பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5 (Post No 2732)

happy_birthday_100_years_old_card-

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 April 2016

 

Post No. 2732

 

Time uploaded in London :–  6-59  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

இதற்கு முந்தைய நான்கு கட்டுரைகளைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் வெளியாகும்  இறுதிக் கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்)

 

.நாகராஜன்

 

 

FTSHappyBirthday

மஹரிஷி அரவிந்தர் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதைத் தாண்டிய பெரியார் ஸ்ரீ நிரோத்பரன்.

 

ஒரு பெரும் மஹாபுருஷருடன் நெருக்கமானத் தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்ததால் இவர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

மேலும் அரவிந்தர் சாதாரணமாக யாருடனும் பேசுவதுமில்லை; பேட்டி கொடுப்பதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் மட்டும் ஆசிரமத்தில் வருகை புரிந்தோருக்கு அவரது தரிசனம் கிடைக்கப் பெறும். அந்த நிலையில் அவருடன் நெருக்கம் கொள்ளும் அபூர்வ பாக்கியத்தைக் கொண்டவர் நிரோத்.

 

நிரோத்பரன் 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 103 ஆண்டுகள் வாழ்ந்து 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மறைந்தார்.

 

 

எடின்பரோவில் மருத்துவக் கல்வி கற்ற நிரோத் பிரபல இசை விற்பன்னரான திலிப் குமார் ராய் மூலமாக (பாரிஸில் இருந்த போது) அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.1930ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்தார். பின்னர் பர்மா சென்று  சுமார் இரு ஆண்டுகள் மருத்துவராகத் தொழில் புரிந்தார். பின்னர் யோகத்தில் ஆர்வம் ஏற்பட, அரவிந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆசிரம டாக்டராகப் பணியாற்றத் துவங்கிய நிரோத் அரவிந்தரை நேரில் பார்க்க முடியாத நிலையில் தன் சந்தேகங்களைக் கடிதம் மூலம் அனுப்பிப் பதிலைப் பெறலானார்.

 

 

இப்படி சுமார் 4000 கடிதங்களை அவர் எழுதி இருக்கிறார் என்றால் அவரது அருமையை நாம் எளிதில் உணரலாம்.

 

1938ஆம் ஆண்டு அரவிந்தரின் கால் உடையவே நிரோத்பரன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அழைக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு அரவிந்தருடனான நெருக்கம் அதிகரித்தது.

12 வருட கால அனுபவங்களை அவர் நினைவு  மஞ்சரியாக ‘12 இயர்ஸ் விந்த் ஸ்ரீ அரவிந்தோ’ (12 years wth sri Aurobindo) என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார். மஹரிஷியுடன் அவர் பேசிய பேச்சுக்கள் (Talks with Sri Aurobindo) 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அவரது கடிதப் பொக்கிஷங்களும் கூட (Correspondence with Sri Aurobindo) வெளியாகி உள்ளன.

 

 

அரவிந்தரைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்களைக் கூட அவர் அவரிடமே கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறார்.

ஒரு முறை அவர் அரவிந்தரிடம்,“ஏன் கன்பூஷியஸ், அரவிந்தர் போன்றோர் மண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்?” என்று கேட்ட போது அரவிந்தர், “அது இயல்பானதே! ஆன்மீக மாறுதலுக்கு முன்னர் அவர்கள் மணம் புரிந்து கொண்டனர். மாற்றம் வந்த பிறகு திருமணம் பழைய ஆன்மாவிடம் இருந்தது. புதிய ஆளுக்கு இல்லை” என்று பதிலிறுத்தார்.

 

 

 

ஆன்மீக வாழ்க்கையின் இரகசியத்தை அரவிந்தர் ஒரு முறை இப்படி விளக்கினார்: “அதற்கு இரண்டு படிகள் உள்ளன”

முதல் படி என்ன என்பதை அரவிந்தர் பாசு என்பவருக்கு எழுதிய கடிதத்தில்,“அன்னையிடம் சரணாகதி அடைவதே முதல் படி”

 (“One of the two great steps in this yoga is to take refuge in the Mother”) என் று விளக்கினார்.

 

 

அடுத்த இரண்டாம் படி?

 

அதை நிரோத்பரனிடம் அவர் விளக்கினார்: “தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற சாதகனின் துடிப்பான ஆர்வம் (“Aspiration of the sadhak for the divine life.”)

 

 

அரவிந்தரின் யோக முறையின் படி வாழப் புகுந்த நிரோத்பரன் பெரும் உயரிய நிலையை அடைந்ததும் ஆச்சரியம் இல்லை; 103 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் ஆச்சரியம் இல்லை.

அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பணி – அரவிந்தர் போதித்த பொக்கிஷம் போன்ற ஆன்மீக ரகசியங்களை அவர் வெளியிட்டது தான்!

 

அவரது நினைவலைகள், கடிதங்கள், அரவிந்தர் வரலாறு, அரவிந்தருடனான அவரது சம்பாஷணைகள் ஆகியவை எந்தவொரு ஆன்மீக சாதகருக்கும் கிடைத்தற்கரிய ஒரு அரும் பொக்கிஷமாகும்.

 

***********                                                       இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது பண்டிட் ஸ்ரீ சாதவலேகர், காஞ்சி பெரியவாள், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, ஸ்ரீ நிரோத்பரன் ஆகியோரின் நூல்களையும் அவர்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களையும் படித்து அனைவரும் உத்வேகம் பெறலாம். ஹிந்து  மதத்தின் வாழ்க்கை முறைக்கான நேரடிப் பலனை நிரூபித்தவர்கள் அண்மையில், சமகாலத்தில் வாழ்ந்த இவர்கள் என்பதே இவர்கள் அனைவரது பொதுவான தனிச் சிறப்பாகும்.

முற்றும்.

.

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: