கடவுளும் விஞ்ஞானிகளும்
கடவுளுக்கு சவால்! குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by S NAGARAJAN
Date: 23 September 2015
Post No: 2182
Time uploaded in London :– 13-26
(Thanks for the pictures)
ச.நாகராஜன்
கடவுளுக்கு சவால்!
படைப்பு என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; எல்லாம் நம்மாலேயே செய்ய முடியும் என்றார் ஒரு விஞ்ஞானி.
அந்த நகரிலிருந்த பெரியவரிடம் அனைவரும் அந்த விஞ்ஞானியின் அதிசயமான கூற்றைத் தெரிவித்தனர். பெரியவர் விஞ்ஞானியிடம் வந்தார்.
பெரியவர் கேட்டார்:- “நீங்கள் கடவுளைப் போல எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களாமே!”
விஞ்ஞானி முழங்கினார்:+ “ நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம்! கடவுளே இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் மனிதனால் செய்ய முடியும்!”
பெரியவர் விஞ்ஞானியிடம் ஒரு பந்தையும் பேட்டையும் கொடுத்தார்.அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு குரங்கை வளர்ப்புப் பிராணியாக வளர்த்து வந்ததும் பெரியவருக்குத் தெரியும்.
பெரியவர் சொன்னார்:”ஓஹோ! சரி, பெரிய விஷயம் எல்லாம் பேச வேண்டாம். இதோ கொடுத்திருக்கிறேனே, பேட், பந்து, இரண்டையும் உங்கள் செல்லக் குரங்கிடம் கொடுங்கள். அதற்கு பேட் மூலம் பந்து விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் அப்புறம் கேட்கிறோம்!”
“பூ! இது சுலபம்” என்றார் விஞ்ஞானி. அனைவரும் கலைந்தனர்.
விஞ்ஞானி குரங்கிற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பேட்டையும் பந்தையும் வைத்து எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நாட்கள் ஓடின. குரங்கு பந்து விளையாடக் கற்கவே இல்லை.
கடைசி முயற்சியாக குரங்கை பேட், பந்துடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். நெடு நேரம் கழித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க அவர் கதவின் சாவித் துவாரம் வழியே பார்த்தார்.
மறுமுனையில் குரங்கு தன் விழிகளை வைத்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது!
விஞ்ஞானி அன்றிலிருந்து தன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்வதை நிறுத்தி விட்டார். பெரியவர் புன்முறுவல் பூக்க அனைவரும் வழக்கம் போல கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுதனர்.
கோவிலில் ‘அலகிலா விளையாட்டுடையான்’ சிரித்தான்!
சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை
காலம் காலமாக எதையாவது புதுக் கொள்கையாகச் சொல்வது அறிஞர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர்களின் பல கொள்கைகள் கால வெள்ளத்தில் ஈடு கொடுத்து நிற்க முடிவதில்லை!
‘எவல்யூஷன்’ – பரிணாம வளர்ச்சி – என்ற கொள்கையை முன் வைத்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அது தோன்றிய காலம் தொட்டே சர்ச்சைக்குள்ளாகி படாதபாடு பட்டது.
ஆனால் தாமஸ் ஹக்ஸ்லி (Thomal Huxley) அதை பலமாக ஆதரித்தார்.அவர் சிறந்த உயிரியல் வல்லுநர் (eminent biologist)
குரங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் என்று அடித்துக் கூறினார் அவர். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு குரங்கு டைப் அடித்துக் கொண்டே இருந்தால் அது ஷேக்ஸ்பியரின் கவிதையைக் கூட டைப் அடித்து விடும் என்றார்.
அவரது, ‘Monkeys might type Shakespeare’ என்ற வாக்கியம் பிரசித்தமானது. அவ்வளவு தூரம் இங்கிலாந்தின் சொற்பொழிவு அரங்கங்களில் அந்தக் கருத்தை அவர் முழங்கி வந்தார்.
பரிணாம வளர்ச்சி கடவுளுக்கு எதிரான சவால் என்று விஞ்ஞானிகளும் ‘பகுத்தறிவுகளும்’ மகிழ மக்களோ முழித்தனர். எது உண்மை?
குழுவினரும் குரங்குகளும்
இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு குழு முன் வந்தது. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள ப்ளிமத் பல்கலைக்கழகத்தைச் (Plymouth University) சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய குழு தான் அது. இந்த மாணவர்கள் மீடியா லாப் ஆர்ட்ஸ் (Media Lab Arts Course) என்ற பாடத்திட்ட வகுப்பில் பயில்பவர்கள்.
இதற்கான ஆராய்ச்சியை அறிவியல் ரீதியில் நடத்த நாங்கள் தயார் என்று குழுவினர் அறிவித்தனர். 2000 பவுண்டு நிதி உதவி உடனே அளிக்கப்பட்டது. (ஒரு பவுண்டு இன்றைய மதிப்பில் சுமார் 101 ரூபாய்; ஆராய்ச்சி நடந்த காலத்தில் குறைவு தான்!) மத்திய இந்தோனேஷியாவில் இருந்த சோலை குரங்குகள் ஆறை வாங்கினர் குழுவினர்.
இதற்காக தேவான் என்ற இடத்தில் உள்ள பைக்ங்டன் மிருகக்காட்சிசாலையில் (Paignton Zoo, Devon) ஒரு தனி அறை அமைக்கப்பட்டது. ஒரு கம்ப்யூட்டரும் நிறுவப்பட்டது. குரங்குகளின் ‘இலக்கிய இன்பம்’ எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அன்றாடம் அவ்வப்பொழுது கண்காணிக்க குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஒரு மாத தீவிர முயற்சியில் அந்த சோலை மந்திகள் கம்ப்யூட்டரை உடைத்ததோடு அதைத் தங்கள் கழிவறையாகவும் பயன்படுத்தியதைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கேட்ட மக்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.
ஷேக்ஸ்பியரை குரங்குகள் மதிக்கவே இல்லை!!
ஒரு குரங்கு ஐந்து பக்கங்களில் ‘S’ என்ற வார்த்தையை மட்டும் அடித்துத் தள்ளி இருந்தது!
குரங்கின் மீதல்ல ஜோக், கொள்கையின் மீதே தான்!
ஆய்வுத் தலைவரான விரிவுரையாளர் ஜெஃப் காக்ஸ் (Geoff Cox) தங்களது ஆய்வின் முடிவை அறிவித்துக் கூறுகையில், “காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் ரேண்டம் ப்ராசஸ் (Random Process) முறை மூலம் மிருகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடையாது என்பதையும் மிருகங்களைக் கம்ப்யூட்டர் மட்டத்திற்கு கொண்டு வர முடியாது என்பதையும் எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வில் ஜோக் ஏதாவது இருப்பதாக எண்ணி நீங்கள் மகிழ்வீர்களானால் அந்த ஜோக் குரங்குகளின் மீது (அல்லது அதன் செயல்பாடுகளில்) இல்லை. உண்மையில் ஜோக் அந்த பரிணாம வளர்ச்சி கொள்கையில் தான் இருக்கிறது” என்றார்.
ஊடகத்தின் கொண்டாட்டம்
இது என்ன, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய் இருக்கிறதே என்கிறீர்களா! இல்லை உண்மையில் குரங்கு அடிக்கப் போய் கம்ப்யூட்டர் டாய்லட் ஆன கதை தான் இது!
விஷயம் பிரமாதமான விஷயம் இல்லையா! வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் ஆய்வுக் குழுவினரை (குரங்குகள் கூடவே இருக்கும் போது தான்!) முற்றுகை இட்டன.
உலகளாவிய விதத்தில் ஆய்வு முடிவுகள் ஒளிபரப்பப்பட்டன. லண்டனில் பிரபல பத்திரிகையான டைம்ஸ்–இல், நிருபர் சாம் லிஸ்டர் (Times, Sam Lister) செய்தியை வெளுத்துக் கட்டி விட்டார். (இதை ஸ்டேட்ஸ்மென் ஆங்கில நாளிதழ் 10-5-2003 இதழில் வெளியிட்டது)
சார்லஸ் டார்வினின் கொள்கை சந்தி சிரிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; கடவுளை அடிக்கடி சவாலுக்கு இழுக்கும் விஞ்ஞானிகளின் விளையாட்டு தான் திண்டாட்டத்தில் முடிகிறது – ஒவ்வொரு முறையும்!
அலகிலா விளையாட்டுடையான் அவன்!
அவனிடமே ஒரு விளையாட்டா???!!!
****************
swathi48
/ September 24, 2015But even our Dasavataram depicts the same Darwin theory, is it not?