Article written by S.NAGARAJAN
Date: 26 May 2016
Post No. 2840
Time uploaded in London :– 6-27 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
FIRST PART WAS PUBLISHED HERE ON 21 MAY 2016. THIS IS PART 2
27-5-16 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! – 2
ச.நாகராஜன்
“நீங்கள் சரிபார்க்காத எதையுமே நம்பாதீர்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.”
– குர்ட்ஜியெஃப்
குர்ட்ஜியெஃப் தனது சீடர்கள் அனைவரையும் தங்கள் சக்தியை எல்லையற்று விரிவு படுத்துவதை விரும்பினார்.
அவரது சீடர்களில் ஒருவர் ஃப்ரிட்ஜ் பீட்டர்ஸ் (Fritz peters) என்பவர். அவரை தனது புல்வெளியை நன்கு செதுக்கும்படி குர்ட்ஜியெஃப் கூறினார். ஒரு நாளில் ஒரு சிறிய பகுதியையே சுத்தம் செய்த பீட்டர்ஸ் நாளடைவில் ச்கதி அதிகமாகவே பல ஏக்கர்கள் கொண்ட புல்வெளிப் பகுதியை தான் ஒருவராகவே ஒரே நாளில் முடித்தார்.அப்படி ஒரு நம்ப முடியாத ஆற்றல் அவருக்கு வந்து விட்டது!
மனித ஆற்றலை அனைவராலும் வளர்க்க முடியும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் உண்டு.. இதை யார் வேண்டுமானாலும் உடனடியாக்ச் செய்து பார்க்கலாம்!
உங்கள் வயிற்றை ஒரு கையினால் தேய்த்து விட்டுக் கொண்டே இன்னொரு கையினால் உங்கள் தலையை இலேசாக தட்ட ஆரம்பியுங்கள். அல்லது ஒரு காலை முன்னும் பின்னுமாகத் தரையில் கடிகார பெண்டுலம் போலத் தேய்த்து விட்டுக் கொண்டே இன்னொரு காலின் முன் பகுதியினால் தரையைத்தட்ட ஆரம்பியுங்கள். 99 சதவிகிதம் பேரால் இதைச் சரியாகச் செய்ய முடியாடு. வயிற்றைத் தடவும் போதே தலையையும் தடவுவார்கள்.
குர்ட்ஜியெஃப் தனது சீடர்களுக்கு கைகள், கால்கள் போன்ற பல்வேறு அங்கங்களையும் ஒரே சமயத்தில் வெவ்வேறு விதமான பயிற்சிகளைச் செய்யுமாறு கூறுவார்.
சில சமயம் ஒரு அபிநய நிலையில் அப்படியே உறைந்து நிலைத்து நிற்குமாறு கூறி விடுவார்.
அவர் ஒரு முறை பீட்டர்ஸுக்கு அளப்பரிய் ஆற்றலைத் தரவே தனக்குள்ளிருந்து பெரும் ஆற்றால் ஊற்றாக ஊறுவதை பீட்டர்ஸ் உணர்ந்தார். ஆனால் அதே சமயம் ஆற்றலைத் த்நத குர்ட்ஜியெஃப் மிகவும் தளர்ந்து போனார்.
நமது மனம் பிரம்மாண்டமான ஆற்றல் தேக்கத்தைக் கொண்டுள்ளது. ஆனால் தினசரி வாழ்க்கை முறையால் எழுந்தவுடன் ப்ல துலக்குவது, பேப்பர் படிப்பது,. அலுவலகம் செல்வது, சாப்பிடுவது என்று பல பழக்கங்களுக்கு அடிமையாகிறோம். ரொபாட் போல மனிதன் பழக்கங்களுக்கு அடிமையாகி இயங்க ஆரம்பிக்கிறான். இந்த ரொபாட் இயக்கத்திலிருந்து வெளி வருவது நம் கையில் தான் இருக்கிறது.
ஆனால் அதே சமய்ம் அளப்ப்ரிய ச்கதி வந்து விட்டால் அது அபாரமான விஷயம் மட்டுமல்ல; அபாயகரமான விஷயமாகவும் ஆகி விடக் கூடும்.
உதாரணமாக பென்னட் காட்டில் சென்ற போது பல்வேறு உணர்ச்சிகளின் எல்லையைத் தொட்ட போதும் அதில் அப்படியே இருக்க விரும்பவீல்லை. ஏன்? அப்படிப்பட்ட எல்லையற்ற சக்தியை மனிதனால் தாங்க முடிவதில்லை.
ஆகவே தான் படிப்படியாக சக்திகளை மேம்படுத்திக் கொண்டு அவற்றை நிலை நிறுத்தி படிப்படியாக முன்னேற வேண்டும் என்று யோகிகள் கூறினார்கள் போலும்!
இதே போன்ற உணர்வை ஒரு எல் எஸ் டி போதை மருந்தை உட்கொண்ட போதும் பெறலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போதை மருந்த உட்கொண்ட ஒருவர் சாவைப் பற்றி நினைத்த போது எதிரிலிருந்த அனைவரும் மண்டையோடுக்ளாகத் தெரிந்து சிரிக்க ஆரம்பிக்கும் காட்சியைக் கண்டார்.. பூமியோ பிணம் எரியும் சுடுகாட்டு நாற்ற்த்தை வெளிப்படுத்தியது.
ஆனால் போதை மருந்து தரும் உணர்வுகளுக்கும் யோகிகள் பெரும் ஆற்றலுக்கும் பிரக்ஞை நிலையில் பெருத்த வேறுபாடு உண்டு.ஒன்று போலி. மற்றது உண்மை!
ஆகவே போதை மருந்து சாப்பிட்டு போலி உணர்வுகளைப் பெறாமல், ஒரு எல்லைக்குட்பட்ட ஆற்றலோடு பல்வேறு இயல்பான பழக்க வழக்கங்களுடன் இருப்பதும் கூட ஒரு விதத்தில் நல்லது தான்! திடீர் பாய்ச்சலில் அனைத்து ஆற்றலையும் பெற்றுத் திகைக்காமல்,
மெதுவாக உரிய விதத்தில் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.
பிர்பல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒளிக்கு எடை உண்டு என்றும் அது ஒரு அழுத்தத்தைத் தர வல்லது என்றும் சொன்ன போது அனைவரும் சிரித்தனர். ஆனால் 1918இல் ஏற்பட்ட கிரகணத்தின் போது ஒளிக்கு எடை உண்டு என்பதும் அது ஈர்ப்பு விசையினால் பாதிக்கப்படும் என்பதும் நிரூபிக்கப்பட்டது.
ஆனால் இது வரை எண்ணத்திற்கு ஒரு அழுத்தம் உண்டா அது மற்றவரை எப்படி பாதிக்கும் அல்லது முன்னேற்றும் என்பதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இல்லை.
குர்ட்ஜியெஃப் போன்றோரின் பல்வேறு வாழ்க்கைச் சமப்வங்களே அதிசயிக்கத் தக்க விதத்தில் எண்ண சக்தியையும் இதர ஆற்றல்களையும் விளக்குகின்றன.
அறிவியல் முன்னேறி எண்ண சக்தியை பரிசோதிக்கும் சில கருவிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். எதிர்காலத்தில் அது நிறைவேறும் என உறுதியாக நம்பலாம்!
குர்ட்ஜியெஃப் இறந்து விட்டார் என்று பலராலும் பரப்பப்பட்ட செய்தியால் பென்னட் சில காலம் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் திடீரென்று அவர் உயிருடன் இருப்பதை அறிந்து அவரைச் சந்தித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.குர்ட்ஜியெஃப்பின் இறுதி வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்தார்.
அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை உள்ளடக்கி அவர் ஒரு புத்தகத்தையும் எழுதினார்.
அறிவியலுக்கும் அமானுஷய சக்திக்கும் பாலமாக அமையும் சிலர் குர்ட்ஜியெஃப் போலப் பிறந்து கொண்டே இருக்கின்றனர்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
வின்ண்வெளியில் நிலை கொண்டிருக்கும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் பன்னாட்டு விண்வெளிநிலைய்ம் பூமியை ஒவ்வொரு 92 நிமிடமும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 16 முறை பூமியைச் சுற்றுகிறது.
அதில் நிறைய காமராக்கள் உள்ளன. விண்வெளி வீரரான கிறிஸ் ஹாட்ஃபீல்ட் (Chris Hadfield) தனது கடைசி பயணத்தின் போது 2012 டிசம்பரிலிருந்து 2013 மே மாதம் முடிய அதில் இருந்தார். அப்போது பூமியை 2597 முறை வலம் வந்தார். சுமார் 45000 போட்டோக்களை அவர் எடுத்தார். ஆனால் அவை அனைத்தையும் அவரே ஒரு முறை கூட் முற்றிலுமாகப் பார்க்கவில்லை,
ஒரு நாள் யோசித்தார். இவ்வளவு புகைப்படங்கள் எடுத்தும் அவற்றை ஒருமுறை கூடப் பார்க்கவில்லையெனில் அதற்கு அர்த்தமே இல்லையே! விளைவு, அவற்றைத் தான் பார்த்ததோடு அதில் முக்கியமான போட்டோக்கள் மூவாயிரத்தைத் தேர்ந்தெடுத்தார்
ஆனால் இவற்றையும் புத்தகமாக வெளியிட்டால் விலை கட்டுபடியாகாதே, யாரும் வாங்க மாட்டார்களே என்று அவருக்குத் தோன்றியது.
மீண்டும் அவற்றை பரிசீலனை செய்து 192 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட்டார். புத்தகத்தின் பெயர் யூ ஆர் ஹியர் ; அரவுண்ட் தி வோர்ல்ட் இன் 92 மினட்ஸ் ( ‘You Are Here: Around the world in 92 minutes’)
அற்புதமான புகைப்படங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம். இந்த போட்டோக்கள் பலவற்றை இணையதளங்கள் பலவற்றில் பார்த்து மகிழலாம். நெட் இணைப்பு இருந்தால் மட்டும் போதும்!
***********
You must be logged in to post a comment.