Date: 1st March 2016
Post No. 2587
Time uploaded in London :– 9-20
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
for more articles and pictures.
கிரேக்க மகா கவி ஹோமர்(கி.மு.800)
உலகிலேயே மிகவும் பழைய கவிஞன் பெயர் உசனா கவி; அவரை உசனஸ் என்றும் அழைப்பர். கிருஷ்ணன், பகவத் கீதையில் காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்று கூறும் விபூதி யோகத்தில் கவிஞர்களுள் நான் உசனா கவி என்கிறார். அவ்வளவு மிகப்பெரிய கவி அவர். ரிக் வேத காலத்திலேயே அவர் மிகவும் பழங்காலக் கவிஞர் ஆகிவிட்டார். அப்படியா னால் இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பா ரென்பது எனது துணிபு.
எப்படித் தமிழில் பல கபிலர்கள், பல நக்கீரர்கள், பல அவ்வையார்கள் இருந்தனரோ அதே போல பிற்காலத்தில் வந்த சுக்ராச்சார்யாரையும் உசனா கவி என்றனர்.
ஆயினும் அவருக்கு முந்தி வாழ்ந்த முதல் உசனஸ் பற்றி மனு ஸ்மிருதி ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு உரை எழுதியோர் மஹாபாரதத்திலும் (9-50), பஞ்சவிம்ச பிராமணத்திலும் உள்ள ஒரு சுவையான கதையைச் சொல்லுகின்றனர்.
இதோ அந்தக் கதை:
ஆங்கிரஸின் புதல்வரான உசனஸ், வயதில் மிகவும் சிறியவர். ஆனால் வேதத்தைக் கரை கண்டவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அவர் தன்னைவிட வயதானவர்க ளுக்குப் பாடம் நடத்துகையில், “ஓ! சின்னப் பிள்ளைகளே! நன்றாகக் கவனியுங்கள்” என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்களுக்கோ கோபமும் ஆத்திரமும் வந்தது. இவனே பொடிப்பயல்; இவன் நம்மைப் பார்த்து, சின்னப் பையன்களே (புத்ரஹா) என்று சொல்லுவதாவது என்று முறைத்துப் பார்த்தனர். முகக்குறிப்பால அதிருப்தியைக் காட்டினர். ஆனால் உசனா கவி தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவிலை.
எல்லா ரிஷிகளும் ஒரு மஹஜரை எடுத்துக்கொண்டு, கடவுளிடம் போனார்கள். அவரும் சொல்லிவிட்டார், அவன் உங்களை சின்னப் பையன்களே என்று சொல்லுவது சரிதான் என்று! அவன் அறிவினால் தந்தைக்குச் சமமானவன் என்றும் கடவுள் தீர்ப்பு சொல்லி விடுகிறார்!
இக்கதையில் மிகப்பெரிய கருத்து உள்ளது. வேதங்களைக் கரைத்துக் குடித்தவனே அறிவாளி; மூத்தவன். மேலும் கவிஞன் என்பவன் தந்தைக்கு சமமானவன்; அவன் முக்காலமும் உணர்ந்தவன்.
டாண்டே படம்
இந்தச் சின்னப் பையன் கதையைக் கோடிட்டு காட்டிய உலகின் முதல் சட்ட நிபுணன் மனு, இரண்டாம் அத்தியாயம் 150 ஸ்லோகம் முதல் பல விஷயங்களைச் சொல்லுகிறார். மனுவின் காலம் கி.மு. 1500 என்று அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ப்யூலர் கூறுகிறார். என் கருத்தும் அதுவே. ஏனெனில் ரிக் வேதத்திலேயே பல மனுக்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன.
இப்போது எழுத்து வடிவிலுள்ள மனு ஸ்மிருதி, பல இடைச் செருகல்களுடன் உள்ளது. சில பிராமண உற்சாகிகள், சூத்திரர்களுக்கு எதிராக சில ஸ்லோகங்களை நுழைத்துவிட்டனர். எல்லா நூல்களிலும் இடைச் செருகல் பற்றி பிரஸ்தாபிக்கும் வெள்ளைக்காரர்கள், மனு ஸ்மிருதி பற்றி மட்டும் எதுவுமே சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்கள், இந்து மதத்தை மட்டம்தட்ட அந்த ஸ்லோகங்களைப் பயன்படுத்துவர்.
இந்தச் சின்னப் பையன் கதையுள்ள பிராமணம் என்னும் இலக்கியம், சம்ஹிதைக்குப் பிறகு வந்தது. அதை கி.மு 1000 என்று மாக்ஸ்முல்லர் முதலியோரும் ஏனையோர் அதற்கும் முந்தையது என்றும் செப்புவர். எப்படிப் பார்த்தாலும் கிரேக்க நாட்டு ஹோமர் போன்றோர் தோன்றுவதற்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே உசனா கவி வாழ்ந்தார். ஆக அவரே உலகின் மிகப் பெரிய கவி; உலகின் மிக மூத்த கவி. மேலும் கவி, கவிஞன், கவிதை என்ற சொல்லெல்லாம் அவர் முதற்றே பிறந்தது எனின் மிகையாகாது.
சுமேரியாவிலுள்ள ஜில்காமேஷ் கவிதை போன்றவை வேதத்திற்குப் பிற்காலத்தில் வந்தவை. மேலும் மிகவும் நாகரீகத்தில் பின் தங்கியோரால் எழுதப்பட்டவை. ஆனால் வேத காலக் கவிதைகளோ நாகரீகத்தின் உச்சநிலையைத் தொட்ட ஒரு சமுதாயம் இயற்றியது. உலக அமைதி, மனித நேயம் பற்றிப் பாடுகிறது. அவர்களுக்கெல்லாம் மூத்தவர் நம் கவி – உசனா கவி. வேத இண்டெக்ஸ் தொகுத்த கீத், மக்டொனால்டு ஆகிய இருவரும், இந்தப் பெயர் வேத காலத்திலேயே, புராதனப் பெயராகிவிட்டது என்று பகர்வர். கண்ண பிரானும் பகவத் கீதையில் இவரைப் புகழ்வதால் கி.மு 1500 க்கு முன் அவர் வாழ்ந்தது உறுதியாகிறது.
அகஸ்தியர், விசுவமித்திரர் போன்ற வேத கால ரிஷிகள் பற்றி புராணங்களில் நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் உசனஸ் போன்றோர் பற்றி நாம் ஒன்றும் அறிய முடிவதில்லை. இதிலிருந்தே அவர்தம் பழமை வெள்ளிடை மலையென விளங்கும்.
மனு என்ன சொல்கிறார்?
மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).
பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;
க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;
வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.
சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)
வேதத்தைப் படித்தவன், இளைஞனாக இருந்தாலும் அவனே பெரியவன் (2-156)
சங்க இலக்கியமான புறநானூற்றிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:
“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” – (புறம் 183)
கவி என்றாலேயே அறிஞன் என்று பொருள்!
வாழ்க கவிகள்! வளர்க கவிதைகள்!
-சுபம்-
You must be logged in to post a comment.