இந்தப் பூவுலகில் யாராலும் வேதங்களின் காலத்தை சொல்லமுடியாது: மாக்ஸ்முல்லர்

சிந்துவெளி ஆண் மிருகங்கள்

சிந்து வெளி முத்திரைகளில்,  ஆண் மிருகங்களின்  ஆதிக்கம்

Compiled by London swaminathan

Article No.1902; Dated 1 June 2015.

Uploaded at London time: 9-23 am

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் — இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்.

 

நாவினில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை

வீழ்த்திடும் தோளுடையாள். –பாரதியார்

 

பாரத அன்னையைப் புகழ்ந்த பாரதியார், உடனே அவள் நாவினில் வேதம் உடையவள் என்று சொல்லி, பாரதம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது வேதமும் என்பதை உறுதிபடக் கூறுகிறார்.

எக்காலத்தும் இந்தியாவுக்கே வராமல், இங்கிலாந்தில் இருந்துகொண்டே வேதத்தை மொழிபெயர்த்த ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர், வேதங்களின் காலம் கி.மு.1200–க்கு முன்னதாக இருக்கலாம் என்று சொன்னார். உடனே அதை எதிர்த்து அறிஞர் உலகம் போர்க்கொடி உயர்த்தியது. இப்படி போர்க்கொடி உயர்த்தியவர்களும் மேலை நாட்டவரே! வில்சன், பார்த்தலேமி, செயின்ட் ஹில்லேர், விட்னி, கோல்ட்ஸ்டக்கர் (Wilson, Barthelemy, St.Hillaire, Whitney, Goldstucker)

போன்றோர் மாக்ஸ் முல்லர் கருத்தை ஏற்கவில்லை. உடனே மாக்ஸ்முல்லர் ஜகா வாங்கினார். அறிஞர்கள் அனைவர் சொல்லுவதையும் நான் அப்படியே ஏற்கிறேன். நான் கி.மு.1200–க்கும் கீழாக யாரும் வேதத்தைக் கொண்டுவரக்கூடாது என்று சொன்னேனே தவிர, அதுதான் வேதத்தின் காலம் என்று சொல்லவில்லை என்றார்.

ரிக் வேதத்தில் இருக்கும்  வான சாத்திரக் குறிப்புகளைக் கொண்டு, மாக்ஸ் முல்லருக்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே ஆராய்ச்சி மேற்கொண்ட, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் (Tilak 1904, Jacobi 1894) வேத காலத்தை கி. மு 4000 என்று காட்டினர்.

17ef9-vedapatam

Max Muller:–

I need hardly say that I agree with every word of my critics. I have repeatedly dwelt on the hypothetical character of the dates., which I ventured to assign to the first periods of Vedic literature; all I have claimed for them has been that they are the minimum dates………………

If now we ask how we can fix the dates of these three periods, it is quite clear that we cannot hope to fix a terminum a qua. Whether the Vedic hymns were composed 1000 or  1500 or  2000 or 3000 years BC, NO POWER ON EARTH WILL EVER DETERMINE” (Max Muller 1890)

ஆனால் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆரியர்கள் வந்து, கறுப்புத் தோலுடைய பூர்வ குடிமக்களை விரட்டி விட்டதாக நீண்ட நெடுங்காலமாகப் பிரசாரம் செய்துவந்தனர். இந்தப் பிரசாரம் 200 வருடங்கள் நடந்தபின்னர் 1920 ஆம் ஆண்டுக்குப் பின், சிந்து வெளியில் இரண்டு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது”. பார்த்தீர்களா, நாங்கள் அன்றே சொன்னோம். ஆரியர்கள் வந்து இந்த மக்களை விரட்டினார்கள் என்று. இது உண்மையானது என்பதற்கு சான்று கிடைத்துவிட்டது என்றனர். ஆக மீண்டும் எல்லோரும் வேதத்தின் காலம் கி.மு. 1200 என்று எழுதத் துவங்கினர். இப்பொழுது இது எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டது.

காரணம்?

சிந்து சமவெளியில் ஒரு திராவிடர் எலும்புக்கூடு கூட கிடைக்கவில்லை! கிடைத்தது எல்லாம் ஆரிய எலும்புக்கூடுகளே. அதுவரை ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் எலும்புக்கூடு விஷயத்தில் கப்புச்சிப்பு என்று வாய் மூடி மௌனம் ஆகிவிட்டனர். கிடைத்த எலும்புக்கூடுகள் எல்லாம் பஞ்சாபியரை போல அந்த இடத்து மக்களின் உடல் ஆகிருதி உடையவர்கள். வேறு சிலவும் உண்டு. ஆனால் திராவிடம் இல்லை. கிடைத்த எலும்புக்கூடுகளும் மிகச் சில. ஆரியர்கள் படுகொலை நடத்தியிருந்தால். பல்லாயிரம் திராவிட எலும்புக்கூடுகள் இருக்க வேண்டுமே என்று யாரவது ஒரு சிலர் கேட்டு விடப் போகிறார்களே என்று எண்ணி, திராவிடர்கள், பயந்துகொண்டு 3000 மைல்களுக்கு ஓடிப் போய் தமிழ் நாட்டில் உகார்ந்து கொண்டனர் என்று சொல்லி திராவிடர்களுக்கு அதி பயங்கரக் கோழை என்று பட்டமும் சூட்டினர்.

சிந்து சமவெளிப் பகுதியில் ஆராய்சி நடத்திய ஜான் மார்ஷல் போன்றவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லுவதா, மதப் பிரசாரகர்கள் என்று சொல்லுவதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது ஆராய்ச்சியாளர்கள் யாரும் 30 எலும்புக்கூடுகளைப் பார்த்துவிட்டு இந்திரன் குற்றவாளி என்று சொல்லமாட்டார்கள். ஒரு ஆரய்ச்சியளனுக்குள்ள மனப் பக்குவம் இல்லாத இனவெறியன் என்பது இதன் மூலம் சொல்லாமலே விளங்கும்!

vedic fire altar.chattisgarh

வேத யாக குண்டம், சட்டிஷ்கர்

மேலும் இப்பொழுது சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் மர்மச் சின்னம் சோம ரசம் வடிகட்டும் பாத்திரம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இதுவரை சிறிதும் பெரிதுமாக 2000 சிந்து வெளி நகர, கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. மேலும் சரஸ்வதி நதியின் காலமும் அது மறைந்த காலமும் தெரிந்துவிட்டதால், வேதங்களின் பழமையும் குறைந்தது கி.மு 1700 என்று இந்துமத எதிரிகளும் ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டனர்.

மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி.மு 2000 வாக்கிலேயே உள்ளன. இவர்கள் யாரைக் கண்டு பயந்து கி.மு 2000 வாக்கில் அவ்வளவு பெரிய மதில் சுவர்களை எழுப்பினர்? ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா?

மேலும் காலிபங்கன், லோதல், டோலவீரா முதலிய பல இடங்களில் யாக குண்டங்கள், கருகிய ஹோம சாம்பல் ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.

எல்லா இடங்களிலும் ஏன் முத்திரைகள் கிடைக்கவில்லை? கிடைத்த எல்லா முத்திரைகளிலும் மிருகங்களின் ஆண் வகை மட்டும் காணப்படுகிறதே? இவர்கள் பெண்களை எதிர்க்கும் அல்லது மட்டம் தட்டும் கும்பலா? ஆயிரத்துக்கும் அதிகமான சின்னங்களில் காளைச் சின்னத்தைப் பொறித்த மக்கள் ஏன் பசுமாட்டைப் பொறிக்கவில்லை? ஒருவேளை புனிதச் சின்னம் என்பதால் பசுவை விட்டு விட்டனரா? குதிரை எலும்புகள் கிடைத்தபோது மட்டும் அது மேல் மட்டத்தில் கிடைத்தது என்று சொல்லிவிட்டு, முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைதது பற்றி மௌனம் சாதிப்பது ஏன்? இப்படிப் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

ஒட்டுமொத்த முடிவுரை:

1அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. வேதகால இந்துக்கள்.

2.அவர்களில் இப்பொழுது இந்து மதத்தில் இருப்பது போலவே பலதரப்பட்ட மக்கள் இருந்தனர். சிலர் கிராமதேவதைகளை வழிபடுவது போல பெண் தெய்வங்களையும் மற்றும் பலர் ஆண் தெய்வங்களையும் வணங்கினர்.

3.ஒர்புறம் கந்தர்வர்கள் ஆதிக்கம் இருந்ததால் இசை, நடனம் ஆகியன வளர்ந்தன.

4.உலகிலுள்ள எல்லா பழைய நாகரீகங்களிலும் பெரிய கோவில்கள்/ வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. ஆனால் சிந்து வெளியில் அப்படி இல்லை. ஆகவே அது வேத காலத்தை ஒட்டிய– பெரிய கோவில்கள் இல்லாத நாகரீகமே

5.ஹரப்பா நகரத்தில் பல இன மக்கள் வசித்தது குறித்து 2013-ல் நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையையும் வெளியிட்டு இருக்கிறது.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: