Compiled by london swaminathan
Date: 5 March,2016
Post No. 2600
Time uploaded in London :– 11-03 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
டைகர் வரதாச்சாரியார் பிரபல பாடகர். இவரை ஒரு கச்சேரிக்கு அழைத்திருந்தனர். பாடகரோ கற்றுக்குட்டி; அவருக்கு வயலின் வாசித்தவரோ மஹா மேதை; இசைத்துறையில் ‘ பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’! அல்லது கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம். கச்சேரி முடிந்தது. “இப்பொழுது டைகர் அவர்கள், ஒரு சில சொற்கள் சொல்லுவார்” என்று சொல்லி அவரைப் பேச அழைத்தனர். எப்பொழுதும் சுடு சொற்களைப் பெய்தறியாதவர் அவர். ஆனால், அன்று பாடியவர் அவர் காதில் கொஞ்சம் நாராசத்தைப் பாய்ச்சிவிட்டார் போலும்!
எல்லோரையும் பொதுப்படையாக வரிசையாகப் பாராட்டினார். இறுதியில் சொன்னார். “வயலின் வாசித்தவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? நமது வயலின் மேதை ஒரு பெருங்கடல்’. ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். பெருங்கடலில் தூய கங்கை நதி போன்ற நதிகளும், சாக்கடை மணம் வீசும் கூவம் போன்ற நதிகளும் சங்கமம் ஆவது இயல்புதானே!”
(சென்னை வழியாக ஓடும் கூவம் நதி, சாக்கடைக் கலப்பினால் நாற்றம் அடிக்கும் நதியாக இன்று ஓடுகிறது.)
Xxx
புரந்தரதாசருக்கு சவுக்கடி!
கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.
பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.
ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,
இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!
வாழ்க புரந்தரர் நாமம்!
Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்
My previous articles on music:-
Ganges and Coovam Rivers in Carnatic Music! (Post No.2597) 4-3-2016
Mystic No.7 in Music, Post No.977, 13-4-14
Musician who pledged a Raga, Post no.1074, 30-5-2014
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14
Acoustic Marvel of Madurai Temple 13-5-13
Superstition in the World of Music 12-4-14 (Post No.975)
Musical Pillars in Hindu Temples
Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)
Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)
How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)
Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)
மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)
இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013
சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)
சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)
கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)
ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)
-subham-
You must be logged in to post a comment.