரம் போதும். ஆனால் இந்துக்களின் புனித நூல்களோ பசிபிக் மஹா சமுத்திரத்தைவிடப் பெரியவை. ஆகையால யாரும் எல்லாவற்றையும் படிக்க முடியாது. இதைப் பயன்படுத்தி பல பொய்க்கதைகளைக் கட்டிவிட்டனர். இன்றும் கூட வேதத்தையோ, மஹாபாரதத்தையோ, வால்மீகி ராமாயணத்தையோ முழுக்கப் படித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் நாற்பது ஆண்டுகளாகப் படித்துவருகிறேன். இன்னும் முடிந்த பாடில்லை. ஒன்பது திருமுறைகளைத் தமிழில் படித்தேன். அதில் கூட இன்னும் மூன்று திருமுறைகள் பாக்கி.

வேதம் பற்றி வெளி நாட்டினர் சொல்வதை நம்பக் கூடாது; அதை படிக்காமலேயே வெளி நாட்டினர் பெயரை மேற்கோள்காட்டி எழுதிவரும் திராவிடக் கோமாளிகள். மார்க்சிஸ்ட் கூத்தாடிகள், அதுகள், இதுகள் ஆகியோரை ஏன் நம்பக்கூடாது என்பதற்கு ஒரு நாலு வரி எடுத்துக்காட்டு தருகிறேன். இது போல நூற்றுககணக்கான ரகசியங்கள், புதிர்கள், விடுகதைகள் வேதத்தில் உண்டு.

ரிக்வேதத்தை பத்து மண்டலங்களாகப் பிரித்துக் கொடுத்தார் வியாசர் என்னும் மாமுனிவர். அவர் காலத்திலேயே இது கடல் போலக் கரை காண முடியாமற் போகவே அவர் கவலைப் பட்டு இவைகளைத் தொகுத்து வகுத்துக் கொடுத்தார். அந்த பத்து மண்டலங்களில் வாமதேவரிஷியின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நாலாவது மண்டலத்தில் உள்ளன. பல ஆய்வாளர்கள் இதுதான் மிகப் பழைய மண்டலம் என்றும் இன்னும் சிலர் இது பழமையான மண்டலங்களில் ஒன்று என்றும் பகருவர்.

vedic-mathes-001

இதிலுள்ள ஒரு பாடல் யாருக்கும் விளங்கவில்லை. எண்களை வைத்து வார்த்தா ஜாலம் செய்திருக்கிறார் புலவர் வாமதேவர். அவர் செய்த சொற் சிலம்பத்தை அவருக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த சிவவாக்கியர், திருமூலர் போன்ற தமிழ் சித்தர்கள் கூடப் பயன்படுத்தினர். அதாவது எண்களை வைத்து கவிதை அமைப்பர். அந்த எண்ணின் பொருள் என்ன என்பதை வியாக்கியானம் இல்லாமல் யாரும் அறிய முடியாது. இதோ வாம தேவரின் கவிதை:

அவருக்கு நான்கு கொம்புகள், மூன்று காலகள் அவரைத் தாங்கி நிறுத்தும். தலைகளோ இரண்டு, கைகளோ ஏழு! அவரை பிணைத்து இருப்பன மூன்று. அவர் பயன்கர சப்தத்துடன் செல்கிறார். அந்த மகத்தான கடவுள் மானிடருக்குள் புகுந்து விட்டார் – ரிக் வேதம் 4-58-3

இதற்கு வெள்ளைக்காரர்கள் பல விதமான பொருள் கூறினர். கிரிப்பித் என்பார் அவர்களின் கருத்துக்களை தொகுத்தளித்தார்.

வெள்ளைக்காரர்கள் எதற்கு வேதம் படித்தார்கள்?

இதில் பல்வகையான பேர்வழிகள் உண்டு. சிலர் நாடகம் சர்க்கஸ் பார்ப்பது போல வேடிக்கை பார்க்க வந்தோர்; இன்னும் சிலர் இதில் உள்ள அசிங்கங்களை உலகிற்குப் பறை சாற்றி இந்தியாவையும் இந்து மதத்தையும் வேருடன் பிடுங்கி எரிவேன் என்று வந்தனர். இன்னும் சிலர் ஏதொ பொழுது போவதில்லை, இதில் என்னதான இருக்கிறது என்று பார்ப்போமே என்று வந்தவர்கள்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயக் கிழகிந்திய கம்பெனியிடம் கூலி வாங்கிக் கொண்டு வேதங்களை மொழிபெயர்க்க வந்த மாக்ஸ் முல்லர் ஆரம்பத்தில் வேதங்களைப் பற்றி “கன்னா பினா மன்னார் கோவில்” — என்று எழுதினார்’ படிக்கப் படிக்க ஞான உதயம் ஏற்படவே நடையை மாற்றிக் கொண்டார். மெகாலே போன்றவர்கள், “இதோ பார், இதே வேகத்தில் ஆங்கிலக் கல்வி பரவினால் இந்து மதமும் இந்தியாவும் அழியும் பிறகு நம் ஆதிக்கம் ஓங்கும்” — என்று பகிரங்கமாக அறிக்கை விட்டனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். யார் இந்த அறிஞர்கள்? உலகில் இந்துக்களைத் தவிர வேறு யாரையும் சீண்ட அஞ்சும் கோழைகள்!! வேறு எந்த மத நூலையும் ஆராயத் துணியாத கூலிப் பட்டாளம். இந்துக்களை “காபிர்கள், பேகன்”கள் என்று எள்ளி நகையாடிய வம்சத்தினர்! உலகம் கி.மு 4100 ஆம் ஆண்டில் தோன்றியது என்று பரப்பியவர்கள்! மது,. மாது, மாட்டு மாமிசம் ஆகிய மூன்றிலும் ஊறியவர்கள். ஆக ஆரம்பத்திலேயே உள் நோக்கத்துடன் வந்தது தெள்ளிதின் விளங்கும்.

பல அறிஞர்கள் நேர்மையாக ஒப்புக் கொண்டனர்; இந்த வேதப் பாடலின் பொருள் தெளிவில்லை, இந்தப்பாடலின் பொருள் விளங்கவிலை, இது எங்களுக்கு சுத்தமாகப் புரியவில்லை. இதை சாயாணாச்சாரியார் இப்படி விளக்குகிறார். ஆனால் அப்படி இருக்குமா என்பது சந்தேகமே – இப்படி எல்லாம் எழுதி தங்கள் அறியாமையைப் பிரகடனப்படுத்தினர். அவர்களுக்கு இருந்த நேர்மை கூட வேதத்தை வியாக்கியானம் செய்ய வந்த மார்க்சிஸ்ட் கோமாளிகளுக்கும், திராவிட பஃபூன்களுக்கும் இல்லை.

Vedas flow chart
சாயனர் விளக்கம்

வேதத்துக்கு முதல் முதலில் முழு அளவு பொருள் எழுதத் துணிந்தவர் சாயனர் என்னும் 14ஆம் நூற்றாண்டு அறிஞர். வேதம் தோன்றியதாக வெள்ளைக்காரர் போட்ட கணக்கிற்கும் இவருக்கும் இடையில் 2600 ஆண்டு இடைவெளி! ஆக சாயனரே தவித்தார். ஆனால் சாயனர் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர். மற்ற அறிஞர்கள் இந்து மதத்தை தகர்க்க வந்தவர்கள்.

அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மஹிந்தரா என்ற அறிஞர் முயன்று பார்த்தார். இந்த நாலு வரிக்கு மட்டும் ஒவ்வொருவரும் சொல்லும் விளக்கத்தை பாருங்கள். பிறகு வெளி நாட்டுக் கோமாளிகள் எழுதிய நகைச் சுவைகளைப் படித்து நீங்கள் சிரித்து மகிழ ஆயிரக் கணக்கான பக்கங்கள் காத்துக் கிடகின்றன.

சாயனர் சொல்லுவார்:

இந்தப் பாடல் யாகத்தில் ஊற்றப்படும் நெய் அல்லது எண்ணை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
யாகம் என்று பொருள் கொண்டால் நான்கு கொம்புகள் என்பதை நாலு வேதங்கள் என்று கொள்ளலாம்;
மூன்று கால்கள் என்பதை நாள்தோறும் செய்யும் மூன்று யக்ஞங்கள் என்று கருதலாம்;
இரண்டு தலைகள் என்பதை பிரம்மோதன, ப்ரவர்க்ய சடங்குகள் என்று சொல்லலாம்;
ஏழு கைகள் என்பதை ஏழு யாப்பு அணிகள் என்று சொல்லலாம்
மூன்று பிணைப்புகள் என்பதை மந்த்ர, கல்ப, பிராமணங்கள் எனலாம்.

இதை ஆதித்யன் என்று பொருள் கொள்வோமானால்
நான்கு திசைகள், மூன்று என்பது காலை, மதியம், மாலை; இரண்டு என்பது பகலும் இரவும், ஏழு என்பது சூரிய ஒளியின் ஏழு நிறங்கள்; மூன்று பிணைப்பு என்பது பூர், புவ, சுவர்லோகம் எனப் பொருள் சொல்லலாம்.

இது சாயனர் வியாக்கியானம்.

rishi_vedas_text03

மகீதரர் சொல்வதாவது:
4 கொம்புகள்:–பெயர்ச் சொல், வினைச் சொல், முன்னிடைச்சொல், பின்/முன் ஒட்டு
3 கால்கள்:– மூன்று வேதங்கள், அல்லது 3 காலங்கள் அல்லது தன்மை, முன்னிலை, படர்க்கை
2 தலைகள்:– 2 யக்ஞங்கள் அல்லது செய்பவர், செயப்படு பொருள்
7 கைகள் :– 7 யாப்பு அணிகள் அல்லது 7 வேற்றுமை உருபுகள்
3 பிணைப்புகள்: 3 தினசரி யக்ஞங்கள் அல்லது ஒருமை, இருமை, பன்மை

வெளிநாட்டோர் விளக்கம்:

பேராசிரியர் வில்சன்: “வேத கால இரு பொருள் பேச்சுக்கும் தெளிவின்மைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வியாக்கியானக் காரகள் கஷ்டப்பட்டு பொருள் கறக்கிறார்கள். ( தனக்கு விளங்கவில்லை என்று ஒப்புக்கொள்ளாமல் வேத காலத் தெளிவின்மையைக் காட்டுகிறது என்று பழையை ரிஷிகள் மீது பழி போடுகிறார். இந்த அப்பாவி வில்சனுக்கு சிவவாக்கியர், திருமூலர், திருமழிசை ஆழ்வார் பாடல்கள் தெரியாது. பிழைத்தார்கள் தமிழ்ச் சித்தர்கள்!!!)

பேராசிரியர் லுட்விக்:–
சாயனர் இந்த ‘ரிக்’கின் முதல் வரிக்கே பல விளக்கங்களைக் கூறுகிறார். அதைத் திருப்பிச் சொல்லுவதில் பொருளே இல்லை. சம்பிரதாயமாக வரும் அர்த்தம் கூட நிச்சயமற்றதாக இருக்கிறது. சமுத்ரம் (கடல்), ஊர்மி (அலை) என்ற சொற்களுக்குக் கூட அவர் பலவிதப் பொருள்களை ‘’ இது அல்லது, அது அல்லது” என்று மாற்றி மாற்றிச் சொல்லிவருகிறார்.

இதை எல்லாம் தொகுத்தளித்த கிரிப்பித் இன்னும் ஒரு கருத்தை ஏ.ஹில்பிராண்ட் சொல்லியிரூபதையும் கோடி காட்டுகிறார்.

vedas music

இதிருந்து தெரிவதென்ன?

1.வேத கால இந்துக்கள் எழுத்தறிவற்ற காட்டுமிராண்டிகளோ மாடு மேய்க்கும் இடையர்களோ அல்ல. முழு முதற் கடவுளை உணர்ந்து மறை பொருளில் ஆடிப்பாடி மகிழும் பெரும் ஞானிகள் அவர்கள்
2.பிற்காலத்தில் திருமழிசை ஆழ்வார், சிவவாக்கியர், திருமூலர் போன்றோரும் வேத கால முனிவர் போல அடையாளபூர்வ, சங்கேத, பரி பாஷைகளைப் பயன்படுத்துகின்றனர். இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது வியப்பை ஏற்படுத்துகிறது.

3. வேதங்களுக்குப் பொருள் காண்பது மிகக் கடினம். சாயனர் போன்ற பெரியோர்களே இதுவா, அதுவா எனச் சந்தேகிக்கும் போது வெளியே இருந்து வந்த கலாசாரமே தெரியாத, மது, மாது, மாட்டு மாமிச அறிஞர் களையும், கடவுளே இல்லை — சமயம் என்பது ஒரு அபினி — புராண, இதிஹாசம் எல்லாம் வர்க்கப் போராட்டமே — என்று கூறும் அறிஞர்களையும் அவர்களுக்கு “உரிய இடத்தில்” வைக்கவேண்டும்.

4.சுதாச, திவோதாச என்னும் தாசர்கள் வேத காலத்தில் பெரிய பதவிகளில் இருக்கும்போது, தாசர், தஸ்யு, சிஸ்நதேவா: எனபதற்கு எல்லாம் விஷமத்தமான பொருள் கற்பிப்போர் ஏராளமான பாடல்களுக்குப் பொருள் தெரியாமல் திக்கு முக்காடி மூச்சுத் திணறிப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஆட்களின் பொய்மை வாதத்தின் பெயரில் ஒரு ஆரிய—திராவிடக் கொள்கை வேறு!!!

5.இந்த குறிப்பிட்ட நாலே வரிகளில் வரும் சமுத்ரம் (கடல்), ஊர்மி (பெண்களின் பெயர்; பொருள்: அலை) ஆகியவற்றை இன்றும் எல்லா இந்திய மொழிகளும் பயன்படுத்துகின்றன. ஆக வேத காலப் பெயர்களும் சம்ஸ்கிருதமும் நம் வீட்டு முற்றத்திலேயே இருக்கின்றன. அது செத்து விடவில்லை. கண்டி முதல் காஷ்மீர் வரை எல்லோரும் இந்திரன், இந்திராணி பெயர்ளை இன்றும் குழந்தைகளுக்கு சூட்டுவதை முன்னொரு கட்டுரையில் தந்துள்ளேன்.

6.ஆக “வேதத்திற்கு பொருள் காண முயற்சிப்பதைவிட அதன் மந்திர சப்தத்தில் நம்பிக்கை வை” — என்ற சம்பிரதாயத்தை ஏற்று இந்து மதத் தலைவர்கள் அதற்கு சொல்லும் பொருளையே ஏற்கவேண்டும்.
7.தமிழர்களாகப் பிரந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்: திருக்குறளில் இருப்பதெல்லாம் வேதக்கருத்துகள் என்று திருவள்ளுவ மாலை கூறுவதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாக எடுத்துரைத்தார். வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன் என்றும், தேவார திருவாசக கருத்தெல்லாம் வேதக் கருத்துகளே என்று நால்வரும் கூறுவதால் அவைகளும் வேதம் எனக் கொளல் சாலப் பொருத்தம்.

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — (பாரதியார்)
–சுபம்–

Leave a comment

5 Comments

  1. ஐயா
    வெளிநாட்டினரின் உரைகளை ஒதுக்கிவிடலாம். சாயனரும் மகிதரரும் ஒரே ரிக்கிற்கு வெவ்வேறு பொருள் கூறுகின்றனரே. இதற்கு முந்தைய மற்றும் அடுத்த பாடல்களுக்கு ஜம்புநாதனும் கிரிஃபிககும் கூறிய உரைகளை இத்துடன் தொடர்பு படுத்திப் பார்த்தேன். விளங்கவில்லை. வேதங்களைப் புரிந்துகொள்வது எப்படி.
    கோவிந்தஸ்வாமி

  2. Lohabi Raman

     /  October 7, 2014

    Dear Mr.Swaminathan

    Pranams to you. This is the first time I am talking to you over e-mail
    even though I am getting your articles for the past two months.

    I am from Pondicherry, India, interested in knowing our Hindu Dharma,
    I think the word Dharma includes everything in it. If I am wrong
    please correct me.

    This is an excellant article.

    I pray god to extend you the required health and wealth to continue to do more.

    Kind Regards

    K. Lohabiraman.

  3. Thanks, Lohabiraman.
    Thanks for your compliments and blessings.
    A lot to write.
    Please keep in touch

  4. Thanks for reading and commenting.
    It is very difficult to understand hundreds of hymns.
    It is same with Sangam Tamil literature which is ONLY 2000 yeasr old, where as Vedic hymns are at least 4000 years old.
    Without commentary we cant understand most of 2400 Sangam Tamil verses. Thank god, some one started writing commentaries from 8th century.
    But for Vedas, the commentary started only from 14th century, later than Tamil commentaries.
    I am NOT sure about the reason. Some people believed in the Sound effect rather than the meaning.

    My view is keep it intact in its original format. Someone like Adi Shankara will come one day and enlighten us.
    This is not my words. Kanchi Paramacgarya’s words. He gives a story for it.
    Very briefly, a blind man carries a lamp with him. People were laughing at him.
    You are blind. Why do you need a lamp?

    He replied “it is for you, otherwise you may fall on me”.
    We are blind, but yet we will carry the lamp of Vedas with us. One day someone will benefit out of it.

    But whatever Vedas said is in Tamil hymns. This is also not my view. These are the words of Saivite Nayanmars and Vasihnavite Alwars.

  5. Dear SAG

    I replied to you. But for some reason it is published here separately.
    Please read the reply which contains Kanchi Paramacharya’s analogy of a blind person carrying a lamp.
    Please keep reading and commenting.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: