பிரிட்டிஷ் மஹாராணிக்கு ஜே! ஜால்ரா!! சம்சா!!! மஹா ஜால்ரா!!!!

IMG_3346 (2)

Research Article No. 2089

Written by London swaminathan
Date : 21 August  2015
Time uploaded in London :–  காலை மணி 10-02

இந்தியாவில் சுதந்திரத்துக்காகப் போராடியோர் எண்ணிக்கை மிகவும் குறைவே. அக்கால ஜனத்தொகையையும் (சுமார் முப்பது கோடி), பின்னர் தியாகிகள் என்று தாமிர பட்டயம் வாங்கியோர் எண்ணிக்கையயும் ஒப்பிட்டால் இது புரியும். பெரும்பாலான மக்கள், “ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன” என்று இருந்துவிட்டனர். விக்டோரியா மஹாரணி காலத்தில் இந்தியர்கள், குறிப்பாகப் பத்திரிக்கைகள் அனைத்தும், அவளை எப்படி போற்றிப் புகழ்ந்தன என்பதையும் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு வந்தபோது அவரை எப்படிப் பாராட்டினர் என்பதையும் பார்த்தால் இது விளங்கும்.

வெளி நாட்டினருக்கு ஜால்ரா அடிப்பதில், ஒத்து ஊதுவதில் தமிழர்கள் சளைக்கவில்லை. திராவிட பக்தன் முதலான பத்திரிக்கைகளில் வந்த பாடல்களே இதற்கு சான்று பகரும்.

IMG_3341 (2)

“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” — மெட்டில் ஒரு பாட்டு, “ராம ராம ஜய ராஜாராம்” — என்ற பஜனைப் பாட்டு மெட்டில் ஒரு பாட்டு என்று பிரிட்டிஷாரைப் புகழ்ந்து எழுதித் தள்ளிவிட்டனர். காந்திஜி போன்றோர் வந்து சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய போதும் வேடிக்கை பார்க்க வந்த கும்பலே அதிகம். காந்திஜி சுடப் பாட்டு இறப்பதற்கு முதல் நாள் வரை திண்ணைப் பேச்சிலும், மரத்தடிப் பேச்சிலும் அவரைக் குறை கூறியோர் எண்ணிக்கையே அதிகம்.

“நெஞ்சு பொறுக்குதிலையே–இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இதையெல்லாம் கண்டு பொறுக்க மாட்டாமல்தான் பாரதியார் கொதித்தெழுந்தார். “நெஞ்சு பொறுக்குதிலையே–இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் …. அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்றும், “நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே- வாய்ச் சொலில் வீரரடி” – என்றும் பாடினார்.

IMG_3340 (2)

1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அப்போது இந்தியாவில் ஆங்கில ஆட்சியைப் புகழ்ந்து பலர் பாடல்கள் எழுதினர். பாரதியார், ரவீதிரநாத் தாகூர் முதலிய பெருங் கவிஞர்களும் இதில் அடக்கம். ஜனகனமன என்று துவங்கும் பாடலும் (பின்னர் நாட்டின் தேசீய கீதமானது) ஜார்ஜ் மன்னரை வரவேற்க எழுதப்பட்டதே. ஆயினும் இது ஒரு சர்ச்சையான பின்னர் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தாகூர் மறுப்பு வெளியிட்டு, இது பொதுவான பாடல் என்றார்.

பாரதியார் எழுதிய “வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு” என்ற பாடலில் மிகவும் அழகாகப் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டிவிட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி, ‘நல்லது செய்’ (சுதந்திரம் வழங்கு) என்றும் பாடி இருக்கிறார். தாகூர் எழுதிய பாடலில் ‘ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.பாரதியார் பாடலில் அப்படி இல்லை.

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில –

என்று சொல்லிவிட்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களைப் புகழ்கிறார். பின்னர்

ஆயினும் என்னை? ஆயிரங்கோடி தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை

நல்குரவாதி நவமாம் தொல்லைகள்

ஆயிரம் எனை வந்தடைந்துள நுமரால்

என்னுமிங்கிவையெலாம் இறைவன் அருளால்

நீங்குவ அன்றி நிலைப்பனவல்ல

–என்று சொல்லி சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்துகிறார். 1908 ஆம் ஆண்டில் பாரதியார் வெளியிட்ட ஸ்வதேச கீதங்கள் – என்ற தனது நூலில் சேர்த்த பாடல்களே அவருடைய தீவிர சுதந்திர வேட்கைக்குச் சான்று.

அவர் நடத்திய தேசபக்தப் பத்திரிக்கைகளைத் தவிர பெரும்பாலான பத்திரிக்கைகள் பிரிட்டிஷ் ஆட்சியாளரைப் புகழ்ந்தனவேயன்றிக் குறைகூற அஞ்சி நடுங்கின!

இத்துடன் இணைத்துள்ள பாடல்கலையும் விக்டோரியா மஹாரணியாரைப் புகழ்ந்து வெளியான தமிழ்ப் புத்தகத்தையும் பார்த்தால் அக்கால அடிவருடிச் சூழ்நிலை கண்ணுக்குமுன் திரைப்படம் போல வரும்!

இனி இணைப்புகளைக் காண்க:————

IMG_3344 (2)

IMG_3349 (2)

IMG_6004

IMG_6013

IMG_6014

IMG_6015

IMG_3345 (2)

—-முற்றும்—

Leave a comment

3 Comments

 1. R Nanjappa

   /  August 21, 2015

  You must be aware that Muruganar, that great devotee of Sri Ramana Maharshi
  (real name C.K.Subramanya Iyer), the great Tamil scholar was also an
  admirer of Mahatma Gandhi and wrote many poems on the theme of Independence
  and brought out a booklet with the title “Swatantra Geetham”. But once he
  came to Bhagavan Ramana,in 1923, he gave up all his other attachments-even
  his love of poetry. But when his poetic instincts again rose up, they were
  fully dedicated to the cause of Ramana. We have thus lost his poems on the
  national theme. I wonder whether you can find a copy in the British Museum
  by any chance.

 2. Thanks, Nanjappa.I will go through the BL catalogue and find out.
  If I find those valuable materials I will publish the details, if not the full book.
  I am going to BL next Tuesday.

 3. Thanks for writing the history as it was in 1911. Swami Vivekananda rightly observed that Indian mentality was such that it always respected the ruler. That is why Muslim and British had an easy time in India.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: