Written by S Nagarajan (written for Bhagya Magazine)
Date: 9 March 2016
Post No. 2612
Time uploaded in London :– 6-25 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 11-3-2016 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை
இனி யார் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்!
ச.நாகராஜன்
“நமது தொழில்நுட்பம் மனிதகுலத்தையும் மீறி விட்டது” – ஐன்ஸ்டீன்
18ஆம் தேதி, பிப்ரவரி மாதம், ஆண்டு 2016.
இடம் : TED2016 மாநாடு வான்கூவர், கனடாவில் உள்ள ஒரு அரங்கம்.
இங்கு உலகின் அதிசயமான அறிவியல் நிகழ்வு ஒன்று நடந்தது.
ஹாலோ லென்ஸ் என்ற புதிய லென்ஸ் ஒன்றைத் தயாரித்த அலெக்ஸ் கிப்மேன் என்பவர், நாஸா விஞ்ஞானியான ஜெஃப் நோரிஸை டெலிபோர்ட் செய்து கனடா அரங்கத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அவரை நிற்க வைத்துக் காண்பித்தார்.
“ஆஹா, அந்த லென்ஸ் வேலை செய்கிறது” என்று உற்சாகமாக உரக்கக் கூவினார் .அலெக்ஸ்.
நாஸா விஞ்ஞானி நோரிஸ் அப்போது ஒரே சமயத்தில் நிஜமாக மூன்று இடங்களில் இருந்தார்.
முதலாவதாக அவர் தனது அறையிலேயே இருந்தார். ஹாலோகிராம் முறைப்படி ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் மாற்றப்படவே அவர் கனடாவில் உள்ள அரங்கத்தில் இருந்தார். அந்த அரங்கத்திலும் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரக பரப்பு அமைக்கப்பட்டிருந்ததால் அந்தப் பரப்பின் மீது அவர் நின்று கொண்டிருந்தார்.
ஆக, ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் அறிவியல் சாதனை மூலம் நோரிஸ் இருந்தார். இந்த நிகழ்வுக்குப் பெயர் ஹாலோகிராபிக் ட்ரான்ஸ்போர்டேஷன் என்று பெயர்!
முதன் முறையாக உலகில் இது நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது.
ஹாலோகிராபி என்ற இந்த புதிய உத்தியானது ஒரு பொருளின் மீது பட்ட ஒளியைப் பதிவு செய்து கொண்டு அதை இன்னொரு இடத்தில் மூன்று பரிமாணமும் கொண்டதாக வழங்குகின்ற புது அறிவியல் உத்தியாகும்.
ஸ்டார் வார்ஸ் படத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் கதாபாத்திரங்களை திரையில் கண்டு களித்திருக்கிறோம். அதை உண்மையாக நடத்திக் காண்பித்தார் அலெக்ஸ்.
இது இனி உலகத்தையே மாற்றப் போகும் ஒரு உத்தியின் ஆரம்ப விழா.
இனி யார் வேண்டுமானாலும் தான் இருந்த இடத்தை விட்டு நகராமல் இன்னொரு இடத்தில் காட்சி தரலாம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதிய சாதனம் உலகில் பெரும் புரட்சியைச் செய்யப் போகும் ஒன்று. இதுவரை தொலைபேசியின் மூலமாக பேசுகின்ற போது ஒருவருக்கு அருகில் இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இனி நிஜமாகவே இன்னொரு இடத்தில் நமக்கு வேண்டியவர் அருகில் மூன்று பரிமாணமாக இருப்பது போல யார் வேண்டுமானாலும் தோன்றலாம்
இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஒரு சிறிய லென்ஸ், ஏராளமான சென்ஸர்கள், ஒரு ஹாலோகிராபிக் யூனிட் ஆகியவை உள்ளன.
நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் அதே கணத்தில் உள்ளது உள்ளபடியே இன்னொரு இடத்தில் காட்சி தர வைக்கும் இது நாளைய அற்புதம்!
இதன் ஒரு பகுதி இப்போதே பல இடங்களில் அனுபவத்துடன் உணரப்படுகிறது. இதற்கு தேவையானது ஒரு ஹெட் செட் தான்!
எடுத்துக்காட்டாகச் சொல்வது என்றால் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஹாலோலென்ஸ் மூலமாக மனித உடலை அங்கம் அங்கமாகப் பார்த்து மருத்துவத்தைப் பயில்கிறார்கள். வால்வோ நிறுவனம் ஹாலோ லென்ஸைத் பயன்படுத்த மைக்ரோசாப்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் புதிய வடிவமைப்பு கார்களை அறிமுகப்படுத்தப்போகிது. நாஸாவோ இந்தத் தொழில்நுட்பத்தை விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படுத்த இருக்கிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தினால் என்னவெல்லாம் நீங்கள் செய்ய முடியும்?
வீட்டில் இருந்து கொண்டே இமய மலை உச்சியில் இருப்பது போலக் காண்பிக்க முடியும். உங்கள் வீட்டில் உள்ள காட்சிகளை தத்ரூபமாக அதே கணத்தில் இன்னொரு இடத்தில் டெலிபோர்ட் செய்ய முடியும்.
ஆக இனி யார் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் இரு இடங்களில் தோன்றலாம்!
பூமியின் மேலே நிலை கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இப்போதே ஹெட் செட் மாட்டிக் கொண்டு பூமியில் உள்ளவர்களுடன் மாயாஜாலக் காட்சி பாணியில் தொடர்பு கொள்ளப் போகின்றனர்.
இதன் உடனடிப் பயபாட்டைப் பற்றி மைக்ரோசாப்ட் ஒரு விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது.அதில் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தின் மூலமாக ஏற்படும் பயன்கள் விளக்கப்பட்டுள்ளன.
பெண்மணி ஒருவருக்கு ஒரு சிறிய பிரச்சினை! அவரது வீட்டில் சமையலறையில் உள்ள நீர்த்தொட்டி ஒழுகுகிறது. ஹெட்செட்டை மாட்டிக் கொண்டுள்ள அந்தப் பெண்மணி தனது நீர்த்தொட்டியை ஹாலோகிராம் மூலமாக இன்னொரு நகரத்தில் உள்ள ஒரு தொழில்நுடப நிபுணரிடம் காண்பிக்கிறார். அவர் உடனே எந்த இடத்தில் எந்த பைப்பை எப்படி செருக வேண்டும் என்று இடத்தைக் குறியிட்டுக் காட்டுகிறார். அந்தக் கணமே ஒழுகல் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. 3 டி எபெக்டினால் பிரச்சினையைப் புரிந்து கொள்வதும் சுலபம்; தீர்ப்பதும் சுலபம். ஹாலோஸ்டுடியோ என்ற கணினியின் புதிய அமைப்பில் இனி நாம் அனுபவிக்கப்போவது பல புதிய விந்தைகளை!
உலகம் மாறுகிறது – வேகமாக! விசித்திரமாக!!மாறுதலின் அங்கமாக மாறுங்கள்! மாயாஜாலம் புரியுங்கள்!! மகிழுங்கள்!!!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
மறைந்த பாரத ஜனாதிபதியும் மாபெரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ எஸ் ஆர் ஓவில் (ISRO), ஆரம்ப காலத்தில், வேலை பார்த்த போது ஒரு சர்ச்சில் தான் விஞ்ஞானிகள் அனைவரும் பணிகளைச் செய்து வந்தனர். அருகில் இருந்த பீச் தான் அவர்களது ராக்கெட் ஏவு தளம். ராக்கெட்டின் பாகங்களோ சைக்கிளில் தான் கொண்டு செல்லப்பட்டன!
அவர் இயக்குநராக இருக்கும் போது தான் ஸ்பேஸ் லாஞ்ச் வெஹிகிள் எனப்படும் எஸ் எல் வி (SLV II) ரக ராக்கெட்டுகள் தயாரிக்கபட்டன. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அட்வான்ஸ்ட் மிஸைல் திட்டம் துவங்கப்பட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தி அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
ஒரு முறை ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது அங்கிருந்த மாணவர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். அவர்கள் விருப்பப்படியே ஒவ்வொருவரும் தனித் தனியே தன்னுடன் போட்டோ எடுக்க அவர் அனுமதித்தார். விழா துவங்கும் நேரம் நெருங்கவே அமைப்பாளர் கலாம் அவர்களை நோக்கி, ‘விழாவிற்குப் போகவேண்டும்” என்று துரிதப் படுத்திநார்.
அவரை அமைதிப் படுத்திய கலாம் இந்த போட்டோ செஷன் முடிந்தால் தான் விழா துவங்கும் எந்று தீர்க்கமாக அறிவித்து விட்டார்.
எல்லா மாணவர்களுடனும் போட்டோ எடுத்து முடிந்த பின்னரே விழா துவங்கப்பட்டது.
மாணவர்கள் மீது அவ்வளவு பாசம் கொண்ட மாபெரும் மனிதர் அவர்!
*******
You must be logged in to post a comment.