“எங்க அப்பன் ஒரு கைநாட்டு, ஆனால் அவர் சிங்கம்டா!” (Post No 2677)

Jahangir_with_portrait_of_Akbar

Picture: Jehangir holding a portrait of his father Akbar.

Compiled by london swaminathan

Date: 30 March,2016

 

Post No. 2677

 

Time uploaded in London :–  8-39 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மொகலாய மன்னன் ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பில், அவரது தந்தையான அக்பர் குறித்து எழுதியிருப்பது படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. அதைப் படிக்கையில் அக்பர் பற்றிய உண்மையான சித்திரம் நம் மனக் கண்கள் முன் வருகிறது. இதோ ஜஹாங்கீரின் எழுத்துக்கள் – லண்டன் சுவாமிநாதன் மொழியாக்கத்தில், படியுங்கள்:–

 

“என் தந்தை எப்போதும் எல்லா மதங்களைச் சேர்ந்த கற்றறிந்த சான்றோர்களுடந்தான் இருப்பார். குறிப்பாக இந்திய பண்டிதர்களுடன்தான். அவர் ஒரு எழுத்தறியாத கைநாட்டு. ஆயினும் அறிஞர்களுடன் விவாதித்து நிறைய விஷயங்களை அறிந்திருந்தார். எல்லோருடனும் கலந்துரையாடுவார். யாருக்குமே அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பது தெரியாது. கவிதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் கேட்டறிந்திருந்ததால் அவரது குறை வெளியே தெரியவில்லை.

 

அவர் தோற்றத்தில் கொஞ்சம் குட்டைதான்; உயரமாக ஆசைப்பட்டார். ஆள் கோதுமை நிறம். கண்களும் புருவமும் கன்னங்கரேல் என்று நல்ல கறுப்பு. அவரை சிவப்பு என்று சொல்ல முடியாது. மாநிறம்தான். சிங்கம் போன்ற அகன்ற மார்பு; ஆஜானபாஹு (நீண்ட கைகள்). அவருக்கு இடது புற மூக்கில் ஒரு பெரிய மச்சம் சதை போல வளர்ந்திருந்தது. அரைப் பட்டாணி அளவுக்கு இருந்தபோதிலும் அவருடைய முகத்துக்கு அழகாகத்தான் இருந்தது. சாமுத்ரிகா லக்ஷணம் அறிந்தவர்கள் இது பேரதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொன்னார்கள். லட்சுமீகரமானது என்றனர். அவருடைய குரல் வளம் கம்பீரமாக இருக்கும். எதைப் பேசுவதிலும், விளக்குவதிலும் ஒரு தனி அழகு இருந்தது.

 

அவருடைய செயல்பாட்டில் அவர் ஒரு அசாதரண மனிதராகத் திகழ்ந்தார். அவருக்கு தெய்வத்தின் கடாக்ஷம் (இறை அருள்) கிடைத்தது. ராஜபோகத்தில் திளைத்தார்; பெரும் செல்வம் வைத்திருந்தார். போர்த்திறமை மிக்க பெரிய யானைகளையும், அராபிய குதிரைகளையும் வைத்திருந்தார். ஆயினும் கடவுளின் சிம்மாசனத்திற்கு முன்பாக ஒரு மயிரிழைகூட தவறு செய்ததில்லை. ஆண்டவனை ஒரு நொடிகூட மறந்தாரில்லை.

the-nav-ratna-of-akbar

எல்லா மதங்கள், வகுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றிலுள்ள நல்லோருடன் இணங்கினார். அவர்களுக்கு அருள் பாலித்தார். இரவு நேரத்தில் தூங்குவது குறைவு. பகலிலும் தூங்க மாட்டார். ஒரு நாளில் அவர் தூங்கியது ஒன்றரை ஜாமம்தான் (ஒரு இரவில் நான்கு ஜாமங்கள் உண்டு). இரவில் எவ்வளவு நேரம் விழித்திருப்பாரோ அவ்வளவுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை. அவர் மிகவும் தைரிய சாலி. மதம்பிடித்த யானைகள் மீது துணிச்சலாக ஏறுவார். கொல்லவரும் யானைகளை அடக்குவார்.”

–ஜஹாங்கீர் நினைவுக் குறிப்பு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: