புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (Post No. 2844)

தருமி1

ஜூன் 2016 காலண்டர் (துர்முகி வைகாசி/ஆனி)

 

Compiled by london swaminathan

Date: 27 May ,2016

 

Post No. 2844

 

Time uploaded in London :–  10-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

“இனியவை நாற்பது” நூலிலிருந்து  – முக்கிய 30 இனிமையான பொன்மொழிகள்

 

முகூர்த்த நாட்கள்:- 8, 9, 16, 23, 26

அமாவாசை:- 5

பௌர்ணமி:- 20

ஏகாதசி:- 1,16

 

 

சிவ சிவ

 

ஜூன் 1 புதன் கிழமை

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே (முக்கண் உடைய சிவபெருமானின் பாதகமலங்களை இடையறாது சிந்தித்தல் இனிமையானது)

 

ஜூன் 2 வியாழக் கிழமை

பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே (வங்கியில் கடன் வாங்கியாவது படி)

 

ஜூன் 3 வெள்ளிக் கிழமை

உடையான் வழக்கு இனிது ( செல்வம் உடையவர்கள், அதை வறியவர்க்கு அளித்தல் இனிது)

 

ஜூன் 4 சனிக் கிழமை

ஏர் உடையான் வேளாண்மை தான் இனிது

 

ஜூன் 5 ஞாயிற்றுக் கிழமை.

ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே (வெஜிட்டேரியன்ஸ் – வாழ்க)

 

 hare krishna food 2

ஜூன் 6 திங்கட் கிழமை

கோல்கோடி மாராயம் செய்யாமை முன் இனிது (நடுவு நிலைமை தவறி பாராட்டி பரிசு வழங்காதிருத்தல் இனிது)

 

ஜூன் 7 செவ்வாய்க் கிழமை

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே (சான்றோரின் நல்ல மொழிகளைக் கேட்பது இனிது)

 

ஜூன் 8 புதன் கிழமை

அந்தணர் ஒத்து உடைமை ஆற்ற மிக இனிதே (அந்தணர்கள், வேதங்களை மறவாது ஓதுதல் இனிது)

ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே (வேதம் ஓதும் பார்ப்பனர்க்கு பசுவையும் தங்கக் காசுகளையும் தானம் செய்; உன் குலம் செழிக்கும்; ஊர் தழைக்கும்)

 

ஜூன் 9 வியாழக் கிழமை

ஊரும் கலிமா உரன் உடைமை முன் இனிதே (நீ செல்லும் குதிரை வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்; அதாவது காரில் செல்லும் முன் அதில் பெட்ரோல், டயரில் காற்று முதலியவற்றை சரி பார்)

 

ஜூன் 10 வெள்ளிக் கிழமை

அங்கண் விசும்பில் அகல்நிலாக்  காண்பு இனிதே (ஆயிரம் பிறை காண்; அதாவது 100 ஆண்டு வாழ்)

 நிலவு, சந்திரன், மூன்

ஜூன் 11 சனிக் கிழமை

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே ( கடன் வாங்கிச் சாப்பிடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 12 ஞாயிற்றுக் கிழமை.

குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே ( பழைய உரைகாரர் எழுதியதை விட்டுவிட்டு, நூல்களுக்கு குதர்க்கமான பொருள் காணாமை இனிது)

 

ஜூன் 13 திங்கட் கிழமை

கிளைஞர் மாட்டு அச்சு இனிமை கேட்டல் இனிதே ( சுற்றத்தார் சுகமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இனிமையானது)

 

ஜூன் 14 செவ்வாய்க் கிழமை

தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே (தன் கையே தனக்குதவி; சோம்பேறித் தனமில்லாமல், மற்றவர்களை ஏவாமல், அவரவர் காரியத்தை அவரவர் செய்தல் இனிது)

 

ஜூன் 15 புதன் கிழமை

குழவி தளர் நடை காண்டல் இனிதே;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (குழவி=குழந்தை)

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (குழந்தைகள் நோயில்லாமல் வாழ வகை செய்ய வேண்டும்; அதுவே இனிது)

குழந்தை சுட்டி

ஜூன் 16 வியாழக் கிழமை

பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது (அயலான் மனைவியை காம எண்ணத்துடன் திரும்பிக்கூட பார்க்காமை இனிது)

 

ஜூன் 17 வெள்ளிக் கிழமை

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே ( நன்கு படித்தவர் அறையில் அமர்ந்து நல்ல விஷயங்களை விவாதி; அப்பொழுது நீ படித்த விஷயங்களைச் சொல்லி, மகிழவைப்பது இனிது)

 

ஜூன் 18 சனிக் கிழமை

நட்டார்க்கு நல்ல செயல் இனிது (நண்பர்களுக்கு நல்ல உதவி செய்)

 

ஜூன் 19 ஞாயிற்றுக் கிழமை.

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே ( தந்திர நூல்களைக் கற்ற தவ முனிவர்கள் பெருமையைப் பேசுவது, காண்பது இனிது)

 

ஜூன் 20 திங்கட் கிழமை

சலவரைச் சாரா விடுதல் இனிதே (வஞ்சகருடன் சேராமல் இருப்பது இனிது)

 

தருமி2

ஜூன் 21 செவ்வாய்க் கிழமை

புலவர்தம் வாய்மொழி  போற்றல் இனிதே (கற்றறிந்தோரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடத்தல் இனிது)

 

ஜூன் 22 புதன் கிழமை

பிறன் கைப்பொருள் வௌவான் வாழ்தல் இனிதே (மற்றவர்களுடைய பொருளைத் திருடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 23 வியாழக் கிழமை

ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே ( வேண்டியவர்க்கு சலுகை காட்டாத நடு நிலை இனிது)

 

ஜூன் 24 வெள்ளிக் கிழமை

 

காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே (மரத்தை வளர்; சோலைகளை உருவாக்கு; குளங்களை உருவாக்கு; கோவில்களில் இவையிருந்தால் அதைப் பாதுகார்)

 சுசீந்திரம் கோவில்குளம்

 

ஜூன் 25 சனிக் கிழமை

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே (இரவு நேரத்தில் துணையில்லாமல் செல்லாதே)

 

ஜூன் 26 ஞாயிற்றுக் கிழமை.

நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பு இனிதே ( உன்னிடம் ஒரு பொருளை நாடி வந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றல் இனிது)

 

ஜூன் 27 திங்கட் கிழமை

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே ( ஒரு காரியத்தைச் செய்ய இயலாதவனிடம் போய், இதைச் செய், இதைச் செய் என்று நச்சரித்து, உன் சக்தியை எல்லாம் வீணடிக்காமல் இருப்பது இனிது)

 

ஜூன் 28 செவ்வாய்க் கிழமை

உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே (உயர்ந்த குறிக்கோளை முன் வை; ஊக்கத்துடன் அதை அடை; உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராப்யவான் நிபோதத)

 

ஜூன் 29 புதன் கிழமை

மன்றம் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே ( பொது மன்றத்தில் ஏறிப் பொய் சாட்சி சொல்லாதே; அ ந்தப் பாவம் உன்னை சும்மா விடாது)

 

ஜூன் 30 வியாழக் கிழமை

பத்துக் கொடுத்தும் பதி இருந்து வாழ்வது இனிதே ( பத்துப் பொருட்களைக் கொடுத்தாவது, சொந்த ஊரில் சுற்றத்தாருடன் வாழ்வதே இனிது).

 

school village

-சுபம்-

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: