Compiled by London swaminathan
Date: 26 February 2016
Post No. 2576
Time uploaded in London :– 8-17 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்
மேலை நாடுகளில் கிறிஸ்தவ மதத்தை நம்பாமல், வேறு நம்பிக்கை கொண்டவர்களை சூன்யக்காரி (Witch விட்ச்) என்று சொல்லி உயிரோடு தீயில் எரித்துவிடுவார்கள். ஐரோப்பா முழுவதும் இப்படி எரிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம் என்று ஒரு புத்தகம் கூறுகிறது. இப்படி உயிருடன் எரிக்கப்பட்ட பிரான்ஸ் தேசத்து இளம்பெண் ஜோன் ஆf ஆர்க் பற்றி உலகமே அறியும்.
இது போன்ற ஒரு வழக்கு லார்ட் மான்ஸ்பீல்டு (Lord Mansfield) முன்னால் விசாரணைக்கு வந்தது. அப்பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவள் இங்கிலாந்தில் பிறந்தவள். வெளிநாட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவளோ நம்மையும் உயிரோடு எரிக்கப்போகிறார்கள் என்று எண்ணி நடுங்கிக் கொண்டிருந்தாள். ஏனெனில் ஊரே ஒன்று கூடி இப்படி முத்திரை குத்தி லட்சக்கணக்கான பேரை எரித்துள்ளனர்.
முதலில் நீதிபதி எதிர்தரப்பு வாதத்தைக் கேட்டார்: இந்தப் பெண் காற்றில் நடக்கிறாள்; அதுவும் கால்கள் மேல்புறமும், கைகள் பூமிக்கு அருகிலுமுள்ளன. அதை நாங்கள் கண்ணால் கண்டோம் என்று பலரும் கூறினர்.
எல்லோரும் சாட்சியம் அளித்த பின்னர் அவர் அமைதியாகத் தீர்ப்பு கூறினார்: நீங்கள் இத்தனை பேர் சொல்லும்போது அதை நான் நம்பாமலிருக்க முடியாது. அவள் தலைகீழாக காற்றில் நடந்தது உண்மை என்றே எடுத்துக்கொள்வேன். ஆனால் அவளும் உங்களைப் போலவும், என்னைப்போலவும், இங்கிலாந்தில் பிறந்து இங்கு வந்திருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை தலைகீழாகக் கால்களால் நடப்பதும், காற்றில் பறப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. ஏனெனில் இங்கிலாந்து சட்டத்தில் இது ஒரு குற்றம் என்று சொல்லும் எந்தச் சட்டமும் இல்லை. ஆகையால் இவரை நான் சூன்யக்காரி என்று கருத சட்டம் இடம் தராததால், இவரை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்புகிறேன்.
அந்த அப்பாவிப் பெண்ணுக்கு உயிர் வந்தது!
Xxx
மகளே உன் சமத்து!
ஒரு மாஜிஸ்டிரேட்டுகு தர்ம சங்கடமான நிலை. ஏனெனில் அவருடைய சொந்த மகளே குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த போது அதைப் பொருட்படுத்தாது, காரில் சிட்டாகப் பறந்தவுடன் போலீஸார் சிக்கெனப் பிடித்தனர்.
“குற்றவாளியே! இன்று நான் உனக்கு அளிக்கும் தண்டனை உன்னைப் பாதிப்பதற்கும் மேலாக என்னைத்தான் பாதிக்கப் போகிறது .உனக்கு பத்து டாலர் அபராதம் – என்று சொல்லிவிட்டு, மாஜிஸ்டிரேட், தன் பாக்கெட்டில் கையை விட்டு, பத்து டாலரை எடுத்து கோர்ட் அதிகாரிகளிடம் கொடுத்தார். மகளுக்காக தானே அபராதத்தைக் கட்டினார்!
Xxx
அயோக்கியன் யார்?
ஜட்ஜ் ஜெப்ரீஸ் (Judge Jeffries) என்பவர் நீதிபதிகளில் மிகவும் கியாதி (புகழ்) பெற்றவர். ஒருமுறை நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகையில் தன் கையில் இருந்த பிரம்பை நீட்டிக்கொண்டே பேசினார்.
“இதோ இந்தப் பிரம்பின் ஒரு முனையில் ஒரு அயோக்கியன் நிற்கிறான்”.
இப்படி அவர் கூறுகையில் அப்பாவிக் குற்றவாளிக்கு நியாயமான சந்தேகம் வந்துவிட்டது.
“பிரம்பின் எந்த முனையில் அந்த அயோக்கியன் இருக்கிறான்?” என்று நிதிபதியைக் கேட்டுவிட்டான்.
(வக்கீல்களுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?)
இதே நீதிபதி ஒருமுறை மற்றொரு குற்றவாளியை நீ பெரிய அயோக்கியன் என்று சொன்னார்.
அவன் இடைமறித்து,
“நீதிபதி ஸார், அ(வ்வ)ளவுக்கு நான் அயோக்கியன் இல்லை—என்றான்.
என்ன சொன்னாய்? என்றர் நீதிபதி.
“அவ்வளவுக்கு நான் பெரிய அயோக்கியன் இல்லை, நீதிபதி ஸார்”—என்றான்.
“அப்படி முறையாக வார்த்தைகளை அடுக்கு” – என்று புத்திமதி கூறினார்.
(கோர்ட்டில் ‘கொல்’லெனும் சிரிப்பு)
–சுபம்–
You must be logged in to post a comment.