தமிழ்க் கவிதை வடிவில் ரிக் வேதம்! ஒரு அரிய நூல்!!

IMG_4092

Compiled by London swaminathan

Article No.1912; Dated 5 June 2015.

Uploaded at London time: காலை 11-26

தமிழில் வேதங்கள் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது மணக்கால் ஆர். ஜம்புநாதன் பெயர்தான். நான்கு வேதங்களை மொழிபெயர்த்த மஹத்தான சாதனை புரிந்தவர். தமிழ்நாட்டின் சாயணர் அவர். தமிழ் கூறு நல்லுலகம் அவருக்கு என்றும் கடமைப் பட்டுள்ளது. ஆனால் மிக வியப்பான விஷயம் அவருக்கு மிகவும் முன்னதாக நீலகிரி குன்னூரில் இருந்து சிவத்தியாநாநந்த மகரிஷி தமிழில் ரிக் வேதத்தை வெளியிட்டிருக்கிறார். அதுவும் மிக, மிக வியப்பான விஷயம் கவிதை வடிவில் அதை வெளிட்டிருக்கிறார்!!

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள அரிய புத்தகங்களைப் புரட்டுகையில் முதல் ஐந்து மண்டலங்கள் கிடைத்தன. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உண்டு. அவை சம்ஸ்கிருதத்தில் கவிதை வடிவில் உள்ளன. இப்பொழுது அனைவரும் ரிக் வேத காலம் கி.மு.1700 என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். 3700 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு நூல் உண்டானதும் அதை வாய்மொழியாகவே ஒரு சொல் மாறாமல் இன்றுவரை ஓதி வருவதும் உலக மஹா அதிசயம்! இதை “அ” என்னும் எழுத்தில் துவக்கி “அ” என்னும் மந்திரத்தில் முடிப்பதும். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று கடைசி மந்திரத்தில் பிரார்த்திப்பதும் இலக்கிய உலகின் முதல் அதிசயம். வேதங்களைத் தொகுத்த வியாசர் அதை கடைசி செய்யுளாக வைத்தது பாரதீய சிந்தனைப் போக்கின் வழியை உணர்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம்

IMG_4127

யார் இந்த சிவத்தியாநாநந்த மகரிஷி?

இவர் 1918 முதல் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து பொழிப்புரையாக எழுதி அதே நேரத்தில் கவிதையாகவும் கொடுத்துள்ளார். பிற்காலத்தில் சென்னையில் இதை வால்யூம்களாக வெளியிட்டுள்ளார். அதில் முன்னுரையில் மூன்று பேருக்கு நன்றி கூறுகிறார்.” “தமிழில் இதை என்னை மொழிபெயர்க்கத் தூண்டிய திருக்கோணமலை திருவாளர் கனகசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும், அந்நூல் ரிக் வேதமாக இருக்க என்னைக் கட்டாயப் படுத்திய எனது மனையாள் ஸௌ.ஜானகியம்மா ளுக்கும், ஸாயண பாஷ்யம் வாங்கி உதவிய ஸ்ரீமான்.கிருஷ்ணஸ்வாமி நாயக்கரவர்களுக்கும் இத்தமிழுகம் நன்றிக்கடப்பாடு உடையதென்பதை அறிவித்துக் கொள்ளுகின்றேன்” – என்று எழுதியுள்ளார்.

இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மூன்றிலும் புலமை உடையவர் என்பது இந்த மொழி பெயர்ப்பிலிருந்து தெரிகிறது. 1918 ல் குன்னூர் ஆநந்தாஸ்ரத்தில் துவங்கிய பணி 1937ல் சென்னையில் நீடித்ததுவரை புத்தகங்கள் மூலம் அறிய முடிகிறது. 1919-20 வாக்கில் அவருடன் ஆர்.ராமசந்திர சாஸ்திரியும் சேர்ந்து கொண்டு கிருஷ்ண யஜூர் வேதத்தை மொழி பெயர்த்து இருக்கிறார். அதுவும் 1919 முதல் வந்திருக்கிறது.

IMG_4129

தமிழ்க் கவிதை வடிவிலான இந்த ரிக் வேத மொழிபெயர்ப்பு தமிழ் நூல் வெளியீட்டில் ஒரு மைல் கல் என்றே சொல்வேன். இது சென்னை கன்னிமரா நூல்நிலயம் போன்ற இடங்களில் கிடைத்தால் மறு பதிப்பு செய்ய வேண்டியது தமிழர்தம் கடமையாகும். அதுவே அவருக்கும் அவரை இப்பணியில் தூண்டியோருக்கும் நாம் செலுத்தும் நன்றியாகும்.

இத்துடன் மொழிபெயர்ப்பு மாதிரிகளையும் இணைத்துள்ளேன். இதைப் படித்து  அனுபவிக்க அக்னிமீளே புரோகிதம் யக்ஞஸ்ய தேவம்ருத்விஜம். ஹோதாரம் ரத்ன தாதமம்—என்று துவங்கும் ரிக்வேததை நாம் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

IMG_4106

துரதிருஷ்ட வசமாக, வேதம் அத்தியயனம் செய்த பிராமணர்களைத்தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. வேதங்களைப் பற்றி வெளிநாட்டு வெள்ளையர்களும், உள்நாட்டுத் திராவிடங்களும், மார்கஸீயவா(ந்)திகளும் சொன்ன எதிர்க்கருத்தை மட்டுமே சுவைத்த தமிழர்களுக்கு இது விளங்கக் கொஞ்ச காலம் பிடிக்கும்.

IMG_4107

வாழ்க சிவத்தியாநாநந்த மஹர்ஷி. வளர்க அவர் புகழ்.

IMG_4108

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: