படம்: பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ், கெமில்லா பார்க்கர், சுவாமி ச்தானந்த சரஸ்வதி
Research article written by london swaminathan
Date: 7 March, 2016
Post No. 2607
Time uploaded in London :– 9-26 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com;
எனது பிளாக்கிலுள்ள 2600 கட்டுரைகள் குறித்து, நாள் தோறும் எனக்கு ஈ மெயில் மூலம் வரும் பல கடிதங்களில் ஒன்று இதோ:–
சார்,
அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர, (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம், (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்
சார்,
இந்த பாடலின் பொருள் என்ன?
உயிர் பலியிடுதலை (ஆமை) சொல்கிறதா?
Yours sincerely
XXXX
படம்: அதிருத்ர மஹா யக்ஞம், ஸ்ரீ சத்ய சாய் பாபா
இந்தப் பாடல் எனக்கும் பல ஆண்டுகளாகப் பொருள் விளங்காத பாடல். டாக்டர் இரா. நாகசாமி போன்ற சம்ஸ்கிருதமும், தமிழும் நன்கறிந்த ஒருவர்தான் இதற்கு சரியக விளக்கம் தர முடியும்.நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.
இபோதுள்ள பொருள்:
வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல
—என்பது நூல்கள் தரும் விளக்கம். ஆனால் இந்த உவமை அங்கு பொருத்தமாகவுமில்லை. மேலும் மக்கள் நன்கறிந்த ஒரு விஷயத்தைத்தான் உவமையாகக் கொடுக்கவேண்டுமென்பது செய்யுள்விதி. அவ்வகையிலும் இது பொருத்தமில்லை. ஏனெனில் அஸ்வமேத யாகத்தில் பலியிடப்படும் நூற்றுக் கணக்கான தாவரங்கள், பிராணிகள், ஹோமத் திரவியங்களில் ஒன்று , ஆமை, எனப் படித்திருக்கிறேன்.
மனு தர்ம சாஸ்திரத்தில், இறந்து போன முன்னோர்களுக்கு திதியில் (திவசத்தில்) வழங்கக்கூடிய மாமிசப் பொருட்களில் ஆமை மாமிசமும் ஒன்று. ஆனால் இதை மூன்று வருணத்தாரில் யார் வழங்கினர், எப்படி வழங்கினர் என்பதற்கு விளக்கமில்லை. வேள்வியில் வழங்கினரா, அல்லது, கண்ணப்ப நாயனார் செய்ததுபோல நைவேத்தியம்/படையல் செய்தனரா என்பதையும் அறியோம்.
அகநானூற்றுப் பாடலோ ஒரு ‘செக்ஸி’ (sexy) பாடல் (அவளுடைய வார் (Bra ப்ரா) அணிந்த முலைப்பரப்பு முயக்கத்தை ஒரு நூல், இடையில் தடுப்பதாயினும் அதை வெறுக்கும் மிகப் பெரிய காதலுடன் இன்பம் அனுபவிக்கும் ) . அதிலும் பிராமணரல்லாத ஒரு புலவர் (?) இப்படிப் பாடியதை, நாம் ஒப்புக்கொண்டால் தமிழ் நாட்டில் யாக யக்ஞங்கள் மிக, மிகப் பெரிய அளவில் – குறிப்பாக மன்னர்கள் மட்டுமே நடத்தும் அஸ்வமேத யாகம் — நடந்திருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது செக்ஸி கவிதையில் இப்படி ஒரு உவமை வராது!
(முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் அஸ்வமேத யாகம் நடத்தி, குதிரைப் படத்துடன் நாணயம் வெளியிட்டது பற்றியும், பாண்டியர்கள் இப்படி அஸ்வமேத யாகம் நடத்தி அவப்ருத ஸ்நானம் செய்வது பற்றி காளிதாசன் ‘ரகுவம்ச’ காவியத்தில் பாடியது பற்றியும் எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சொல்லியிருகிறேன்)
பாடல் வரி ‘கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள். இவர்கள் வெளி உலக (Extra Terrestrials எக்ஸ்ட்ரா டெர்ரெஸ்ட்ரியல்) மனிதர்களா? என்றும் ஒரு ஆர்ச்ச்ய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். தேவர்களுக்கு வியர்க்காது, தேவர்கள் செக்ஸ் (Sex) செய்ய முடியாது, தேவர்களின் கால்கள் நிலத்தில் படியாது, தேவர்கள் போட்டுக்கொண்ட பூ மாலைகள் வாடாது, தேவர்கள் நினைத்த மாதிரத்தில் காற்று வழியாக பல உலகங்களுக்குச் செல்ல முடியும், தேவர்கள் கண் சிமிட்டமாட்டார்கள் –என்று நமது புராணங்கள் வருணிப்பதால் இவர்கள் – வெளி உலக வாசிகள் (ET) என்றும் முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.
தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது! இது சம்ஸ்கிருதச் சொல்லா என்பதையும் ஆராய வேண்டும். ‘தைத்ய’ என்றால் திதி என்னும் பெண்ணின் மைந்தர்களான தைத்யர்கள், அதாவது அசுரர்கள். அந்தப் பொருளும் இங்கே பொருந்தாது.தித்தி, தித்தன் – என்ற சொற்கள் பல இடங்களில் வருகிறது. அவற்றின் பொருளும் இங்கே பயன்படா.
–subham–
You must be logged in to post a comment.