Compiled by London swaminathan
Date: 17 June 2016
Post No. 2902
Time uploaded in London :– 8-35 AM
( Pictures are taken by London swaminathan)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com
வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? உங்கள் நண்பர்களை வெல்லுவது எப்படி? ( How to win friends and Influence People) என்றெல்லாம் நூற்றுக் கணக்கான புத்தகங்களை (Self-Improvement Series) விலைக்கு வாங்குகிறோம். இதையெல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருதத்தில் ரத்தினச் சுருக்கமாக நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். புகுந்த வீட்டுக்குப் போகும் (புக்காத்துக்கு= புகுந்த+ அகத்துக்கு) புதுமணப் பெண்ணுக்கு உலக மஹா கவிஞன் காளிதாசன் சொன்ன அறிவுரைகளை முன்னரே ஒரு கட்டுரையில் தந்தேன். அற்புதமான அறிவுரையை, நாலைந்து ஸ்லோகங்களில் வடித்துக் கொடுத்துவிட்டான். இப்பொழுது வேறு ஒரு கவிஞனின் பாடலைக் காண்போம்:–
கீழ்கண்ட அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்– யார், யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்று பொட்டில் அடித்தது போலச் சொல்கிறது:–
தாக்ஷிண்யம் ஸ்வஜனே, தயா பரிஜனே,சாட்யம் சதா துர்ஜனே, ப்ரீதி: சாது ஜனே, நயோ ந்ருப ஜனே, வித்வத் ஜனே சார்ஜவம்,
சௌர்யம் சத்ருஜனே, க்ஷமா குருஜனே,காந்தாஜனே த்ருஷ்டதா, யேசைவம் புருஷா: கலாசு குசலாஸ்தேப்வேவ லோகஸ்திதி:
தாக்ஷிண்யம் ஸ்வஜனே- நமக்கு நெருக்கமானவரிடத்தில் பரிவும்
தயா பரிஜனே – சுற்றத்தாரிடம் கருணையும்
சாட்யம் சதா துர்ஜனே – கெட்டவரிடத்தில் ஒதுங்கிப்போ கும்போக்கையும்
ப்ரீதி: சஜ் ஜனே – நல்லோரிடத்தில் அன்பையும்
நயோ ந்ருப ஜனே- ஆள்வோரிடத்தில் (அரசாங்கம்) நாசூக்கையும்/ நைச்சியத்தையும்
வித்வத் ஜனே சார்ஜவம்- அறிஞர்களிடத்தில் நேர்மையையும் ( ச+ ஆர்ஜவம்)
சௌர்யம் சத்ருஜனே – விரோதிகளிடத்தில் சூரத்தனத்தையும் (வீரத்தையும்)
க்ஷமா குருஜனே- ஆசிரியர்/குருவிடத்தில் பொறுமையையும்
காந்தாஜனே த்ருஷ்டதா- மனைவி மற்றும் அவளுடைய வட்டத்தில் பற்றையும்
யேசைவம் புருஷா: – எந்த மனிதர்கள் கடைப்பிடித்து
கலாசு குசலாஸ்தேப்வேவ – இந்தக் கலையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களோ
லோகஸ்திதி: – அவர்கள் கையில்தான் உலகம் இருக்கிறது.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் (குறள் 140)
–சுபம்–
You must be logged in to post a comment.