வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: