Translated by London swaminathan
Date: 18 May 2016
Post No. 2821
Time uploaded in London :– 8-32 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
(இந்த சம்பவங்கள் ஏற்கனவே இங்கு ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டன. மொழி பெயர்ப்பளர்- லண்டன் சுவாமிநாதன்)
அமெரிக்காவில் சென்ற நூற்றண்டில் பிரபல வணிகராக இருந்தவர் மார்க் ஹன்னா. அவர் அரசியலிலும் மிகவும் செல்வாக்கு பெற்றவர்.
ஒரு நாள் தனது கம்பெனியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு இளம் தொழிலாளி இப்படிச் சொன்னார்:
“இதோ போகிறானே, நம்ம முதலாளி; இவன் நம்மைப் போல குடிசையிலும், நாம அவனைப் போல பங்களாவிலும் வாழனும்; நமக்கு அவனைப் போல நல்ல பணம் இருக்கனும்; அப்பத்தான் இந்தப் பயலுக்கு நாம படற கஷ்டமெல்லாம் தெரியும்”.
இது முதலாளி காதில் விழுந்திருக்காது என்று நினைத்து அவன் சொல்லிவிட்டான். ஆனால் இது மார்க் ஹன்னா காதிலும் விழுந்துவிட்டது.
மார்க் ஹன்னா தனது அலுவலகத்தில் உட்கார்ந்தபின்னர் அந்த இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்தார். அவன் நினைத்தான், “இன்றோடு நம்ம ‘சீட்டு’ கிழிந்துவிட்டது; வீட்டுக்கு அனுப்பப்போகிறார்” என்று.
முதலாளி: “நீ என்னைப் பற்றி சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது சரி, நான் உன் குடிசையில் வாழத் தயார்; நீ என் பங்களாவுக்கு வா; அந்தப் பணம் எல்லாம் எடுத்துக்கொள். அப்படிக் கிடைத்தால் என்ன செய்வாய்?”
இளைஞன்: “உங்களை முதலில் குடிசை வாழ்விலிருந்து உயர்த்தி மேலிடத்துக்கு வர வைப்பேன்”.
இதை கேட்டவுடன் முதலாளி மார்க் ஹன்னாவின் மனம் நெகிழ்ந்தது. உடனே அவனுக்கு சம்பள உயர்வு அளித்தார்.
சமயோசிதமான பதில்கள், ஒருவரின் அடி மனத்திலுள்ள நல்ல எண்ணத்தையோ கெட்ட எண்ணத்தையோ பளிச்செனக் காட்டிவிடும்.
Xxx
கழுதை அல்ல; நீ ஒரு மிருகம்!
அமெரிக்க காங்கிரஸில் (பார்லிமெண்டின் ஒரு சபை) சாம்ப் கிளார்க் என்பவர் சபாநாயகராக இருந்த போது இந்தியானா மாகாண உறுப்பினர் ஜான்சன், மற்றொரு உறுப்பினர் பேசுகையில் குறுக்கிட்டு, “சீ, கழுதை, பேச்சை நிறுத்து” என்றார்.
கழுதை என்று திட்டுவது பார்லிமெண்டில் சொல்லக்கூடாத தகாத சொல் என்று அவர் உடனே ஆட்சேபனை எழுப்பினார். உடனே சபாநாயகர் அதைச் சபைக்குறிப்பிலிருந்து நீக்கினார். ஜான்சனும் மன்னிப்புக் கேட்டார். அப்படியும் விடாமல் தாக்குதலைத் தொடர்ந்தார்.
அந்த உறுப்பினரிடத்தில் கோளாறு இருக்கிறது; குறைபாடு இருக்கிறது என்றார்.
உடனே தாக்குதலுக்குள்ளான உறுப்பினர்,
என்ன கோளாறு, குறைபாட்டைக் கண்டீர்? தைரியம் இருந்தால் சொல்” – என்றார்.
உடனே ஜான்சன் சூடாக பதில் தந்தார், “அது எப்படி எனக்குத் தெரியும். மிருக வைத்திய சாலைக்குப் போய்ப் பார்; அவர் சொல்லுவார்” – என்றார்.
இப்பொழுது அந்த உறுப்பினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலில் கழுதை என்பதை நீக்குவதில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மிருக (கால்நடை) மருத்துவ மனைக்குப் போய்ச் சோதனைக்குள்ளாக வேண்டும் – என்பதை நீக்க வைக்க முடியவில்லை. அப்படியே சபைக் குறிப்பேட்டில் பதிவாகியது.
கழுதை என்று நேரடியாகத் திட்ட காங்கிரஸ் (அமெரிக்க பார்லிமெண்ட்) அனுமதிக்காவிட்டாலும் ஒருவரை மிருக வைத்தியசாலைக்குப் போய் உன்னைச் சோதித்துக் கொள் என்று சொல்லுவதை அனுமதித்தது. இதுதான் சமயோசிதம்! அரசியல்வாதிக்கே உரித்தான பேச்சுத் திறமை!!
–சுபம்–
You must be logged in to post a comment.