Compiled by S NAGARAJAN
Post No.2256
Date: 19 October 2015
Time uploaded in London: 8-07 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
ரகசியத் தெளிவு
சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!
ச.நாகராஜன்
சொல்லில் இருக்குது அனைத்துமே
இரகசியங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒரே மாதிரியான அறிவுரைகளையே சொல்கின்றன. யூதம், ஹிந்து என்றெல்லாம் இதில் வேறுபாடு கிடையாது. ஏனெனில் அடிப்படை உண்மைகள் சாஸ்வதமானவை!
தேவி பாகவதத்தில் அம்பிகையின் முன்னர் ஆகப் பெரும் மஹரிஷிகள் வாயைப் பொத்தி மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று!
யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனை புரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் காணுங்கள் என்கிறது!
லிக்விடிம் எக்வாரிம் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான முத்துக்கள்) தொகுப்பில் முக்கியமான ரகசியம் சொல்லப்படுகிறது இப்படி:-
EACH MORNING A NEW CREATION
Take special care to guard your tongue
Before the morning prayer.
Even greeting your fellowman, we are told.
Can be harmful at that hour.
A person who wakes up in the morning is
Like a new creation
Begin your day with unkind words,
Or even trivial matters –
Even though you may later turn to prayer,
You have not been true to your Creation
All of your words each day
Are related to one another
All of them are rooted
In the first words that you speak
LIQQUTIM YEQARIM
உனது நாவைக் காப்பதில் விசேஷ கவனம் எடு
காலை பிரார்த்தனைக்கு முன்னர்
உங்கள் சக மனிதருக்கு வணக்கம் செலுத்துவது கூட,
அந்த நேரத்தில் தீமை பயக்கக்கூடும் என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது
காலையில் கண் விழிக்கும் ஒரு மனிதன்
ஒரு புதிய படைப்பு போல
அன்பில்லாத வார்த்தைகளுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்,
அல்லது அல்ப விஷயங்களுடன் துவங்குங்கள்
பின்னால் நீங்கள் பிரார்த்தனை புரியத் தொடங்கினாலும் கூட,
உங்கள் படைப்புக்கு நீங்கள் உண்மையானவராக இல்லை
ஒவ்வொரு நாளும் உங்களின் எல்லாச் சொற்களும்
ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டிருக்கின்றன
அந்த அனைத்துமே நீங்கள் பேசும் முதல் வார்த்தைகளை
வேராகக் கொண்டிருக்கின்றன
லிக்விடிம் எக்வாரிம்
பிரம்மாண்டமான ஒரு ரகசியம் மிக எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஹிந்து தத்துவத்தில் காலை எழுந்தவுடன்
“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே சரஸ்வதி
கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்ஸனம்”
என்று நல்ல சொற்கள் மூலம் திருமகள், கலைமகள், கோவிந்தன் ஆகியோரை நமஸ்கரித்து நாளை நல்ல நாளாக்கி நமது நாளாக்குகிறோம்.
ஒரு நாளைக்கு 100 ஆசீர் வசனம் ஓதுங்கள்
கடவுள் நம்மிடம் எதை விரும்புகிறார் என்பதை யூத மதத்து ராபி மெய்ர் (Rabbi Meir) அருமையாக விளக்கிக் கூறுகிறார். மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இறையாளர் இவர்.
தால்முட்– இல் வரும் செய்யுளுக்கு இவர் அற்புத விளக்கம் ஒன்றைத் தருகிறார். அது Mah என்ற வார்த்தையைக் கூறுகிறது. இதன் பொருள் ‘என்ன’ என்பதாகும். ஆனால் மெய்ரோ அந்த உச்சரிப்பை அதே போன்று உள்ள Meah என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இதன் பொருள் 100 என்பதாகும். அதாவது கடவுள் நம்மை தினமும் 100 Blessings ஐ(100 ஆசீர் வசனங்கள்) ஓத வேண்டும் என்று விரும்புகிறார் என்றார்.
தினமும் நூறு நல்ல வார்த்தைகளைப் பேசும் ஒருவனுக்கு என்றைக்கேனும் கெடுதி விளையுமா? நிச்சயம் ஒரு கெடுதியும் வராது. ரகசியங்களை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது.
அனைத்தும் பொருள் பொதிந்தவை.
சொல் ஒன்று வேண்டும்
மஹாகவி பாரதியார் பாடிய சொல் என்ற பாடல் அற்புதமான பாடல்.
சொல் ஒன்று வேண்டும் தேவசக்திகளை நம்முள்ளே
நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்
மின்னல் அனைய திறல் ஓங்குமே – உயிர்
வெள்ளம் கடை அடங்கிப் பாயுமே
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு
செய்கை அதனில் வெற்றி ஏறுமே
என்று சொல்லின் பெருமை கூறும் அவரது பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது யூதர்களின் வேதம் கூறும் சொல்லுக்குள் ஜோதி காணும் அனுபவம் கை கூடும், இல்லையா!
பேசுகின்ற வார்த்தைகள் பலவற்றை நம்மிடம் அன்றாடம் சேர்க்கின்றன. இவற்றில் நாளைத் துவக்கும் போது பேசுபவை அன்றைய போக்கை உருவாக்குகின்றன. ஆகவே பேசுவதைச் சரியாகப் பேசு; சரியான சொற்களைத் தேர்ந்தெடு என்பதே அறநூல்களின் அறிவுரை.
இதை ஒரு சோதனையாகக் கூடச் செய்து பார்க்கலாம்; விளைவுகள் பிரம்மாண்டமான அளவில் நலம் பயப்பதைக் கண்டு நாமே பிரமித்து விடுவோம்!
*****************
Mohanrao Kaiyoornarayana
/ October 19, 2015dear sir thank you for your good information . k.n. mohan rao .
Santhanam Nagarajan
/ October 20, 2015thanks again