Date: 12 April 2016
Post No. 2716
Time uploaded in London :– 8-20 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Fun with English
அனக்ராம் – 2
ச.நாகராஜன்
அனக்ராமைப் பற்றிப் பேசும் போது சுவையான ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
17ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது:
பிரான்ஸில் ஆந்த்ரே போஸ்லே (ANDRE POSLE) என்ற குஷால் பேர்வழி ஒருவரிடம் அவனுடைய நண்பன் ஒருவன் ஒரு நாள் சொன்னான் இப்படி: “ஆந்த்ரே போஸ்லே! உன்னுடைய பெயரை மாற்றி அமைத்தால் PERDEUA LYONS என்று வருகிறதே! இதற்குப் பொருள் லியோன்ஸில் சாவு என்பது. ஒருவேளை உனக்குச் சாவு லியோன்ஸில் தானா?”
இயற்கையாகவே பயப்படும் மனப்போக்கை உடைய ஆந்த்ரே இந்த தமாஷ் பேச்சைக் கேட்டுக் கதிகலங்கிப் போனான். பிரான்ஸில் உள்ள லியோன்ஸ் என்ற நகரத்தில் பயங்கர குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கும் விசேஷ நீதி மன்றம் ஒன்று இருந்தது.
அந்தக் கோர்ட்டில் தன் மீது வழக்குப் போடப்படலாம் என்று அவன் எண்ணினான். விடாது இந்த நினைவு அவனைத் துன்புறுத்தத் தொடங்கியது.
தனக்கு தண்டனை நிச்சயம் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவன், தன்னை ஏதோ ஒன்று ஆட்டிப் படைப்பதாக உணரலானான். கடைசியில் ஒரு கொலை வழக்கில் சிக்கிய அவனுக்கு அதே லியோன்ஸ் நகர் நீதி மன்றத்தில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
விளையாட்டுச் சொல் வினையானது.
இதைப் போலவே மாவீரன் நெப்போலியன் போனபார்ட்- இன் பெயரிலேயே அவனது எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை அனக்ராம் வடிவத்தில் இருந்ததாம்!
NAPOLEION BONAPARTE என்பதன் அனக்ராம் NO, APPEAR NOT ON ELBA! – வேண்டாம்,, எல்பாவுக்கு வராதே என்பதாகும்.
இறுதியில் அவன் எல்பா தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கேயே இறந்தது வரலாறாகும்.
இத்துடன் எனது நூலான ‘ஆங்கிலம் அறிவோமா’ வில் அனக்ராம் பற்றிய அத்தியாயம் முடிகிறது.
இனி அனக்ராம் பற்றி இன்னும் கொஞ்சம் தொடர்வோம்:
சில அனக்ராம்களைப் பார்ப்போமா?
WILLIAM SHAKESPEARE – I AM A WEAKISH SPELLER
ALEXANDER THE GREAT – EXTRA HATED GENERAL
CHRISTIANITY – IT’S ON CHARITY
CHRISTMAS – TRIMS CASH
NUCLEAR – AN ULCER
END OF AMERICA எப்படி ஏற்படும் என்று ஒருவர் அனக்ராம் போட்டுப் பார்த்தார். பதில் இப்படி வந்தது:
DEMONIAC FEAR –
பெரும் பயத்தால் தான் அமெரிக்காவுக்கு அழிவு வரும்!
FEAR WILL BE OUR DOWNFALL – ஆகவே அஞ்சாமல் முன்னேறுவோம் என்கிறார் ஒரு அமெரிக்கர்!
இன்னும் சில அனக்ராம் செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.
**********
You must be logged in to post a comment.