லண்டனில் இந்திய மஹாராஜா மோதிரங்களும் காதல்கிளிகளும் (Post No. 2556)

IMG_3427 (2)

Picture: Ring set with Indore Ruby, Mauboussin, Paris, 1930s

Written by London swaminathan

 

Date: 19  February 2016

 

Post No. 2556

 

Time uploaded in London :–  17-23

 

( Thanks for the Pictures; courtesy Financial Times, London  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

லண்டனில் பிரிட்டிஷ் மியூசியமும், விக்டோரியா ஆல்பர்ட் மியூசியமும் (Victoria & Albert Museum) மிகவும் புகழ்பெற்றவை. வி அண்ட் ஏ (V&A) என்று சுருக்கமாக அழைக்கப்படும் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில்தான் திப்புசுல்தானின் கவர்ச்சிகரமான புலி பொம்மை இருக்கிறது.இது ஒரு வெள்ளைக்காரனைக் குதறும் பாணியில் உறுமல் ஒலியுடன் இயங்கக்கூடியது.

 

அங்கு 2016 மார்ச் மாதம் வரை இந்திய மஹாராஜாக்கள் தங்கள் காதலிகளுக்கு வாங்கிக்கொடுத்த மோதிரங்களும், ப்ரோச்சுகளும் (Brooch) (புடவையில் அணியும் ஊசி/கொக்கி) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் பின்னாலும் சில சுவையான காதல் கதைகள் உள்ளன.

 

கபூர்தலா மஹாராஜா ஜகஜித் சிங், 1906-இல், ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் அரச திருமணத்துக்கு வந்திருந்தார். வழியில் பாரீஸில் தங்கி, புகழ்பெற்ற பிரெஞ்ச் நகைக்கடையில் ஒரு தங்க-வைர மயில் வடிவ ப்ரோச் வாங்கினார். அதுவாங்கிய முஹூர்த்தம், மாட்ரிட் நகரில் நடனம் ஆடிய 16 வயதுப் பெண் அனிடா டெல்காடோவின் (Anita Delgado) காதல்வலையில் சிக்கினார். பின்னர், அவளை மணக்கையில் அந்த ப்ரோச்சை பரிசாகக் கொடுத்தார்.

 

 

இதுபோன்ற 104 நகைகள் வி அண்ட் ஏ மியூசியத்தில் இந்திய ராஜாக்களின் காதல்கதைகளைச் சொல்லுகின்றன. இவைகளை ஆறு பிரிவுகளாகப் பிரித்து காட்சிக்கு வைத்துள்ளனர். மொகலாயர் கால நகைகள் முதல் தற்கால மும்பை வீரேன் பகத் கடை நகைகள் வரை பல மோதிரங்கள், ப்ரோச்சுகள் காட்சியில் உள்ளன.

 

அனிடா டெல்காடோ, கபூர்தலா மன்னரின் ஐந்தாவது மனைவியான பின்னர் ஒரு யானையின் மீது அழகிய மரகதக் கல்லைக் கண்டு மோகித்தார். உடனே கணவன் காதில் கிசுகிசுத்தார். அவரும் “அன்பே! ஆருயிரே! அது உனக்குக் கிடைக்கவேண்டுமால் நீ உருது மொழியில் கதைக்க வேண்டும்” என்றார். அந்தக் காதல் கிளியும் உருது மொழியைக் கற்றுக்கொண்டு கொஞ்சவே அந்த மரகதத்தை வாங்கி வைரத்தில் பதித்து 19 ஆவது வயது பிறந்த நாள் கொண்டாடுகையில் பரிசாகக் கொடுத்தார். இதுவும் காட்சிக்குள்ளது.

IMG_3428 (2)

Brooch, 1910, designed by Paul Iribe, Paris, featuring antique Mughal emerald

இந்த மஹாராஜாக்களின் காதல் மோகங்களால் ஐரோப்பிய நகைகள் மீது இந்தியாவின் தாக்கமும், இந்திய நகைகள் மீது ஐரோப்பாவின் தாக்கமும் அதிகரித்தது. ஆனால் இந்தியாவின் செல்வாக்கே மேலோங்கியிருப்பதாக மியூசிய அதிகாரி சூசன் ஸ்ட்ரோஞ் கூறுகிறார். மஹாராஜாக்களின் மனைவியர், இந்திய நகைகள் ஜொலிக்க ஜொலிக்க ஐரோப்பாவில் வலம் வந்ததால் அந்த வகை பாணிகளில் ஆர்வம் பிறந்தது என்கிறார். பிரெஞ்ச் கடிகார/ நகை தயாரிப்பாளரான லூயி கார்டியர் இதில் இகவும் ஆர்வம் காட்டியது. லூயியின் சகோதரர் 1911ஆம் ஆண்டில் ஐந்தாவது ஜார்ஜ் மன்னரின் பட்டமேற்பு வைபவத்துக்காக டில்லிக்கு வந்திருந்தார். அப்போது பல மன்னர்கள், அந்த நிறுவனத்திடம் புதுவகை நகைகளுக்கு ஆர்டர் கொடுத்தனர்.

 

இந்தூர் மன்னர் யஸ்வந்த்ராவ் ஹோல்கர், நியூயார்க், பாரீஸ் நகைக்கடைகளில் வாங்கிய மோதிரங்களும் காட்சியில் உள்ளன. கதார் நாட்டு ஷேக் ஹமீத் பின்  அப்துல்லா அதானி, தனது சொந்த சேகரிப்பில் வைத்திருந்த அரிய நகைகளையும், மியூசியத்துக்கு இரவல் கொடுத்துள்ளார்.1607ஆம் ஆண்டில் ஜஹாங்கீர் வைத்திருந்த ஒரு பச்சைக்கல்லும் இதில் அடங்கும்.

 

ஆற்காட்டு நவாப், சார்லோட் மஹாராணிக்கு அனுப்பிய 17-21 காரட் வைரம், படக்க்ஷான் சுரங்கத்திலிருந்து வந்த ஸ்பைனல் (சிவப்புக் கல்) வகை ரத்தினம், 352 காரட் தைமூர் ரூபி (கெம்பு) ஆகியனவற்றையும் மியூசியத்துக்கு வருவோர் கண்டு களிக்கலாம்.

-சுபம்-

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: