சம்ஸ்கிருத எதுகை அகராதி!

சம்ஸ்கிருத எதுகை அகராதி!

Compiled by London swaminathan

Article No.1843 Date: 3 May 2015

Uploaded at London time: 23-47

ஊத்தங்கரை ஏ ஆர் அப்பாய் செட்டியாரின் தமிழ் எதுகை அகராதி பற்றி சின்னாட்களுக்கு முன் எழுதினேன். இதே போல பிரபல சங்கீத சாஹித்யகர்த்தா, பாடல் ஆசிரியர், நடிகர், இசை அமைப்பாளரான பாபநாசம் சிவன் அவர்களும் வடமொழிச் சொற்கடல் என்ற பெயரில் சம்ஸ்கிருத எதுகை அகராதி தயாரித்து வெளியிட்டார். இதை அவர் தயாரிக்க எட்டு ஆண்டுகள் ஆயின. இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1954-ல் வெளியானது.

சம்ஸ்கிருதம் கற்க விரும்போருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஏற்கனவே சம்ஸ்கிருதம் அறிந்தோருக்கு அச்சொற்களைத் திறம்பட பயன்படுத்தும் வகையிலும் தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் அவரோ தன்னடக்கத்துடன் பெரிய கடலை ஒரு சிறு கரண்டியால் அளக்க முயல்வதாக முகவுரையில் எழுதியுள்ளார். தான் எழுதியதைக் கட்டி ஆற்றில் எறிந்துவிடலாமா என்று எண்ணியிருந்த சமயம் டாக்டர் வீ ஆர் மூர்த்தி இதை வெளியிட உதவிசெய்ததாகவும் நன்றிப் பெருக்குடன் கூறியுள்ளார்.

அதில் ஓரெழுத்துக்கான சம்ஸ்கிருதப் பொருளை மட்டும் இன்று காண்போம்; இதில் சம்ஸ்கிருத நாகரி லிபியில் சொற்களும் அதற்கான பொருள் தமிழிலும் கொடுத்திருப்பது எல்லோருக்கும் பயன்  தரும்:

அ- மங்களகரமான முதல் எழுத்து; எதிர்மறை

உ- ஐயக்குறி, வினாக் குறி

கு- இழிவு, கொஞ்சம்

து- பிரித்தல்

ந – இல்லை

நி- இன்மை, மிகவும்

னு- ஐய வினா

வ- போல

வி-வெறுப்பு, விரோதம், விசேஷம்

சு-நன்மை, நன்றாக

ஹ-வியப்பு,துயரம்

ஹி-அல்லவா

(இவை யாவும் அவ்யயம் எனப்படும்)

ஆ-வியப்பு

ஓ-விளி,வியப்பு

கா-எவள்

ஜா-பிறந்தவள்

நா-மனிதன்

நோ-இல்லை

பா-ஒளி

போ-விளி

மா-தகாது, லெட்சுமி

மே-எனக்கு, ஆட்டின் குரல்

யா-யாதொருவன்

ரே-விளி

வா-அல்லது

வை-உறுதி

சா-அவள்

ஹா-ஐயோ

ஹீ-ஆச்சர்யம்

ஹே-விளி

ஜம்-காற்றொளி

டம்-நாணொலி

பம்-நட்சத்திரம்

சம்-நன்றாக

ஸம்-சுகம்

ஹும்-அச்சுறுத்தல்

அ:-பிரமன்,விஷ்ணு,சிவன்

இ:-இந்திரன்

உ:-சிவன்

க:-பிரமன்

க:-எவன்

கு:-பூமி

கி:-விழுங்குதல்

ஜ:-பிறவி

ய:எவனொருவன்

வி:-பறவை

ஸ:-அவன்

ஆ:-வியப்பு, வேதனை

ஊ: பெருக்கம்

கீ: சொல்

கௌ: பூமி, பசு

ஜூ: ஜுரம், வானம், பிசாசு,வாணி,வாயு

தூ: வேகம்

தீ: புத்தி

தூ: சுமை

பா: ரட்சிப்பவன்

பூ: பூமி

பீ: அச்சம்

மா: தடுத்தல்

மூ: மூர்ச்சை

ரா: ஐச்வர்யம், அக்னி

வா: ஜலம்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: