Written by S NAGARAJAN (for AIR talk)
Date: 3 April 2016
Post No. 2689
Time uploaded in London :– 11-33 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அருகிவரும் – உயிரினங்களின் படங்கள்
சுறுசுறுப்பான தேனீக்களிலிருந்து மனிதரைப் பயப்பட வைக்கும் புலிகள் வரை பல்வேறு பூமி வாழ் உயிரினங்கள் வெகு வேகமாக அருகி வரும் உயிரினங்களில் பட்டியலில் சேருவது கவலை தரும் ஒரு விஷயம்!
பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என இப்படிப் பல்வேறு படைப்புகளைக் காப்பது மனிதனின் கடமை.
இவற்றைப் பற்றி முதலில் நன்கு அறிவது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். நமது பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய முழுச் செய்திகளையும் அறிதல் அவை எவ்வளவு இன்றியமையாதன் என்பதை நமக்குப் புரிய வைக்கும். தேசீய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றிற்கு ஒரு முறை சென்றாலேயே போதும், அவை பற்றிய செய்திகள் நம் உள்ளத்தைக் கவரும்.
நமது இல்லங்களை மிகவும் சுத்தமாக இருக்கும்படி செய்தால் பூச்சிகளின் தொல்லை இருக்காது, வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் தொந்தரவு இருக்காது.
உர வகைகளை அளவுக்கு மீறி நமது தோட்டங்களில் பயன்படுத்தும் போது உடனடிப் பலன்கள் ஏற்படுவது போலத் தோன்றினாலும் நீண்டகாலத் தொலைநோக்கில் பார்த்தால் அவை மண்ணின் வளத்தை அரிப்பவை என்பது தெரியவரும். இவை விலங்குகளையும் அழிக்கக் கூடியவை என்பதால் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தல் நலம்.
விலங்குகள் அதிகமுள்ள பகுதியில் வாகனங்களை ஓட்டுவோர் மெதுவாகவும் கவனமாகவும் வண்டியை ஓட்டுதல் வேண்டும். அதிவேக வாகனங்களால் அழிந்துபடும் விலங்குகள் அதிகம் என்பது கவலை அளிக்கும் ஒரு செய்தி.
மழைக்காடுகளை அழித்துச் செய்யப்படும் மரச் சாமான்களை வாங்க மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்து மரங்களை அழிப்பதை நிறுத்தினால் எதிர்கால சமுதாயம் வளம் பெற வழி வகுத்தவர்களாவோம்.
புதிய பொருள்களை வாங்கும் போது இவற்றால் அருகி வரும் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா எனப் பார்த்து வாங்குதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் அனைத்து உயிரினங்களின் தோழன் என்ற நிலையில் வாழ்ந்தால் உயிரினங்கள் அருகிப் போகாது. வளமுடன் செழித்து வாழும்.
-Subham-
You must be logged in to post a comment.