Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)
Compiled by london swaminathan
Date: 15 April, 2016
Post No. 2728
Time uploaded in London :– 21-02
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.
வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே கட்டுரை எழுதிவிட்டேன்.
நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.
நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.
மொத்தம் 64 கட்டங்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு தொடலாம் அல்லது ஒரு சிறுவனைக் கொண்டு தொடச் சொல்லலாம். அல்லது ஜோதிடம் கேட்க வருவோரை 111 அல்லது அதற்கு மேலே ஒரு எண்ணைச் சொல்லும்படி கேட்கலாம். பின்னர் ஒவ்வொரு எண்ணுக்குமுள்ள பாடலைப் படிக்கவும். சுருக்கமான பொருளும் கொடுக்கப்பட்டுளது.
-சுபம்-
இதோ தொடுகுறி சாஸ்திரம்:–
தொடரும்………………….
இரண்டாம் பகுதிக்குச் செல்க.
–சுபம்–
You must be logged in to post a comment.