தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்! (Post No.2609)

drought,HT

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 8 March 2016

 

Post No. 2609

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Part 38. தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!

 

 wrestling 4

     உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு எப்போதும் இல்லாத அளவு வெகு வேகமாக மாறி வருகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.கடந்த 650 லட்சம் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் எப்போதும் இல்லாத அளவு பத்து மடங்கு இந்த மாறுதல் அமைந்துள்ளது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.

 

 

   இதே வேகத்தில் மாறுதல் தொடர்ந்தால் வெகு சீக்கிரமே சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் பல்வேறு பிராணிகள் மற்றும் பறவைகளின் நடத்தைகளில் மாறுதல் ஏற்படும். புதிய பூகோள நிலைகளுக்கு ஏற்ப அவற்றிற்குத் தக அவைகள் வாழ வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

டைனோஸர்களின் அழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களில் இதுவே மிகப்பெரிய மாறுதல் என்று  ஸ்டான்போர்டைச் சேர்ந்த தட்பவெப்ப நிலை பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

 

     இது ஒரு புறமிருக்க, இப்படி தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் மனித உறவுகளும் சீரழியும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் முடிவில் கூறியுள்ளது ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் பிரசுரமாகி உள்ளது.

 

Wrestling Stamp

Wrestling Stamp

 

   அதிகமான வெப்பத்தால் ஆங்காங்கே ஏற்படும் பஞ்சத்தினால் வெவ்வேறு பகுதிகளில் சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்படும் வாய்ப்பு 50 விழுக்காடிற்கும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது என்பது அவர்களின் கணிப்பு.

 

 

     ஆகவே மனித உறவுகள் மேம்படவும் சீரடையவும் உலக வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வேண்டியது மனித குலத்தின் ஒட்டு மொத்தப் பொறுப்பாக ஆகிறது.

 

 wrestling 3

    பல நாடுகள் வழியே பாயும் நதிகளும்,  ஒரே நாட்டில் பல மாநிலங்களின் வழியே பாயும் நதிகளும் வறண்டு போனால் நதிநீர்ப் பங்கீட்டில் சச்சரவுகள் ஏற்படுவதை உலகெங்கும் பல பகுதிகளில் இப்போதே பார்க்கிறோம். இந்த நிலை மோசமடையாமல் தவிர்க்க புவி வெப்பம் உயர்வதைத் தடுத்தல் வேண்டும். இதற்கான முதற்படி வாகனங்களிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகையை கட்டுப் படுத்துவதே ஆகும். வாகனப் பயன்பாட்டைக் குறைப்பது, வாகனங்களைச் சரியாகப் பராமரிப்பது, தனித் தனியே அவரவர் வாகனங்களைப் பயன்படுத்தாமல் குழுவாக இணைந்து பயணிப்பது உள்ளிட்ட ஏராளமான வழிகளின் மூலமாக சாமான்யரும் வெப்பம் அதிகமாவதைத் தடுக்க முடியும்; உலகைக் காப்பாற்ற முடியும். செய்வோமா?!

 

                                                         *********      

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: