மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்! (pOST No.2516)

gulob jamun, fb

Written by S Nagarajan

 

Date: 7 February 2016

 

Post No. 2516

 

Time uploaded in London :–  6-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுப் பதார்த்தங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞான இதழின் அறிவுரை

 

உலகின் பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் – (MIND இதழில்)  தனது 2016, ஜனவரி முதல் தேதியிட்ட  இதழில் இனிப்பும் கொழுப்பும் எப்படி நமது மூளையையே ஏமாற்றுகிறது என்பது குறித்த எச்சரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபெர்ரிஸ் ஜாப்ர் எழுதியுள்ள இந்த கட்டுரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நவீன கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது.

 

 

குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை நிச்சயம் படிக்க வேண்டும். உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும் இதரர்களைப் போல ஆக அவர்கள் ஆசைப்படுவதைத் தடுப்பது எது?

 

இதோ கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளின் சுருக்கம்:

 

போதைப் பழக்கம் போல ஆகும் உணவுப் பழக்கம்

 

மாத்யூ ப்ரையன் என்பவர் தனது 24ஆம் வயதில் 135 பவுண்டுகள் எடையுடன் இருந்தார். 20 ஆண்டுகள் கழித்து இப்போது அவரது உடல் எடை 230 பவுண்டுகள். காரணம்? , மற்றவர்கள் எல்லாம் அளவோடு சாப்பிடும் போது அவர் மட்டும் ப்ரட், பாஸ்தா, சோடா, குக்கீஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவறாமல் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தது தான்! அவரால் தடுக்க முடியாதபடி அவரது உணவுப் பழக்க வழக்கம்  போதை போல மாறி, ஐஸ்கிரீமை முழு டின்னுடன் வாங்கிச் சாப்பிடும் அளவு ஆனது.

அவரால் தடுக்க முடியாமல் போகும் படி அந்த உணவுப் பண்டங்களின் மீது அவருக்கு ஆசை ஏன் வந்தது

இதை விஞ்ஞானிகள் தங்களிந் ஆராய்ச்சிப்  பார்வையில் பார்க்கின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களின் பசியை ‘hedonic hunger’ என்று அழைக்கின்றனர் அவர்கள். தேவைக்கும் மேலாக மிக அதிகமாகச் சாப்பிடுவதைத் தான் இந்த புதிய பெயர் சுட்டிக் காட்டுகிறது. 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொற்றொடர் இது!

 

இது பற்றிய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் ஒரு அதிசயமான உண்மையை வெளியிடுகின்றன. இனிப்புப் பண்டங்களும் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளும் மூளையின் சர்க்யூட்டை சூதாட்டமும் கோகெய்னும் செய்வது போலக் கவர்கிறன. இதை ரிவார்ட் சர்க்யூட் என்று சொல்லலாம்.

 

 

பசித்தால் பசிக்குச் சாப்பிடுவது போய், இனிப்பு மற்றும் கொழுப்பு வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் சாப்பிடத் தூண்டும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்கின்றன.

jangri

இனிப்பையும் கொழுப்பையும் கண்டவுடனேயே  சுவை அறியும் சுவை அரும்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்புகின்றன. உடனேயே எல்லையில்லா இன்ப உணர்வு ஏற்படுகிறது. இதை அறிவியல் சோதனை ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

 

இந்த இன்ப உணர்வை அநுபவித்தவர்கள் அதை மீண்டும் அநுபவிக்கத் துடிக்கின்றனர். இதனால் எடை கூடிக்கொண்டே போகிறது. அவர்களால் தடுக்க முடியாதபடி இந்த எடைக் கூடுதல் ஏற்பட்டு பல வித வியாதிகளை அவர்களுக்குத் தருகிறது.

 

 

2007, 2011 ஆண்டுகளில் ஸ்வீடனின் உள்ள கோதன்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது.

பசிக்கான ஹார்மோனான கெரெலினை (ghrelin)  வயிறு வெளிப்படுத்தியவுடன் மூளையில் உள்ள ரிவார்ட் சர்க்யூட்டில் டோபமைன் என்ற ஹார்மோனின் வெளிப்பாடு அதிகப்படுகிறது. அதாவது இனிப்பையும் கொழுப்பையும் உண்டதற்குப் பரிசாக – ரிவார்டாக இன்ப உணர்வு ஏற்படுகிறது.

 

 

சாதாரண நிலையில் லெப்டின் மற்றும் இன்சுலின் ஆகியவை டோபமைன் வெளிப்படுத்துவதை நிறுத்துகிறது. ஆகவே இன்ப உணர்வு குறைகிறது.

 

ஆனால் கொழுப்பான உணவைச் சாப்பிடும் போது மூளை இந்த ஹார்மோன்களுக்கு ‘செவி சாய்ப்பதில்லை’.

 

 

 

புதிய சிகிச்சை அறிமுகம்

 

ஆய்வின் விளைவு ஒரு புதிய சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

உடல் எடை கூடி குண்டாக இருப்பவர்களுக்கு கடைசி தீர்வாக இந்த  புதிய அறுவை சிகிச்சை வந்துள்ளது. இதன் காரணம் இப்போது கெரலின்  உடலின் எடை குறைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது தான். இந்த சர்ஜரி அல்லது அறுவைச் சிகிச்சை பாரியாட்ரிக் சர்ஜரி (Bariatric Surgery)  என்று அழைக்கப்படுகிறது. இது வயிறைச் சுருங்க வைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சை.

 

ஒன்று திசுக்களின் மூலம் சிகிச்சை மூலம் தரப்படும் அல்லது வயிறை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இரண்டு அவுன்ஸுக்கு மேலாக உணவு அங்கு இருக்க இடமே இல்லாதபடி சிகிச்சை செய்து விடும்.

 

 

சிகிச்சை முடிந்த ஒரே மாதத்திற்குள்ளாக சிகிச்சை பெற்றவருக்கு இனிப்பு மற்றும் கொழுப்புப் பண்டங்களின் மீதிருக்கும் ஆசையே போய்விடும். இது ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களால் ஏற்படும், ஏனெனில் வயிறு சுருங்கி விடுகிறதல்லவா!

 

 

சமீபத்திய ஆய்வுகள் உணவின் மீதான ஆசை மூளையின் நரம்பு மண்டல சர்க்யூட்டில் பிரதிபலிக்கிறது எனத் தெரிவிக்கிறது.

‘hedonic hunger’ என்ற இந்தப் புதிய உண்மை மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் நிலைமையே மாறி விட்டது.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கலோரிகளையும் மீறி போதைப் பழக்கம் போல இனிப்பும் கொழுப்பும் கொண்ட உணவு வகைகள் மூளையை ஏமாற்றி ஒரு வித இன்ப உணர்வைத் தருவதை அறிந்து அதை நிறுத்தினாலே போதும், உடல் எடை குறைந்து விடும் என்பது தெரிந்து விட்டது.

 

IMG_5057

 

முடிவு மன உறுதியைப் பொறுத்தது

 

இதை அடிப்படை நிலையில் புரிந்து கொண்டவர்கள், இப்படி இனிப்பையும் கொழுப்பு பதார்த்தங்களையும் அளவோடு சாப்பிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

அளவுக்கும் மீறி அதிகத் தீனி சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்கள் இதற்கான புதிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 

எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குண்டாக இருப்பவர்களின் மன உறுதியைப் பொறுத்துத் தான் இருக்கிறது!

**********

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: