WRITTEN BY S NAGARAJAN, BANGALORE
Date: 12 January 2016
Post No. 2481
Time uploaded in London :– 5- 46 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ஆன்மீக இரகசியம்
காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்!
ச.நாகராஜன்
108 புத்தகங்களை எழுதிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய!
மந்திரங்களில் மகோன்னதமானது காயத்ரி மந்திரம். இதன் அருமை பெருமைகளை அற்புதமாக உணர்த்தியவர் காயத்ரி பரிவார் அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய! அவர் 108 அரிய புத்தகங்களை (ஹிந்தியில்) எழுதியுள்ளார். அவற்றில் பல ஹிந்து தர்ம மேன்மைகளையும் காயத்ரி பற்றிய அரிய இரகசியங்களையும் விளக்குபவை.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பிரத்யட்ச பலன்களைத் தொகுத்து அவர் தந்துள்ளவற்றில் ஒரு சம்பவம் இது!
பாபா ராம்பரோஸேயின் பயணம்
மஹராஷ்டிர மாநிலத்தில் அகோலா ஜில்லாவில் பாபா ராம்பரோஸேவின் பெயர் மிகவும் பிரசித்தமான ஒன்று.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் வரும் பலன்களைப் பற்றி அவர் அற்புதமாகக் கூறியுள்ளார்.
பாபா ராம்பரோஸே பிறவியில் ஒரு முஸ்லீமாகப் பிறந்தவர்.
தான் பிறந்த இஸ்லாம் சமயத்தை நன்கு அனுஷ்டித்து வந்ததால் உருவ வழிபாட்டை அவர் ஏற்கவில்லை.
ஒரு நாள் ஏதோ ஒரு விஷயமாக அவர் அயலூர் செல்ல நேர்ந்தது. இருள் சூழ்ந்த நேரத்தில் அவர் ஒரு காட்டு வழியே செல்ல நேர்ந்தது.
காலை விடிந்தவுடன் பயணத்தைத் தொடரலாம் என்ற முடிவுக்கு வந்த அவர் காட்டில் இருந்த ஒரு சிவாலயத்தில் தங்கினார்.
Gayatri Homa by boys from face book.
கனவில் கண்ட காட்சி
இரவில் அவருக்கு நேரடியாக அநுபவிப்பது போன்ற ஒரு கனவு வந்தது. அதில் ஒரு சாது தோன்றி அவரைப் பார்த்து, “நீ போன ஜன்மத்தில் ஒரு ஹிந்துவாக இருந்தாய். மாமிச உணவைச் சாப்பிட்ட காரணத்தினால் இந்த ஜன்மத்தில் முஸ்லீமாகப் பிறந்திருக்கிறாய். எந்த கிராமத்திற்கு நீ இப்போது செல்ல இருக்கிறாயோ அது தான் உன் பூர்வ ஜன்ம கிராமம்.
அங்கே தான் உன் அன்னை தந்தை உள்ளிட்ட அனைவரும் உள்ளனர்” என்றார். கனவில் அனைவரது பெயர்களும் தெளிவாகக் கூறப்பட்டன!
கனவில் சாது இன்னொன்றையும் தெளிவாகக் கூறினார்:” நீ காயத்ரியை உபாசனை செய்ய ஆரம்பி. நீ உத்தாரணம் அடைவாய்!”
பொழுது புலர்ந்தது. தான் கண்ட கனவினால் பிரமித்துப் போனவர் பயணத்தைத் தொடர்ந்து செல்லவிருந்த கிராமத்தை அடைந்தார்.
என்ன ஆச்சரியம்!கனவில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையாக இருந்தது. அந்தப் பயணம் அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது.
காயத்ரி மந்திர உபதேசம்
காயத்ரி மந்திரத்தை விதிப்படி உச்சரிக்க உபதேசத்தைப் பெற்றார்.
அதை ஆயிரக்கணக்கில் சொல்ல ஆரம்பித்தார். (புரஸ்சரணம் என இதைச் சொல்வர்)
தேவியின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.
ஏராளமான பக்தர்களுக்கு காயத்ரியின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தார் அவர்.
அவரிடம் நூற்றுக்கணக்கானோர் சீடர்களாக மாறி காயத்ரி உபாஸனையை மேற்கொண்டனர்.
இது போன்ற ஏராளமான சம்பவங்களை ஸ்ரீராம் சர்மா ஆசார்ய தொகுத்துள்ளார்.
ஸ்ரீராம் சர்மா ஆசார்ய அவர்களின் வாழ்க்கையே அதி அற்புதமானது.
(அதை இன்னொரு கட்டுரை வாயிலாகக் காண்போம்)
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்போம். உய்வோம்!
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
swami_48@yahoo.com)
*******
kalidoss doss
/ January 12, 2016காயத்ரி மந்தரத்தையும் சேர்த்து எழுதுங்கள்