Article No.2011
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 23 July 2015
Time uploaded in London : காலை 8-01
கல்யாணம் என்று வந்தால் யாருக்கு எதில் ஆசை? என்ன எதிர்பார்க்கிறார்கள்? நம் முன்னோர்கள் பாடிய பாட்டு என்ன தெரியுமா?
பெண்ணுக்கு ஆசை – கணவன் அழகாக இருக்க வேண்டும்
அம்மாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல பணக்காரராக இருக்க வேண்டும்
அப்பாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்
உறவினர்களுக்கு ஆசை – நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்
அழைப்புக்கிணங்கி வந்தோருக்கு ஆசை – நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும்.
கன்யா வரயதே ரூபம், மாதா வித்தம், பிதா ஸ்ருதம்!
பாந்தவா: குலம் இச்சந்திமிஷ்டான்னமிதரே ஜனா:!!
நல்ல மனைவி யார்?
ஐந்து ‘ல’காரம் இருந்தால் போதும்; நீங்கள் நல்ல அதிர்ஷ்டசாலிதான்! ஐந்து ல- காரம் என்றவுடன் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சிணை என்று நினைத்துவிடாதீர்கள். அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. கீழ்கண்ட ஐந்து ல, லா – வேண்டும்:-
அனுகூ’லா’ = நன்மை செய்பவர்
விம’லா’ங்கி = நாணம் உள்ளவர்
கு’ல’ஜா = உயர்குலப் பெண்; அதாவது பண்புமிக்க குடும்பப் பெண்
குச’லா’ = திறமைசாலி
சுசீ’லா’ = நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்
அனுகூலாம் விமலாங்கிம் குலஜாம் குசலாம் சுசீலசம்பன்னாம்
பஞ்ச லகாராம் பார்யாம் புருஷ: புண்யோதயா லபதே
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
மாப்பிள்ளைக்கு எதனால் மதிப்பு?
இதேபோல மாப்பிள்ளைக்கோ அல்லது எந்த ஒரு மனிதனுக்கோ, மதிப்பளிக்கக்கூடிய ஐந்து ‘வ’கார அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன:–
வஸ்திரம் / உடுப்பு
வபுஷம் / உருவம்
வாக் / உரைத்தல் (பேசுதல்)
வித்யா/ கல்வியறிவு
விநய/ பணிவு
வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச
வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம்
வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!
You must be logged in to post a comment.