Article No. 2069
Written by London swaminathan
Date : 14 August 2015
Time uploaded in London :– 16-18
(Pictures are used from various sources)
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்
மிக வியப்பான விஷயம்! பாரதியார் இறந்து (1921) கால் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் இந்தியா சுதந்திரம் (1947) அடைந்தது. ஆயினும் அவருடைய தீர்க்க தரிசனப் பார்வை, சுதந்திர பாரதத்தைக் கண்டுவிட்டது. அவரது பாடல்களைப் படிக்கையில் இது நன்கு விளங்கும்.
சுதந்திரம் குறித்தும் அவர் காலத்தில் இருந்த இந்திய தேசியக் கொடி பற்றியும் அவர் பாடிய (( தாயின் மணிக்கொடி பாடலும்)) பாடல்கள் நமக்கு இந்திய வரலாற்றைக் – குறிப்பாகக் கொடியின் வரலாற்றைக்— கூறும்.
இதோ பாரதி கூறிய சுதந்திரப் பொன்மொழிகள்:—
1.ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம் – பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் -(பாரதி)
2.வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம் (பாரதியார்)
3.வெற்றி கூறுமின்! வெண் சங்கூதுமின்
கற்றவராலே உலகு காப்புற்றது
பாரிலுள்ள பல நாட்டினர்க்கும்
பாரத நாடு புது நெறி பழக்கல்
உற்றதிங்கிந்நாள், உலகெலாம் புகழ (பாரதியார்)
4.ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ, ஓங்குமினோ
தீது சிறிதும் பயிலாச் செம்மணி மாநெறி கண்டோம்
வேதனைகள் இனி வேண்டா; விடுதலையோ திண்ணமே (பாரதியார்)
5.தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரை\
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது வந்த மாமணியைத் தோற்போமோ? (பாரதியார்)
நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
6.நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
ஏலு மனிதர் அறிவையடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலகம் மீதில் அச்சம் ஒழிகவே (பாரதியார்)
7.வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார்)
8.வந்தேமாதரம் என்று உயிர் போம்வரை
வாழ்த்துவோம் – முடி – தாழ்த்துவோம்
எந்த மாருயிர் அன்னையை போற்றுதல்
ஈனமோ? அவ – மானமோ? (பாரதியார்)
9.எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு (பாரதியார்)
10.தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து
பணிந்து புகழ்ந்திட வாரீர்!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேல் ‘வந்தேமாதரம்’ என்றே
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
இந்திரன் வச்சிரம் ஓர் பால் – அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?
தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து
பணிந்து புகழ்ந்திட வாரீர்!
11.பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும் (பாரதியார்)
12.வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க! (பாரதியார்)
–சுபம்–
You must be logged in to post a comment.