Article written by S.NAGARAJAN
Date: 2 June 2016
Post No. 2861
Time uploaded in London :– 5-46 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact swami_48@yahoo.com
பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 3-6-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
அதிசய ‘பாட்ச்’ மலர் மருந்துகள்!
ச.நாகராஜன்
“மலர்கள் எப்போதும் மனிதர்களைச் சிறந்தவர்களாகவும் சந்தோஷமுடையவர்களாகவும் மற்றவருக்கு உதவி புரிவபவராகவும் ஆக்குகின்றன. அவை ஒளி பொருந்தியவை. அவை உணவாக இருக்கின்றன; அவை ஆன்மாவிற்கான மருந்தாகவும் அமைகின்றன” – லூதர் பர்பேங்க்
உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்குவதில் மலர் மருந்துகள் ஒரு தனி இடத்தை வகிக்கின்றன.
இந்த மலர் மருந்துகளைக் கண்டு பிடித்தவர் டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr Edward Batch) என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.
டாக்டர் பாட்ச் (தோற்றம் 24, செப்டம்பர்1886 ; மறைவு 27, நவம்பர் 1936) ஹோமியோபதி மருத்துவத்தில் நிபுணர். பாக்டீரியா இயல் நிபுணரும் கூட.
ஒவ்வொரு மனிதரின் வியாதிக்கும் காரணம் உடல் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல; ஆத்மாவுடனும் சம்பந்தப்பட்டது என்று அவர் நம்பினார். அது மட்டுமின்றி பிரபஞ்சம் முழுவதும அதிர்வுகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் அறிந்து அதற்கேற்ப மருந்து கொடுத்தால் அது பலன் அளிக்கும் என்றும் அவர் நம்பினார்.
இயற்கை தந்துள்ள அரிய பல மலர்களை அவர் ஆராய ஆரம்பித்தார். புலர் காலைப் பொழுதில் மலர்களின் பனித்துளிகளில் இருக்கும் மலரின் சக்தி வாய்ந்த சாரத்தை எடுத்து அவர் பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர் ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.
அதன் விளைவாக 38 வித மலர் மருந்துகளை உள்ளுணர்வினால் கண்டு பிடித்து அவர் தயார் செய்தார். மலர்களின் சாரமான துளிகளை அதற்குச் சம்மான அளவு பிராந்தியுடன் கலந்து தன் கலவையை அவர் முதலில் உருவாக்கினார். பின்னர் அதை மேம்படுத்தி தன் மலர் மருந்தைப் பக்குவப்படுத்தி பூரணமான மருந்தாக்கினார்.
இதில் குறிப்பான ஒரு மருந்தாக ரெஸ்க்யூ ரெமடி என்று ஒரு வகை உருவானது.
திடீரென எதிர்பாராத ஆபத்தில் சிக்கிய ஒருவரின் அதிர்ச்சியுற்ற நிலையை இந்த ரெஸ்க்யூ ரெமடி உடனடியாகப் போக்கும்.
இன்று வரை இது தனது அபூர்வமான் ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
அறிவியல் ரீதியாக இந்த மலர் மருந்துகளின் சக்தியை ஆய்வு செய்த டாக்டர் எர்னஸ்ட் என்பவர் தனக்குக் கிடைத்த முடிவுகளின் படி அப்படி ஒன்றும் இவை சக்தி கொண்டவை அல்ல என்று கூறினார்.
ஆனால் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மலர் மருந்துகளுக்கு சக்தி உண்டு என்று கூறுகின்றன.
குறிப்பாக உணர்ச்சி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இவை உடனடி நிவாரணம் அளிக்கின்றன என்பது ஒரு சுவையான செய்தி.
‘ஃப்ளவர் எஸன்ஸ் சொஸைடி’ நடத்திய ஒரு ஆய்வில் ஆய்வு முடிவுகள் இவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதைத் தெரிவிக்கின்றன! டாக்டர் ஜெஃப்ரி க்ராம் (Dr Jeffrey Cram) என்பவர் நுட்பமான ஆற்றல்களை இந்த மலர் மருந்துகள் உருவாக்குகின்றன என்று கூறியுள்ளார்.
நீருக்கு தகவல்களை ஏந்திச் செல்லும் அரிய தன்மை உண்டு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நீருடன் சக்தி வாய்ந்த மலரின் சாரமும் சேர்ந்து வியாதிகளைக் குணமாக்குகின்றன என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த மலர் மருந்துகள் முப்பத்தெட்டின் விலையும் அதிகம் இல்லை.
இவை ஏழை முதல் பணக்காரர் வரை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் வாங்கிப் பயனடைய முடியும். அத்தோடு இந்த மலர் மருந்துகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதலான செய்தி!
மலர் மருந்துகளைத் தரும் ஒரு வைத்தியரிடம் ஒருவர் சென்றவுடன் அவரிடம் அவருக்குள்ள தொந்தரவு என்ன என்பதை அவர் வாய் மொழி மூலமாகக் கேட்டறியப்படுகிறது. அவரிடமிருந்து வெளி வரும் சொற்களை வைத்து அவரது மனநிலை நன்கு அறியப்பட்டு அதற்குத் தக மலர் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து அக்ரிமனி என்பதாகும்.
பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு மலர் மருத்துவர் உடனடியாகத் தருவது ராக் ரோஸ் என்னும் ம்லர் மருந்து.
தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது செர்ரி ப்ளம்.
காதலில் தோல்வி என்றால் சிக்கரி.
அகம்பாவம், மண்டைக்கனம் போக வைன்.
இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் மிமுலஸ்
போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு வால்நட். தன்னம்பிக்கை கூடுவதற்கு லார்ச். செல்வம் சேர கார்ஸ்.
ஒரு நோயாளிக்குத் தேவையானப்டி மலர் மருந்துகளில் ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கும் மேலாகவோ மருத்துவர் தேர்ந்தெடுத்துத் தருவதும் நடைமுறைப் பழக்கமாக இருந்து வருகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.
கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஒய்ட்செஸ்நட் ம்ற்றும் க்ளிமாடிஸ்.
இப்படி மன நிலைகளுக்குத் தகுந்தபடி மருந்துகள் இதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
பத்தியம் இல்லாத விலை குறைவான மருந்து என்பதால் இதை பரீட்சித்துப் பார்ப்போரின் தொகை இப்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும் மலர் மருந்துக் கடைகள் அதிகமாகி வருகின்றன; மலர் மருத்துவ நிபுணர்களும் பெருகி வருகின்றனர்.
மல்ர் மருந்துகள் இன்றைய உலகில் ஒரு அரிய வரபிரசாதம் என்றால் அது மிகையல்ல!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
1896ஆம் ஆண்டு ஐயோவாவைச் சேர்ந்த ஒருவரால் இசை சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு இசைப் பெட்டி முன் சக்கர போர்க்குகளுடன் இணைக்கப்பட்டிருக்க அது சுற்றும் போது ஒரு பல்சக்கரம் இசைப் பெட்டியை இயக்க வெவ்வேறு விதமான இசை ஒலிகள் எழுப்பப்பட்டன. மக்கள் இதை வியந்து பார்த்தனர்.
இதற்கு வெகு காலம் முன்பே 1824 ஆம் ஆண்டு வின்கெல் (M. Winkel) என்பவர் மெக்கானிகல் இசைப் பெட்டி ஒன்றை வடிவமைத்து அனைவரையும் அசத்தினார். அது தானாகவே இசையை அமைக்கும் என்ற அவர் பத்திரிகையாளர்களையும் விஞ்ஞானிகளையும் அழைத்துப் பரிசோதித்து மதிப்புரை எழுதச் சொன்னார். பிரெஞ்சு அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1824 பிப்ரவரி 2ஆம் தேதி வந்து ஆராய்ந்து பார்த்து மெக்கானிகல் இசைப்பெட்டியின் உள்ளே ஒன்றும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் வெவ்வேறு வித இசை அமைப்புகள் தானாக கம்போஸ் செய்யப்படுகின்றன என்றும் மதிப்புரை தந்தனர். பத்திரிகைகளும் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி எழுதின! இந்த இசைப் பெட்டியின் பெயர் கம்போனியம் (Componium)
அன்றே இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் எழுந்துள்ளன என்பது சுவையான ஒரு செய்தி!
************
You must be logged in to post a comment.