Bilva Tree
Written by london swaminathan
Research article: 1601: Dated 25 January 2015
உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேஷியாவில் ஏராளமான இந்து மத அதிசயங்கள் உள்ளன. முஸ்லீம் நாட்டில் இந்து அதிசயங்கள் என்ற தலைப்பிலும் வினோதமான இடங்களில் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் என்ற தலைப்பிலும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினேன். அதில் எல்லா அதிசயங்களையும் பட்டியல் இட்டு விட்டேன. அவ்வப்பொழுது, பாலி தீவு, போரோபுதூர் போன்ற இடங்களுக்குச் சென்று வருவோர் ஏதோ தாங்கள் புதிதாகக் கண்டு பிடித்தது போல எல்லவற்றையும் மீண்டும் ஒரு முறை எழுதுவர். பலமுறை படித்தாலும் தவறில்லை. நிற்க.
இப்போது மேலும் ஒரு அதிசயத் தகவல் தெரிய வந்துள்ளது. வில்வ மரத்தின் பெயரில் அங்கே ஒரு ராஜ வம்சம் ஆட்சி செய்த தகவல் அது. மஜாபஹித் என்று அங்கே ஒரு ராஜ வம்சம் ஆண்டது. மஜாபஹித் என்றால் வில்வ மரம் என்று பொருள்.
வில்வ பத்திரம் (இலை) , சிவ பெருமானுக்கு உரியது. அதனால் பூஜை செய்வது மிக மிக விசேஷமானது. மேலும் வில்வ மரம் பல இடங்களில் தல மரமாகவும் உள்ளது. இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு. இருபதுக்கும் மேலான பாக்டீரியாக்களைக் கொன்றுவிடும் சக்தி இம் மரத்துக்கு இருப்பது அண்மைக் கால ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நேபாலத்தில் வசிக்கும் நீவார் இன மக்கள் கன்னிப் பெண்களை விலவம் பழத்துக்குக் கல்யாணம் செய்துவைக்கும் சம்பிரதாயம் இன்றும் உளது.
மரங்கள், கொடிகள் பெயர்களில் ஆட்சி செய்வது இந்தியாவில் புதிதல்ல. இந்திய வம்சங்களிலேயே மிகவும் பழமையானது இட்சுவாகு வம்சம்.இக்ஷ்சு என்றால் கரும்பு என்று பொருள். இதுதான் முதல் தாவரப் பெயரில் உண்டான வம்சம்.
இதேபோல பல்லவ (இளம் துளிர் அல்லது கொடி), சுங்க, கடம்ப வம்சங்கள் மரங்களின் பெயர்களில் அமைந்துள்ளன. இந்தப் பூமியில் உள்ள எல்லாக் கண்டங்களையும் முதலில் இந்துக்கள் ஜம்பூ (நாவலந்தீவு), சால்மலி (இலவ மரம்), குச (தர்ப்பைப் புல்), ப்லக்ஷ (அரச மரம்) என்று மரம், செடி, கொடிகளின் பெயர்களில் பிரித்தனர்.
இதைப் பார்த்து தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று செடி,கொடிகளில் பெயரில் நிலத்தைப் பாகுபாடு செய்தனர். தமிழர்கள் போருக்குச் செல்லும்போது கூட பூக்களை அணிந்து சென்றனர். சேர, சோழ பாண்டியர்கள் ஒவ்வொரு மரத்தின் பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்தனர்.
இதுதவிர ஒவ்வொரு தமிழ் மன்னரும் காவல் மரம் என்று ஊருக்கு வெளியே ஒரு மரத்தை அரசாங்கச் சின்னமாக வைத்து அதை பய பக்தியுடன் போற்றி வணங்கினர். அதாவது மரங்கள், செடி கொடிகள், பூக்கள் முதலியன உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் இந்துக்கள் இடையே முக்கியத்துவம் பெற்றன. இயற்கையோடு இயைந்த இந்துக்களின் வாழ்வுதான் இதற்குக் காரணம்.
இந்தோனேஷியாவில் வில்வ மரங்கள், ருத்ராக்ஷ மரங்கள், கற்பூர மரங்கள் சாம்பிராணி மரங்கள் ஆகியன உண்டு.
ஜெர்மானிய அறிஞர் பெர்தோல்ட் லோபர் (German Orientalist Bethold Laufer ) என்பவர் — மஜாபஹித் என்பது கசப்பான மஜ (வில்வ) மரம் என்று பொருள்படும் என்றார்.அதன் மற்ற பெயர் வில்வ என்பதும் அவர்களுக்குத் தெரியும் இதன் தாவர இயல் பெயர் Aegle marmelos (another name Wilwa tikta)
மேலும் மஜபஹித் இந்திய ஆண்டான `சக வருஷம்` என்பதையே பயன்படுத்தினர். 1293 முதல் 200 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். முதல் மன்னரின் பெயர் ஜயவர்த்தன. அவனுடைய மஹாராணிகளின் பெயர்கள்: த்ரிபுவனேஸ்வரி, நரேந்திரதுஹித, ப்ரக்ஞாபரமித, காயத்ரி ராஜபத்னி.
கடம்ப மரத்தை அறியாதோர் இலர். மதுரை நகரம், ஒரு காலத்தில் கடம்ப வனக் காடாக இருந்தது. இந்த மரத்தின் பெயரில் கடம்ப வம்சம் உருவானது.
இக்ஷ்வாகு வம்ச மன்னன் கரும்புப் பயிரை முதல் முதலில் பயிரிட்டு வெல்லம், சீனி செய்யும் முறையை கற்பித்தான். சிந்து சமவெளியிலும் சீனி காணப்படுவதால், இக்ஷ்வாகு அதற்கும் முன்னால் வாழ்ந்திருக்க வேண்டும். இவனை ஆய் குல மன்னர்களின் முதல்வனாகக் கருதலாம். கரும்பைக் கொண்டுவந்தவன் வழிவந்தவன் என்று அவ்வையார், புற நானூற்றில் பாடுகிறார்.
References to Plants:
Cadamba tree= Neolamarckia cadamba
Sugarcane= Saccharum officinarum
Holy Bael/Bilva = Aegle marmalos
Jambu dweepa= Blackberry Tree
Plaksha dweepa = Ficus tree
Pushkra dweepa = Maple tree
Kusa dweepa = Dharba grass
Shalmali dweepa = Bombax ceiba or malabaricum
Please read my articles
Tamil King who ruled Vietnam
http://swamiindology.blogspot.co.uk/2011/09/pandya-king-who-ruled-vietnam.html
Hindu wonders in a Muslim country
https://tamilandvedas.com/2012/05/12/hindu-wonders-in-a-muslim-country/
Flowers in Tamil Culture
https://tamilandvedas.com/2012/08/25/flowers-in-tamil-culture/
Sanskrit Inscriptions in Strange places
https://tamilandvedas.com/2012/03/16/ancient-sanskrit-inscriptions-in-strange-places/
The Sugarcane Mystery: Indus Valley and Ikshwaku Dynasty
http://swamiindology.blogspot.co.uk/2011/11/sugarcane-mystery-indus-valley-and.html
இக்கட்டுரைகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன.
-சுபம்-
Pictures are taken from Wikipedia and other sites;thanks.
You must be logged in to post a comment.