ஆத்திச்சூடி படித்த அதிகப் பிரசங்கி! (Post No. 2439)

IMG_9826

Compiled  by London swaminathan

Date: 29 December 2015

 

Post No. 2439

 

Time uploaded in London :– 13-39

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன்,சென்னை).

 

ஒரு வைத்தியர் மருந்து கொடுக்க ஒரு வீட்டுக்குச் சென்றார். அதுசமயம் நோயாளி வாசல் நிலை (படி)யில் உட்கார்ந்தான். அப்போது…………………….

வைத்தியர்:– அப்பா! படியிலுட்காராதே; தோஷம்.

பையன்:என்னங்காணும்! “நிலையிற் பிரியேல்” என்று அவ்வை கூறியிருக்க நீர் அதிலிருக்கபடாதென்கிறீர்?

வைத்தியர்: சரி, எதற்காக உன் அம்மா கூப்பிட்டார். உடம்பின் நிலை என்ன? உள்ளதைச் சொல்.

பையன்: என்னய்யா? “உடையது விளம்பேல்” என்று அவ்வை கூறியிருப்பதை உணராமல் உள்ளது கூறென்கிறீர்?

வைத்தியர்: சரி, கையையாவது நீட்டு பார்ப்போம்.

பையன்: அட போமையா! நீர் ஆத்திச்சூடி படியாமல் என்ன வைத்தியர்காணும்? “ஏற்பது இகழ்ச்சி: என்று அவ்வை கூறியிருப்பதையறிந்தும் யாசகன் போல கையை நீட்டச் சொல்கிறீர். நான் என்ன பைத்தியமா?

வைத்தியர்: சரி, அது போகட்டும்;இந்த மருந்தையாவது சாப்பிடு

 

பையன்: ஐயா, இதில் பாதி நீர் சாப்பிடும்

வைத்தியர்: பையா, நான் எதற்காக………………….?

பையன்:ஐயமிட்டுண் – என்று அவ்வைப்பாட்டி கூறியிருப்பதால் உமக்குப் பாதி கொடுத்துவிட்டு, மீதியை நான் உண்ணுவேன்.

வைத்தியர்: பையா, இன்று மருந்து சாப்பிடாவிடினும், ராத்திரி கொள்ளைக் கஷாயம் போட்டு அதிலிந்த பஸ்பத்தைக் கலந்து சாப்பிடு.

பையன்: ஐயா, கொள்ளை விரும்பேல் –என்று ஆத்திச் சூடி சொல்கிறது. நீர் கொள்ளைக் கஷாயம் போடச் சொல்கிறீர். ஆத்திச் சூடியை அடியோடு மறந்துவிட்டீர் போலும்?

 

வைத்தியர்: சரி, சரி, நாளைக்கு நோன்பு என்பதால், கண்டதைக் கடியதைத் தின்னாமலாவது இரு; எல்லாம் சரியாகப் போகும்

பையன்: சீ, சீ, நீர் போங்காணும்; ஆத்திச் சூடி சுத்தமாகத் தெரியவில்லையே. “நோன்பென்பது கொன்று தின்னாமை”  (கொன்று+ தின்னு+ ஆமை) என்பதை அறியீரோ?

நோன்பென்பது- விரதமாவது

ஆ- பசுவையும்

மை-ஆட்டுக் கடாவையும்

கொன்று- வதைத்து

தின்னு- சாப்பிடு

என்று அர்த்தமாகிறது. இன்னொரு அர்த்தம் ஆமையைக் கொன்று தின்னு (கொன்று+தின்னு+ ஆமை)! உமது வைத்தியமும் பைத்தியமும் எனக்கு வேண்டாங்காணும்.

வைத்தியர்: தம்பி, உனக்கு ஆத்திச்சூடி நல்ல பாடமென்று தெரிகிறது. இனி இந்த நோய் அதிகப்படும் முன்னால், தயவு செய்து கொன்றை வேந்தனையும் பாடம் பண்ணிவிடு!!நான் வருகிறேன்!!

–சுபம்–

 

 

 

 

 

Leave a comment

1 Comment

  1. அருமை அருமை நல்ல நகைச்சுவை பதிவு .

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: