சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம் (Post No 2658)

ganga-river-route

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 24 March 2016

 

Post No. 2658

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

விவேகானந்தர் வழி

 

 

கங்கையின் புனிதம்!

 

ச.நாகராஜன்

ganga-dussera-23

பிரம்மானந்தர் வாக்கு

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஆன்மீக புத்திரன் (Spiritual son) என்று அவராலேயே கூறப்பட்டவர் சுவாமி பிரம்மானந்தர். ராக்கால் என்று பூர்வாசிரம பெயரைக் கொண்ட இவரே பரமஹம்ஸ சீடர்களுள் முதலாவதாக அவரை வந்து அடைந்தவர்.

 

ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வழி நடத்தியவர்.

அவர் கங்கையைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்த பொருளைக் கொண்டிருக்கின்றன.

 

The water of Ganges is verily the holiest of all waters; it fulfils one’s desires and is a help to realizing the ishtam. Sri Ramakrishna has said” “The water of the Ganges, the holy prasadam of Jagannath (at Puri) and the sacred dust of Vrindavan are verily Brahman in reality.”

 

 

“கங்கையின் ஜலம் உலகிலுள்ள நீர்களிலெல்லாம் புனிதமானது. அது ஒருவனுடைய ஆசையைப் பூர்த்தி செய்கிறது அவனது இஷடத்தை உணர உதவுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியிருக்கிறார்: “கங்கையின் ஜலம். பூரி ஜகன்னாதரின் பிரசாதம், பிருந்தாவனத்தின் தூசி ஆகிய உண்மையில் பிரம்மமே.”

 

 ganga

சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்

 

தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கை முதலில் சிவபிரானின் ஜடாமுடியில் விழுந்து, அதன் பிறகு பூமியில் நதியாக ஓடினாள் என்று ஒரு புராணக் கதை உண்டு. சுவாமி விவேகானந்தர் அதற்கான காரணத்தை புதுமையாக விளக்கினார் இப்படி:

 

“கங்கை வீழ்வதற்கு ஏன் சிவபெருமானின் தலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனெனில்  கங்கை என்றல்ல; அனைத்து நதிகளும் அருவிகளும் சிவ பக்தைகள், சிவ பெருமானை வழிபடுபவர்கள். புரண்டோடும் நதிகளும், உச்சியிலிருந்து விழும் அருவிகளும் என்ன பாடுகின்றன, என்ன பேசுகின்றன என்பதை உற்றுக் கேட்டால், அது ‘வ்யோம், வ்யோம், ஹர ஹர(வ்யோம் என்பது சிவ பெருமானின் பெயர்களில் ஒன்று. வ்யோம் என்றால் ஆகாயம் அல்லது வெளி. அவர் எங்கு நிறைந்தவர் என்பது இதன் பொருள்) சிவ பக்தையாக இருப்பதால் தான் கங்கை சிவ பெருமானின் தலையை முதல் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தாள்.”

 

எப்படி ஸ்வாமிஜியின் அருமையான விளக்கம்!

 

கங்கை மீது ஸ்வாமிஜியின் பக்தி

 

அவரவர் பக்குவத்திற்கும் கேள்வி கேட்கும் நிலைக்கும் ஏற்ப ஸ்வாமிஜியின் பதில் அமைவது வழக்கம்.

ஒரு முறை இளைஞன் ஒருவன் அவரிடம் வந்தான். “ஸ்வாமிஜி, இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் நீங்கள் புதிய மதம் ஒன்றைப் பிரசாரம் செய்கிறீர்களா” என்று கேட்டான் அவன்..

ஸ்வாமிஜி: “அது என்ன புதிய மதம்?

 

இளைஞன்: “கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லவா, அதைச் சொன்னேன்.”

 

ஸ்வாமிஜி: “அது என்ன பேச்சு, அப்பா! நானே தினமும் கங்கையில் தான் குளிக்கிறேன். குளிக்க முடியவில்லை என்றால் கங்கை நீரைத் தலையில் தெளிக்கவாவது செய்யாமல் நான் இருந்ததில்லை. தலையில் தெளித்துக் கொள்கிறேன். ஒரிரு துளிகளைப் பருகவும் செய்கிறேன்.”

வந்த இளைஞன் தெளிந்தான்.

இப்படித் தவறாகத் தம்மைப் புரிந்து கொள்பவர்களை உடனுக்குடன் அந்த இடத்திலேயே தெளிவு படுத்தி விடுவார் ஸ்வாமிஜி.

கங்கையின் புனிதம் பற்றி புனிதமே உருவான அவர் சொல்வதைக் கேட்பதே அனைவருக்கும் ஆனந்தம்!

Haridwar-Tourism-Holy-Ganga-1

 

கங்கையின் கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும்

 

 

கங்கைக்குக் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தட்சிணேஸ்வரம். கங்கையின் கங்கோத்ரியாக அமைந்திருப்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள பேலும் மடம்.

 

பரமஹம்ஸரின் அனைத்து அமுத மொழிகளையும் உலகிற்குத் தொகுத்து அளித்த மஹேந்திரநாத் குப்தா (எம் என்று அழைக்கப்படுபவர்) ஒரு முறை தனது சீடர்களிடம் சொன்னார் இப்படி: “கங்கையின் மேற்குப் பகுதி வாரணாசி எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது.  சாதாரண சின்ன புண்ணியத்தின் பயனா என்ன அது?”

 

கங்கையின் புனிதம் பற்றி மகான்களின் அமுத வாசகங்களுக்கு எல்லையே இல்லை!

*********

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: