இந்துக்கள் கருத்து: டாக்டர்கள், வழக்கறிஞர்கள் பற்றி!

doctor

Research Article No.1995

Written  by London swaminathan

Date 15th July 2015

Time uploaded in London: 18-49

நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் – அர்த்த சாஸ்திரம் 3-20-24

எந்த ஒரு அரசன் சட்டப்படி, நியாயமாகக் குடிமக்களைப் பாதுகாக்கிறானோ அவன் சொர்க்கத்துக்குச் செல்லுவான்; அநியாய தண்டனைகள் விதிக்கும் அரசன்/நீதிபதி சொர்க்கத்துக்குச் செல்லமாட்டான் – அர்த்த சாஸ்திரம் 3-1-41

குற்றத்துக்கு ஏற்ற தண்டனை தருவதும், தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும்,  தன் மகனேயானாலும் தண்டிப்பதுமே இவ்வுலகத்தையும் மேலுலகத்தையும் காக்கின்றன – அர்த்த சாஸ்திரம் 3-1- 42

டயோஜெனிஸ் என்ற கிரேக்க தத்துவமேதை 2300 ஆண்டுகளுக்கு முன்னர், டாக்டர்களைப் பற்றியும், வழக்கறிஞர்கள் பற்றியும் என்ன சொன்னார் என்று நேற்று பார்த்தோம். அதாவது,

டாக்டர்கள் = உயிர் பறிக்கும் யம தர்மர்கள்

வக்கீல்கள் = பணம் பறிக்கும் கொள்ளைக்காரர்கள்

என்ற கருத்து அந்தக் காலத்திலேயே அங்கு இருந்தது.

நமது நாட்டில் டாக்டர்கள் பற்றியும், நீதித் துறை அறிஞர்கள் பற்றியும் மிக உயர்ந்த கருத்தும் மரியாதையும் இருந்தது. நீதித்துறையில் வழக்கறிஞர்கள் என்ற பிரிவு இருந்ததற்கான குறிப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை. நீதித்துறை பற்றி மனுதர்ம சாத்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. கௌடில்யர் ( சாணக்கியர்)  எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் மூன்று, நான்காவது அத்தியாயங்களில் டாக்டர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மிகவும் அதிசய விஷயம் அந்தக் காலத்திலேயே நுகர்வோர் பாதுகாப்பு இருந்திருக்கிறது. இதெல்லாம் இப்பொழுதுதான் மேலை நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. நிறைய பேர் டாக்டர்கள் மீதும், ஆஸ்பத்திரிகள் மீதும் மில்லியன் கணக்கில் பணம் கேட்டு வழக்குப் போட்டபின்னர் இதையெல்லாம் மேலை நாட்டில் கொண்டுவந்தனர்.

இந்துக்களின் யஜூர் வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில், சிவபெருமானையே டாக்டர் (பிஷக்) என்று போற்றுகின்றனர். இது போல மற்ற கடவுளருக்கும் அடைமொழி இருப்பதை முன்னரே கொடுத்துள்ளேன்.

medicalstamps1

அர்த்தசாத்திரம் சொல்லுவதாவது:

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாதான் உலகிலேயே நாகரீகம் வாய்ந்த நாடு- பணக்கார நாடு என்று எனது 1800 கட்டுரைகளிலும் ஏராளமான சான்றுகலைக் கொடுத்துவிட்டேன். புறச் ச்சுழல், நுகர்வோர் பாது காப்பு என்பதெல்லாம் அப்போதே நாம் விவாத்தித்த தலைப்புகள்:

“நோயாளியின் உயிருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சிகிச்சையாக இருந்தால் முதலில் அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே சிகிச்சையைத் துவக்க வேண்டும்.சிகிச்சை காரணமாக நோயாளி இறந்தாலோ, உடலூனம் அடைந்தாலோ டாக்டருக்கு தண்டணை கொடுக்க வேண்டும்” – 4-1-56

“நோயாளிக்கும் இது பற்றி சொல்லவேண்டும் அல்லது மேற்கண்டவாறு டாக்டருக்கு தண்டனை உண்டு. ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தினால் என்ன தண்டனையோ அதே தண்டனை தரவேண்டும்”

காயமடைந்த அல்லது விஷ உணவினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்குச் சிகிச்சை தருவதற்கு, ஒரு வீட்டிற்கு டாக்டர் சென்றால், அது பற்றி கண்காணிப்பு அதைகாரிகளான கோப அல்லது ஸ்தானிக- ருக்கு அறிவிக்க வேண்டும் – 2-36-10

இது போன்ற கடுமையான விதிகள் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறையில் இருந்ததால், டாக்டகள் எல்லோரும் ஒழுங்குக் கட்ட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்.

21  Pirmoji širdies operacija

சில பழமொழிகள்:

வைத்யே க்ருஹச்தே ம்ரியதே கதன்னு

டாக்டர் வீட்டில் இருக்கும்போது மரணம் எங்கே வரும்?

ஆனால் அனுபவமில்லாத , தாமதமாக வரும் டாக்டர்கலைக் கண்டிக்கும் பழமொழிகளும் இருந்தன:

அனுபவ ரஹிதோ வைத்யே  லோகே நிஹந்தி ப்ராணின: ப்ராணான்

அனுபவமில்லாத மருத்துவன் உயிரை வாங்கிவிடுவான்

சீர்ஸே ஸர்ப: தேசாந்தரே வைத்ய:

தலைக்கு மேலே பாம்பு தொங்குகிறது, மருத்துவரோ எங்கோ இருக்கிறார்.

ஹத்வா ந்ருனாம் சஹஸ்ரம் பஸ்ச்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரைக் கொன்றவனே (அரை) வைத்தியன்.

அதாவது மருத்துவர்கள், தவறுகளின் மூலமும், அனுபத்தின் மூலமும் பாடம் கற்கிறார்கள்.

judiciary 2

நீதித்துறை பொன்மொழிகள்

சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் தவறிழைப்போருக்கான (3-11) தண்டனைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

நீதி மன்றத்துக்கு விசாரணைக்கு வரும் அரசன் புரோகிதர்களுடனும் ஆலோசகர்களுடனும் தகுத உடையில் வரவேண்டும் (மனு ஸ்மிருதி 8-1)

18 வகையான குற்றங்கள் இருக்கின்றன (இந்தப் பட்டியல் எட்டாம் அத்தியாயத்தில் உள்ளது). அரசன் நீதி வழங்கவரவில்லையானால், புரோகிதர்களையும், மூன்று நீதிபதிகளையும் அனுப்ப வேண்டும்(மனு ஸ்மிருதி.

பொய்ச்சாட்சியம் கொடுப்பவன் குற்றவாளி

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண், வாய் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்,தனை அறியாது செய்யும் சேட்டைகள், அபிநயம், பேச்சு, நடை ஆகியன குற்றவாளியைக் காட்டிவிடும். (மனு ஸ்மிருதி 8-25/26)

அரசனோ அல்லது அவனது சுற்றத்திலுள்ள ஒருவரோ வழக்கு தொடர முடியாது. அதுபோல பிறர் கொண்டுவந்த வழக்கையும் விசாரிக்காமல் ஒதுக்கமுடியாது.

வேட்டைக்குச் செல்லுபவன் எப்படி, காலடிச் சுவடு, ரத்தக் கறை ஆகியவற்றைக் கொண்டு மிருகத்தைக் கண்டுபிடிப்பானோ அதுபோல அரசனும் ஊகத்தின் மூலம் உண்மையைத் தொடரவேண்டும்.

அரசனே விசாரிக்கையில், சாட்சியங்கள், வழக்கின் தன்மை, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை அறியவேண்டும். (மனு ஸ்மிருதி 8-44/46)

judiciary

அந்தக் காலத்தில் நீதித்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், தண்டனை வழங்குவோர், போலீஸ் ஆகியோர் இருந்தனர். ஆனால் வழக்கறிஞர்கள் என்பவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. மருத்துவத் துறையில் டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர்கள் இருந்தது திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரம் மூலம் தெரியவருகிறது.

swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: