Written by S Nagarajan
Date: 12 February 2016
Post No. 2531
Time uploaded in London :– 8-01 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
Picture of Akbar
12-2-2016 பாக்யா இதழில் வெளியாகி உள்ள கட்டுரை
ச.நாகராஜன்
முகலாய மன்னர்களிலேயே வித்தியாசமானவர் அக்பர். அவர் வாழ்நாள் இறுதி வரை கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார்.
அவர் பயணப்படும் போதெல்லாம் கங்கை ஜலம் குடம் குடமாகப் போதுமான அளவு கூடவே எடுத்துச் செல்லப்பட்டது.
அக்பருக்கு சூரியனிடத்தில் அளவு கடந்த பக்தி. தினமும் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம்.
ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார். ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்து வந்ததால் மிக்க ஆரோக்கியத்துடன் அவர் இருந்து வந்தார்.
இப்படிப்பட்ட அக்பரிடம் ஸ்வாமி விவேகானந்தருக்கு அலாதி ஈடுபாடும் மரியாதையும் உண்டு.
ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிக்குப் பின்னர் ப்ரிவ்ராஜகராக தன்னந்தனியே தான் யார் என்று சொல்லாமல் ஸ்வாமி விவேகானந்தர் பாரதம் முழுவதும் சுற்றி வந்தார்.
அவரது புத்தி கூர்மையையும் வேதாந்தத்தை அவர் விளக்கும் விதமும் அவரது பரந்த அறிவையும் கண்டு வியந்து அவரிடம் மரியாதை கொண்ட சமஸ்தான மன்னர்கள் பலர்.
அவர்களுள் ஒருவர் கேத்ரி மன்னர். ஸ்வாமிஜியிடம் அலாதி பக்தி கொண்ட அவர் தன்னை அவருடைய சீடனாகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பித்தார்.
ஸ்வாமிஜிக்கும் அவரது அன்னைக்கும் இருநூறு ரூபாயை அவர் மாதம் தோறும் உதவித் தொகையாக அனுப்பி வந்தார் என்றால் அவரது பக்தியை நாம் நன்கு ஊகிக்க முடியும்.
ஆக்ராவுக்கு அடுத்து உள்ள சிகந்தராவில் அக்பர் தான் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென ஒரு அற்புதமான சமாதியை அமைக்கலானார். 119 ஏக்கர் பரப்பில் இது 1600ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. அக்பரே கட்டிடத்தைத் தன் விருப்பப்படி வடிவமைத்தார். 1605இல் அவர் மறையவே அவரது மகன் ஜிஹாங்கீர் அதை 1613இல் முடித்தார்.
Picture of Tomb of Akbar
ஆனால் அவுரங்கசீப் காலத்தில் ஜட் ராஜாவான ராஜாராம் ஜட் அநத சமாதியை முற்றிலுமாக அழித்தார். சமாதி முழுவதுமாக கொளுத்தப்பட்டது. அக்பரின் எலும்புகளையும் அவர் எரித்தார்.
சமாதி சிதிலமடைந்தது. இதை பிரிட்டிஷ் அரசு காலத்தில் லார்ட் கர்ஸன் பிரபு சிறிது சீரமைத்தார்.
இந்த சிதிலமடைந்த சமாதியை ஸ்வாமிஜி தன் சுற்றுப் பயணத்தின் போது பார்த்தார். அதுவோ கேத்ரி மன்னரின் ஆளுகையில் இப்போது இருந்தது.
தொண்டை அடைக்க கண்களில் நீர் அரும்ப, “அக்பரின் சமாதி இந்த நிலையில் இருக்கலாமா? மேற்கூரையில்லாமல் சூரிய வெளிச்சத்திலும் மழையிலும் இதை பார்க்கவே என் மனம் பொறுக்கவில்லையே” என்று அடிக்கடி அவர் கேத்ரி மன்னரிடம் கூறுவார்.
ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கேத்ரி மன்னரின் மனதில் ஆழப் பதிந்தது. குருநாதரின் ஆசை அல்லவா அது!
விவேகானந்தர் பின்னர் அமெரிக்கா சென்று சர்வமத மகாசபையில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று விட்டார். ஸ்வாமிஜியை அறிந்த மன்னர்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. மக்களிடமோ பெரும் எழுச்சி ஏற்பட்டது.
யாருமறியாத சாதாரண சந்யாசியாக பாரதத்தை விட்டுச் சென்றவர் அகில உலகப் புகழுடன் திரும்பி வந்தார்.
ஒரு நாள் கல்கத்தாவிற்கு வரும் வழியில் அவருக்கு ஒரு செய்தி வந்தது. கேத்ரி மன்னர் அக்பரின் சமாதியை புனருத்தாரணம் செய்து வந்ததாகவும், ஒரு நாள் சாரம் முழுவதுமாக கீழே சரிந்து விழவே உயரத்திலிருந்த மன்னரும் விழுந்து மாண்டார் என்றும் ஸ்வாமிஜியிடம் தெரிவித்தார்கள்.
மிகவும் மனம் வருந்தினார் விவேகானந்தர்.
நீண்ட காலமாகத் தான் விரும்பியபடியே சமாதி நன்கு அமைக்கப்பட்டதை நினைத்து மகிழ்வதா? அல்லது தன்னால் உத்வேகமூட்டப்பட்ட தன் சீடர் கேத்ரி மன்னர் இதற்காக உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி வருந்துவதா!
நெடுநாள் அவர் மனம் கலங்கி வருந்தி இருந்தார்.
“கேத்ரி மன்னர் சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்து இறந்தார். எனவே என்னைச் சுற்றி அனைத்தும் இருளாக உள்ளன” என்று எழுதினார் அவர்.
அக்பரின் சமாதியைப் புனரமைக்க உத்வேகம் ஊட்டிய மாபெரும் வீ ரத் துறவி விவேகானந்தர் என்றால் அந்தப் பணியில் உயிர்த் தியாகம் செய்த மாபெரும் மன்னராக கேத்ரி மன்னர் திகழ்கிறார்!
*******
You must be logged in to post a comment.